Tuesday 26 March 2024

கிரகங்கள் காட்டும் மாறுபட்ட பலன்கள்

 கிரகங்கள் காட்டும்  மாறுபட்ட பலன்கள்.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தில் என்ன கிரகம் நிற்கின்றது ? லக்கனாதிபதி யார்? அவர் எங்கு இருக்கிறார்.லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக உள்ளதா ?அல்லது இயற்கை பாவ கிரகமாக உள்ளதா?என்பதை எல்லாம் ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.


  ஒருவருக்கு யோக தசையே நடப்பில் இருந்தாலும் அந்த யோக தசையின் முழுமையான பலன்களை நீங்கள் அனுபவிக்க லக்கனாதிபதி வலிமை அடைந்து இருக்க வேண்டும்.


 லக்கனம் அல்லது லக்கனாதிபதி பாவ கிரக தொடர்பு பெற்ற நிலையில் நடப்பு தசையின் முழுமையான யோக பலன்களை முழுமையாக அனுபவிக்க இயலாது போய்விடும்.


    லக்கனத்தில் இயற்கை சுப கிரகம் இருந்தாலும் அல்லது லக்கனத்தை சுப கிரகம் பார்வை செய்தாலும் அல்லது லக்கனாதிபதியை  இயற்கை சுப கிரகம் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்புகளை பெற்று இருந்தாலும் லக்கன பாவகம் வலிமை பெற்றதாக கருதப்படுகிறது.


லக்கனம் மற்றும் அதன் அதிபதி வலுப்பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் நடப்பு தசை யோக தசையாக இருந்தால் அந்த யோகம் முழுவதும் அனுபவிக்க கூடிய தன்மையை பெற்றவராக ஜாதகர் விளங்குவார்.


அதுவே அவ யோக தசையாக இருந்தால் அந்த கஷ்டங்களை தாங்கி எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற கூடிய உறுதியான மனநிலையினை நிரம்ப பெற்றவராக இருப்பார்.


 உதாரணமாக  என்னிடம் ஜாதக பலன் பெற்ற ஒரு நபரின் ஜாதகத்தில்

கடக லக்னம் லக்கனாதிபதி சந்திரன் உச்சம் பெற்று லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருந்தாலும் லக்கனாதிபதி உடன் அதாவது ராசியில் ராகு நின்று துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் பெற்ற நிலையில் இருந்து தனது பத்தாவது பார்வையால் லக்கனத்தை பார்த்து பாவத்துவம் அடைய வைத்துள்ளது.


 இது போன்ற லக்கனம் மற்றும் அதன் அதிபதி பாவ தன்மை அடைந்த நிலையில் கடக லக்கனத்திற்கு வந்த ஆறு மற்றும் ஒன்பதாம் இட அதிபதி குரு பகவான் தசை லக்கன யோக தசையாக இருந்த பொழுதும் ஜாதகருக்கு கடனை தந்ததே தவிர ஜாதகருக்கு யோகத்தை தரவில்லை.


எனவே இவருக்கு யோக திசையே நடப்பில் இருந்தாலும் லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் அந்த யோகத்தை ஜாதகரால் அனுபவிக்க முடியவில்லை. எனவே ஒருவர் யோகத்தை அனுபவிக்க யோக தசை நடந்தால் மட்டும் போதாது லக்கனாதிபதி உடைய வலிமையும் அவசியம் ஆகும் .லக்கனாதிபதி வலிமை பெற்ற நிலையில் அவ யோக தசையே நடப்பில் வந்தாலும் அதனை தாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் போடக்கூடிய அமைப்பு சாதகரிடம் காணப்படும்.


  சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு ஒளி  கிரகங்களுக்கு சிம்மம் மற்றும் கடகம் ஆகிய ஒரே ஒரு வீட்டையே தன் சொந்த வீடாக உள்ளது.  ஏனைய கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், புதன்,குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் அனைத்தும் இரண்டு வீட்டை சொந்த வீடாக கொண்டுள்ளது. எனவே இரு ஆதிபத்தியங்களை ஒரு கிரகங்கள் பெற்றிருக்கிறது .லக்கினத்தை பொறுத்து இரு ஆதிபத்திய பெற்ற கிரகங்கள் அதன் தசையில் அந்த கிரகம் எந்த வீட்டோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ளது என்பதை பொறுத்து பலனை தருகிறது.


 உதாரணமாக மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் மூன்று மற்றும்  ஆறு ஆகிய இரண்டு அவ யோக ஆதிபத்தியத்தை பெற்ற கிரகமாக உள்ளது. மேலும் லக்னத்திற்கு பகைத்தன்மை பெற்ற கிரகமும் புதன் பகவான் ஆகும்.

இவ்வாறு இரண்டு ஆதிபத்தியமும் அவயோக அமைப்பில் உள்ள கிரகம் அதன் தசையில் நல்ல பலனை தர வேண்டும் என்றால் புதன் பகவான் ஆறுக்கு எட்டாம் இடமான லக்னத்தில் அமர்ந்து இருந்தால் அவை ஆறாம் இடத்து பலனை தருவதற்கு பதிலாக மூன்றாம் இடமான கீர்த்தி, புகழ் ,அந்தஸ்து பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.


கடக லக்கினத்திற்கு குரு பகவான் லக்கன யோகராகவும் உள்ளார். இவை ஆறு மற்றும் ஒன்பது இட ஆதிபத்தியத்தை பெற்றுள்ளது குருபகவான் ஆறாம் இடத்தில் இருப்பதை விட ஒன்பதாம் இடத்தில் இருந்து ஆட்சி பெற்ற நிலையில் அவை திரிகோண ஸ்தானத்தில்  இருந்து லக்னத்தை பார்க்கும் என்பதால் அந்த மாதிரியான அமைப்பில் உள்ள குரு பகவான் ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை கொடுப்பார். ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அதன் தசை நடக்கும் பொழுது பாக்கியஸ்தானாதிபதி  ஆன யோக பலனை தருவதற்கு பதிலாக அதிகமாக ஆறாம் இட பலன் ஆன வம்பு சண்டை ,வழக்கு ,கடன், பிணி  மற்றும் எதிர்ப்பு போன்ற பலனை அதிகமாக தரக்கூடும்.


     சில லக்கனங்களுக்கு  ஒரு கிரகமானது  கேந்திர மற்றும் கோண அதிபதிகளாக வரும். அவை லக்கின யோகராகவும் இருக்கும் .

இவ்வாறு கேந்திர, கோண அதிபதிகளாகவும் லக்கன யோகராகவும் உள்ள கிரகங்கள் அந்த ஸ்தானத்திற்கு கேந்திரங்களிலோ அல்லது கோணங்களிலோ இருந்தால் அவை அந்த ஜாதகருக்கு யோகத்தை மிகுந்து கொடுக்கும் .மாறாக கேந்திர கோண அதிபதிகள் எந்த ஸ்தானத்திற்கு மறைவிடத்தில் இருக்கிறதோ அந்த ஸ்தான ஆதிபத்திய பலனை அதன் தசையில் அதிகமாக தராது.


 அதாவது  கேந்திர மற்றும் கோண இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள்     இரு ஆதிபத்தியத்தில் எந்த ஸ்தானத்துக்கு மறைவிடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து அதன் பலன் தரும் மறைவிடத்தில் இருக்கிறதை விட கேந்திர குணங்கள் உள்ள இருக்கக்கூடிய கிரகங்கள் தான் மிகுந்த பலவானாகும்.அதன் தசையில் அந்த ஸ்தான ஆதிபத்திய பலனை ஜாதகருக்கு அதிகமாக கொடுக்கும்.


  உதாரணமாக மகர லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்ன யோகர் ஆவார் .இவர் ஐந்து  மற்றும் பத்து ஆகிய இரு கேந்திர மற்றும் கோண ஆதிபத்தம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளது.


மகர லக்னத்திற்கு சுக்கிர பகவான் மீன வீட்டில் உச்சம் பெற்று நின்ற நிலையில் பத்தாம் இடமான கேந்திர ஸ்தானத்திற்கு மறைவிடத்தில் நின்று திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு லாப ஸ்தானத்தில் நிற்கும் போது சுக்கிரன் பகவான் கேந்திர பலனை விட திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இட பலனை அதிகமாக கொடுப்பார்.


அதேநேரத்தில் சுக்கிரன் பகவான் பத்தாம் இடமான துலாத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அந்த சுக்கிர பகவான் ஐந்தாம் இடத்திற்கு மறைவிட ஸ்தலமான பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று நின்ற நிலையில் கோண ஸ்தானமான ஐந்தாம் இட பலனை விட கேந்திர ஸ்தனமான பத்தாம் இடத்தின் பலனையே அதிகமாக சாதகருக்கு கொடுப்பார்.


ஜோதிட நுணுக்கங்கள் தொடரும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே 

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

       



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்), கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: