Monday 25 March 2024

 நல்ல பலனை விட கெடு பலனை அள்ளித் தரும் ராகு பகவான்.

             


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் நிழல் கிரகங்களில் கேது பகவானை விட ராகு பகவான் அதிக பாவத்துவ தன்மை படைத்தது ஆகும்.ராகு பகவானை போல கேது பகவான் அதிக கெடு பலனை தந்து விடுவதில்லை.


   ராகு பகவான் தன்னுடன் இணைந்த கிரகங்களை பாதிப்படைய செய்கிறது.இயற்கை சுப கிரகமாக இருந்தால் தான் சுப தன்மையை அடைந்து தன்னுடன் இணைந்த கிரகங்களை பாவ நிலையை அடைய வைக்கிறது.


 ராகு பகவான் உடன் எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து உள்ள கிரகங்கள் கூடுதலான பாவ தன்மையை அடைந்து அதன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை கொடுக்கிறது.ஆனால் இயற்கை சுப கிரகத்துடன் இணைந்த ராகு பகவான் தான் சுப தன்மையை அடைந்து தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போலவும், தன்னுடன் சேர்த்து உள்ள மற்றும் பார்வை செய்யும் கிரகங்கள் ஆகிய அனைத்தின் பலனையும் கலப்பாக தருகிறது.


 ராகு உடன் இணைந்து உள்ள கிரகம் பன்னிரெண்டு பாகை எனில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே தன்னுடன் இணைந்த கிரகத்தை பாதிப்பு அடைய செய்கிறது.

ராகு பகவான் உடன் இணைந்த கிரகமானது இருபத்திரெண்டு பாகைக்கு மேலாக இருப்பின் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை என கொள்ளலாம்.ஒருவரை ஒருவர் பாதிக்காமல் அவரவர் சுய தன்மை உடன் செயல்படுவார்கள்.


 ராகு பகவான் உடன் இணைந்த சுப கிரகங்கள் பாவ தன்மையை அடைந்து விடுவதால் அதன் தசைகளில் கெடு பலனை கொடுக்கும்.ஆனால் ராகு தசை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


    ராகு உடன் பாவ கிரகங்கள் இணைந்த நிலையில் டிகிரி அடிப்படையில் உள்ள தூரம் அடிப்படையில் இரண்டு தசைகளும் ஜாதகருக்கு கெடு பலனையே கொடுக்கும் அமைப்பை பெறுகிறது.


    கேது பகவான் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனை அதிகரித்து தரும்.கேது பகவான் உடன் பாவ கிரகங்கள் ஆன சனி மற்றும் செவ்வாய் தனியாக இணைகின்ற நிலையில் சூட்சும வலுவை தருகிறது.


    ஆனால் ராகு பகவான் பகவான் இயற்கை பாவ கிரகங்கள் உடன் இணையும் போது கூடுதலான பாவ தன்மையை அடைந்து அதன் தசை காலங்களில் கடுமையான இன்னல்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.


     அதிலும் குறிப்பாக சனி மற்றும் செவ்வாய் பகவான் உடன் இணையும் போது கடுமையான கெடு பலனை இருக்கும் இடத்திற்கும் மற்றும் பார்வை செய்யும் இடத்திற்கும் செய்கிறது.


 ஒருவர் அமாவாசையில் சூரிய கிரகணம் அன்று பிறந்தால் சூரியன், சந்திரன் மற்றும் ராகு பகவான் இணைந்த நிலையில் சனி பகவான் இந்த அமைப்பை பார்வை செய்த நிலையில் சூரியன் மற்றும் சந்திரன் பகவான் ராகு சேர்க்கையால் கிரகண தோஷம் அடைந்து கூடுதலான பாவ தன்மையை அடைந்து விடுகிறது.இவ்வாறு கூடுதலான பாவ தன்மையை அடைந்து உள்ள இந்த அமைப்பை சனியும் பார்க்கும் போது "கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன அங்கே இரண்டு கொடுமை  சிங்கு சிங்குன்னு ஆடினா எப்படி இருக்கும் " என்றபடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத தொந்தரவுகளை ஜாதகர் அனுபவிப்பார்.


இந்த நிலையில் சூரியன் தசை அல்லது சந்திரன் தசை நடப்பில் இருக்கும் காலங்களில் தாய் தந்தையரை பாதிக்க கூடிய நிலை உருவாகிறது.இதனை உறுதி செய்ய தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம் அதன் அதிபதி, தாய் ஸ்தானமான நான்காம் இடம் அதன் அதிபதி ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.


 தேய்பிறை சந்திரன் ஒரு ஸ்தானத்தில் இருந்தாலும்,பார்த்தாலும் நல்ல பலனைத் தருவதில்லை.


 தேய்பிறை சந்திரன் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் உடன் சேரும் போது சந்திரன் கூடுதலான பாவ தன்மையை அடைகிறது.இவ்வாறு பாவ தன்மையை அடைந்து உள்ள சந்திரன் மனநிலையில் பாதிப்பை உண்டாக்குகிறது.சந்திரன் பகவான் மாதுர்காரகன் என்பதால் தாயை பாதிப்படைய செய்கிறது.


 ஒருவர் ஜாதகத்தில் சனி மற்றும் செவ்வாய் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


சிலரது ஜாதகத்தில்  செவ்வாய் இருக்கும் இடத்திற்கு நான்காம் இடத்தில் சனி பகவான் இருந்தால் செவ்வாய் தனது நான்காம் பார்வையால் சனியை பார்க்க இதேபோல சனி தனது பத்தாவது பார்வையால் செவ்வாய் பகவானை‌ பார்வை செய்யும் அமைப்பை பெற்றவர்கள் சனி மற்றும் செவ்வாய் பகவானுக்கு ஏதாவது சுப கிரக பார்வை கிடைக்காத நிலையில் சனி, செவ்வாய் இருக்கும் இடம் மற்றும் பார்வை செய்யும் இடமும் மற்றும் கிரகமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது.


 மேற்கண்ட இந்த அமைப்பில் செவ்வாய் உடனோ அல்லது சனி உடனோ ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் இணைந்த அமைப்பை பெற்றவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.இது போன்ற அமைப்பை தனது ஜாதகத்தில் கொண்டு அதற்கு உரிய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றவர்கள் துர் பாக்கியசாலிகள் ஆவார்.


   பெரும்பாலான ஜாதகருக்கு திருமணம் முப்பத்தைந்து வயது வரை திருமணம் நடைபெறாத நிலை அல்லது திருமணம் நடந்து அவர்களுக்குள் பிரச்சினை மற்றும் பிரிவுகள் போன்ற நிலைகளில் உள்ளவர்கள் ஜாதகம் மேற்கண்ட அமைப்பை தனது ஜாதகத்தில் பெற்று இருப்பார்கள்.


 உதாரணமாக மிதுனம் லக்கனம் மற்றும் மீன் ராசி லக்கனத்திற்கு  நான்காம் இடத்தில் செவ்வாய், ராகு இணைந்த நிலையில் இருந்து ஏழாம் இடத்தில் சனி பகவான் மற்றும் மீன ராசியில் தேய்பிறை சந்திரன் கேது இணைந்த அமைப்பை பெற்றவர்கள் ஜாதகம்.


 இங்கு லக்கனத்திற்கு ஏழாம் இடத்தில் சனி அமர்ந்து உள்ளது. பாவ கிரகமான செவ்வாய் பகவான் பாவ கிரகமான சனி பகவானின் பத்தாம் பார்வையை பெற்று ராகு உடன் இணைந்து தேய்பிறை சந்திரன் சம சப்தம பார்வையை பெற்று கூடுதலான பாவத்துவ நிலையில் ஏழாம் இடத்தில் உள்ள சனியை பார்வை செய்து ஏழாம் இடத்தை பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறது.


  லக்கனத்திற்கு இரண்டாம் இடம் சந்திரன் தேய்பிறை சந்திரன் ஆகி சனி+ராகு சேர்க்கை மற்றும் பார்வை தொடர்பை பெற்ற பாவத்துவமான செவ்வாய் சம சப்தம பார்வை பெற்று உள்ளது.ஆக குடும்ப அதிபதி கெட்டு விட்டார்.


  ராசிக்கு இரண்டாம் இட அதிபதி செவ்வாய் ராகு மற்றும் சனி தொடர்பை பெற்று கூடுதல் பாவ நிலை அடைந்து விடுகிறது. ராசிக்கு ஏழாம் இடத்தில் 

செவ்வாய் ராகு சேர்க்கை பெற்ற நிலையில் சனியின் பத்தாம் பார்வை 


   இப்படியாக 1,2,7,8 ஆம் இடம் பாவ தன்மையை அடைந்து விடுகிறது.இன்னும் புத்திர காரகன் குரு மற்றும் களத்திரகாரகர் சுக்கிரன் நிலையையும் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் மேற்கண்ட  ஜாதகம் ஒரு உதாரண விளக்கம் தரும் ஜாதகம் மட்டுமே ஆகும்.


நன்றி.

வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்; 7402570899

E-mail masterastroravi@gmail.com

   (தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


            


அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: