Wednesday, 20 September 2017

சுக்கிரன் பகவான் தரும் யோக பலன்கள்.

சுக்கிரன பகவான் தரும் யோகபலன்கள்.-(1)


                                     


#கிரகங்கள் படுத்தும் பாடு- ( 115 )

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                        மனித வாழ்வில் கிரகங்களின் கதிர்வீச்சின் தாக்கம் அளப்பறியது.சாதரன மனிதர்களை சரித்திரம் போற்றும் மனிதர்களாக மாற்றும் பங்கு கிரகங்களுக்கு உண்டு.

                        ஒரு மனிதன் சகல ஆடம்பர வசதிகளோடு வாழ சுக்கிரபகவானின் அருள் தேவை.அனைத்து ஆடம்பரபொருட்களை பயன்படுத்தவும் ,வாங்கி சேர்க்கவும் சுக்கிரபகவானின் கருனை அவசியமானது.

                      சிலர் அழகியல் பொருட்களை அதிக நாட்டத்தோடு பயன்படுத்தவும்,தான் பிறரால் கவரப்படும் அளவிற்கு உடையலங்காரம்,சிகையலங்காரம் போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கும்,தன்னை பிறரிடம் கவர்ச்சிகரமாக காட்டி பிறர் கவரும்படியாக நடந்துகொள்வதற்கும் சுங்கனின் அருள் தேவை.

               சிலர் விதவிதமாக வண்டி மற்றும் வாகனங்களை வாங்கவும் மற்றும் பயன்படுத்தவும் இவரின் கடாட்சம் அவசியமாகும்.பஸ்,வேன் மற்றும் லாரி முதலாளியாவதற்கும் மற்றும் இவைகளை இயக்கும் ஓட்டுனராகவும் சுக்கிரபகவானின் கடைக்கண் பார்வை அவசியமாகும்.

                             
சிலர் கவர்சியாக பேசவும் ,உடையணியவும் மற்றும் காமகளியாட்டங்களில் ஈடுபடவும்  சுக்கிர பகவானின் அருள் அவசியமாகும்.

             சிலர் கலைகளில் நாட்டம் கொள்வதற்கு இச்சிற்றின்ப நாயகனின் உதவி தேவை.ஆயகலைகள் அறுபத்து நான்கினில் ஈடுபடவும்,அதில் வித்வான் ஆவதற்கும் மற்றும் ஓவியம்,இசை,நடிப்பு ,நடனம் மற்றும் கைவேலைப்பாடு போன்றவற்றில் இயற்கையாகவே ஆர்வமும் மற்றும் நாட்டமும் ஈடுபட புகார்கோளின் அருள் கடாட்ஷம் அவசியமாகும்.

             சிலர் இளவயதிலே காதல்வயப்படுவதற்கும் மற்றும் தரம் தாழ்ந்த பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகள் உருவாதலுக்கு மழைக்கோளின் தூண்டுதலே காரணமாகும்.

                          சிலர் சிலை வடிக்கும் சிற்பிகளாகவும்,பாடல்கள் புணையும் பாவலனாகவும் மற்றும் காமம் ததும்பும் பாடல்கள்,ஓவியம் மற்றும் கவிதைகள் புணைபவராகவும் திகழ இப்பகவானே முழுகாரணமாகும்.

          மனைவிக்கும் மற்றும் மனையால் குடியிருக்கும் வீட்டிற்கும்,கலைகளுக்கும்,வண்டி வாகனங்களுக்கும் மற்றும் காமத்திற்கும் அவை தொடர்பான பாலியியல் பிரச்சினைகளுக்கும் ,நோய்களுக்கும் #காரகர் சுக்கிரபகவானே ஆவார்.

                          
                     சில பெண்கள் ஆபரண பொருட்களின் மீது அதிக நாட்டம் காட்டுவதற்கும் இவரே காரணகர்த்தா.தங்கநகைகள்,விதவிதமான பிளாஷ்டிக் பொருட்களான பேன்ஸி பொருட்கள் மற்றும் முகப்பூச்சுகள் பயன்படுத்தவும் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடவும் சுக்கிரபகவானேயாகும்.

             சிலர் விதவிதமாக சமைக்கும் சமையல்கலை வல்லுனராவதற்கும்,விதவிதமான உணவு பதார்த்தங்களை ரசித்து மற்றும் ருசித்து சாப்பிடுவதற்கும்,இவை சார்ந்த படிப்பான ஹேட்டரிங் டெக்னாலஜி படிப்பதற்கும் ,உணவு விடுதிகள் மற்றும் புகழ்பெற்ற ஸ்டார் அந்தஸ்து பெற்ற உணவகங்கள் நடத்தும் முதலாளியவற்கும் சுக்கிரனின் அருள் அவசியமாகும்.

                 ஒரு சிலர் அதிர்ஷ்டதத்தை நம்புவதற்கும் ,லாட்டரி,ரேஸ் மற்றும் சீட்டட்டங்களில் ஈடுபட்டு முன்னேறவும் ,சிலர் ஆட்டத்தில் எல்லா சொத்தையும் இழந்து வீதிக்கு வரவும் மற்றும் இத்தொழிலை செய்யும் முதலாளியாவதற்கும் வாகனகாரகனே காரணம் ஆகும்.

                 சிலர் வட்டிக்கு வாங்கி ஆடம்பரசெலவு செய்து கடன்காரராகுவதற்கும்,வட்டி மற்றும் பைனான்ஸ் செய்து அதிக முதல் ஈட்டுவதற்கும் இவரே காரகம் ஆகும்.
சிலர் சினிமா துறையில் கலைதொழிலில் ஈடுபட்டு சிறந்த நட்சத்திரங்களாக ஜொலிப்பதற்கும் மற்றும் சினிமா தயாரிப்பாளர் மற்றும் சினிமா தியேட்டர் முதலாளயாவதற்கு சுக்கிரபகவானன் அருள தேவை.

                  சிலர் தங்க ஆபரணங்களை வாங்கி சேர்க்கவும்,நகைகடை முதலாளியாவதற்கும் மற்றும் நகைகளை அச்சில் வார்க்கும் பொற்கொல்லனாவதற்கும் இவரே காரணமாகும்.

சுக்கிரனின் அகம் சார்ந்த காரகங்கள்;-
                அழகியல்,கவர்ச்சி,நடை,உடை,பாவனை,நளினம்,தற்புகழ்ச்சி மற்றும் ஆண்,பெண் உறவுநிலைகள் முதலியனவாகும்.

சுக்கிரனின் புறம் சார்ந்த காரகங்கள்:-

          பொன் ஆபரணங்கள்,அழகு பொருட்கள்,பிளாஷ்டிக்பொருட்கள, இயக்குனர்கள் மற்றும் ஆபாசமையங்கள் முதலியனவாகும்.
தொடர்ந்து அடுத்த பதிவுகளில் மேலும் பல விவரங்களை அலசி ஆராய்வோம்

(அன்பானவர்களே தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தங்கள்,பரிகாரபலன்கள் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற பலசேவைகளை கட்டண அடிப்படையில் #போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பலன் பெறலாம்.
நீங்கள் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடத்தை மாவட்டத்துடன் எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

தொடர்புகொள்ள

   செல்
97 151 89 647
740 257 08 99

  வாட்ஸ்அப்
97 151 89 647

                           
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை  வேதியியல் ஆசிரியர்,
வாழவியல் ஆலோசகர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.

My email
masterastroravi@gmail. com
astroravichandransevvai@gmail.com

My website
AstroRavichandransevvai.blogspot.com
.......................................................,.....................

No comments: