Monday, 18 September 2017

எனது சாதகப்படி திருமணம் எப்படி அமையும் ?

எனது சாதகப்படி  திருமணம் எப்படி அமையும் ?


                                                                           
கிரகங்கள் படுத்தும் பாடு-( 171 )

செவ்வாய்ப்பட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

                                    திருமண வயதில் காத்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் /இளைஞிகள் அனைவருக்கும் தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை பற்றி ஒருவித கற்பனை இருக்கும்.கற்பனையோடு எதிர்பார்ப்புகளுடன் கூடிய வினாக்கள் இருக்கும்.

தனக்கு வரக்கூடிய இணை

1)உறவில் அமையுமா ?அந்நிய உறவில் அமையுமா ?

2)காதல் திருமணமா ?கலப்பு திருமணமா ?

3)அழகானவளா(னா)  ?அழகு குறைந்தவளா(னா)  ?

4)படித்தவளா(னா)  ?
படிக்காதவளா (னா) ?



5 )ஏழையா ? பணக்காரரா ?

6)தூரத்திலா ? பக்கத்திலா ?அந்நிய தேசமா ?

இதுபோன்ற பல வினாக்கள் மனதில் எழுவது நிதர்தனம்.இதற்கான விடை தேடும் முயற்ச்சியில் இப்பதிவினை கொண்டு செல்கிறேன்.

தூரத்திலா ?பக்கத்திலா ?


                                 களத்திர ஸ்தானமான ஏழாம் அதிபதியோ அல்லது களத்திர காரகன் சுக்கிரனோ அமரும் இடத்தினை பொறுத்து (சர,ஸ்திர மற்றும் உபய )திருமணம் நடைபெறும் தூரம் அமைகிறது.

1)  சர ராசியில் நின்றால் (மேஷம்,கடகம்,துலாம்மகரம் ) வெகு தூரத்தில் திருமணம் அமையும்.

2) ஸ்திர ராசியில் நின்றால் (ரிஷபம்,சிம்மம்,விருட்சகம், கும்பம்) உள்ளூரில் திருமணம் அமையும்.

3) உபய ராசியில் நின்றால் (மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்) பக்கத்து ஊரில் திருமணம் நடைபெறும்.

                                                               

உறவிலா ? அந்நிய உறவா ?


                                                   ஏழாம் வீட்டு அதிபதியையோ அல்லது சுக்கிரனையோ சனி,ராகு பார்த்தாலும் அல்லது அதனுடைய நட்சத்திர காலில் நின்றாலும் அந்நிய உறவில் திருமணம் அமையும்.
மாறாக ஏழாம் வீட்டு அதிபதியையும்,சுக்கிரனையையும் குரு,புதன்,சந்திரன் பார்த்தாலும் அல்லது அதனுடைய நட்சத்திர காலில் நின்றாலும் உறவில் திருமணம் அமையும்.

காதல் திருமணமா ? கலப்பு திருமணமா ?

                                              ஒருவரது சாதகத்தில் ஐந்தாம் அதிபதியானது ஏழாம் அதிபதி உடனான தொடர்பு காதல் திருமணத்தை கொடுக்கும்.
களஸ்திரகாரகன் சுக்கிரன் அல்லது காமக்காரகன் செவ்வாய் ஏழாம் இடத்துடனோடோ  அல்லது ஏழாம் அதிபதியுடனோடோ  தொடர்பு கொண்டு செவ்வாய் அல்லது சுக்கிரன் உடன் ராகு ,சனி போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கை படும்பொது காதல் கலப்புமணத்தை தரும்.

                                                       

அழகானவளா? அழகு குறைந்தவளா?

                                        ஒருவரது சாதகத்தில் ஏழாம் இட அதிபதி சந்திரன் பகவானாக இருக்க அழகு வதனமுள்ள மனைவி/கணவன் அமைவான்(ள்).இதேபோல சுப கிரக அதிபதி ஏழாமிட அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அழகுடைய மனைவி அமைவாள்.

                                        மாறாக ஏழமிட அதிபதியானது சனியாக இருந்து இயற்கை சுப கிரகத்தின் பார்வை படாதபோது அழகு குறைந்த மனைவி அமைவாள்.

கற்ற மனைவியா ?


                                      ஏழாம் இட அதிபதி பலம்பெற்று ஏழாமிடத்திற்கு இரண்டு,நான்கு மற்றும் ஐந்தாமிட அதிபதி பலமடைந்து நிற்க கற்ற மனைவி அமைவாள். மாறாக மேற்கண்ட இடமும் அதன் அதிபதிகளும் பலவீனப்பட படிக்காத மனைவி அமைவாள்.


பணக்காரரா அல்லது ஏழையா ?

                               ஏழாம் இட அதியும்,களத்திர காரகர் சுக்கிரன் ஆகிய இரண்டும் உச்சம் ,ஆட்சி போன்ற வலுப்பெற்று லாபாதிபதி தொடர்புபெற்று இருப்பின் பணக்கார மனைவி அமைவாள்.

                             மாறாக ஏழாம் இட அதிபதியும்,சுக்கிர பகவானும் பலவீனப்பட ஏழை வீட்டில் பிறந்த பெண் மனைவியாக அமைவாள்.

                                                                       

அரசாங்க வேலை பார்ப்பவளா ?


                            ஏழாம் இட அதிபதி பலமடைந்து சூரிய பகவான் உடன் சேர்க்கை பெற அரசு வேலை பார்க்கும் மனைவி அமைவாள்.


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

தொடர்புக்கு
  வாட்ஸ்அப் எண்
  97 151 89 647
  செல்
740 257 08 99
  97 151 89 647.



அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc,MA,BEd
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
.
My email
masterastroravi@gmail. com
astroravichandransevvai@gmail.com
My website
AstroRavichandransevvai.blogspot.com
-------------------------------------------------------------------

No comments: