Tuesday 26 March 2024

ஹம்ச யோகத்தை தரும் குரு பகவான்

 ஹம்ச யோகத்தை தரும் குரு பகவான்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜோதிடத்தில் குரு பகவானுக்கு என்று தனி இடம் உண்டு.எவ்வளவு மோசமான,பாவத்துவமான மற்றும் பலவீனமான கிரகத்தையோ அல்லது ஸ்தானத்தையோ குரு பகவானின் பார்வை அல்லது சேர்க்கை சரி செய்து விடுகிறது.


"‌குரு பார்த்தால் கோடி நன்மை "என்று இதன் புகழ் பாடுவார்கள்.எல்லா கிரகத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு என்றாலும் குரு பகவான் ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்களை சிறப்பு பார்வையாக பார்வை செய்கிறது.


 குரு பகவான் சேர்ந்து இருக்கும் கிரகம் அல்லது ஸ்தானத்தை விட பார்வை செய்யும் இடத்தையும் அல்லது கிரகத்தையும் கூடுதலாக சுப தன்மை மற்றும் வலிமை அடைய வைக்கிறது.


 குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்திற்கு கேந்திர அல்லது கோணங்களில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் வலுப்பெற்று நின்றால் "ஹம்ச யோகத்தை"தருகிறது.


 குரு பகவான் கேந்திரத்தில் தன் சொந்த வீடுகளில் லக்கனத்தை தவிர ஏனைய வீடுகளில் நின்ற நிலையில் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருவார் என்பதையும் தெரிந்து கொண்டு பலன் சொல்ல பழக வேண்டும்.


 உதாரணமாக மிதுனம் லக்கனத்திற்கு ஏழாம் இடத்தில் ஆட்சி மற்றும் திரிகோண நிலையில் வலுப்பெற்று ஹம்ச யோகத்தை சிறப்பாக தரும் நிலையில் இருந்தாலும் கேந்திர ஆதிபத்திய தோஷமானது பலனை முழுமையாக தர விடாமல் செய்து விடுகிறது.பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையிலும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருகிறது.


 கன்னி லக்கனத்திற்கு நான்கு மற்றும் ஏழாம் இடத்திலும் கேந்திர ஆதிபத்திய தோஷத்தை தருகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான்  வலுப்பெற்று நிற்கும் போது பணம் ,பதவி, பட்டம், புகழ் ,கல்வி, ஞானம் மற்றும்  குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்களை சாதகருக்கு அள்ளிக் கொடுக்கும் தன்மை படைத்ததனால் அதாவது நல்ல அம்சத்தை சாதகருக்த்கு வழங்கக்கூடிய யோகம்தான் "ஹம்ச யோகம்" என்று அழைக்கப்படுகிறது.


 குரு பகவான் ஒருவரை போதகராக மாற்றி அழகு பார்க்க கூடிய அமைப்பு ஆகும்.ஒருவர் ஜாதகத்தில் லக்கனம் , ராசி மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றை குரு பார்வை செய்யும் அமைப்பை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்.


 குரு பகவான் தான் ஒரு மனிதன் இறந்த பிறகு தன் பெயரை சொல்லும் வாரிசை விட்டு செல்லும் யோகத்தை ஜாதகருக்கு வழங்க கூடியவர் ஆவார்.


 ஒருவர் ஜாதகத்தில் திருமண யோகம் அமைய குரு நோக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,9 ஆம் இடத்தில் வரும் போது வியாழன் நோக்கம் உள்ளது என்று அர்த்தம் ஆகும்.


 குரு பகவான் முழுமையான பலனை தர வேண்டுமாயின் அவை எவ்விதத்திலும் பாதிப்பு அடைய கூடாது.சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து அல்லது தனி தனியாக பார்வை அல்லது சேர்க்கை செய்யும் அமைப்பை பெற்றவர்கள் அல்லது குரு பகவான் உடன் ராகு எட்டு பாகைக்குள் நெருக்கமாக இணைந்து இருக்கும் அமைப்பை பெற்றவர்கள் பாவத்துவமான குரு பகவான் ஆகும்.இந்த நிலையில் குரு பகவானின் பார்வை பலம் முழு பலத்தை ஜாதகருக்கு கொடுக்காது.


 குரு பகவான் தன் காரகன் என்பதால் எவ்விதமான பங்கம் அடையாத குரு பகவான் தன-பாக்கிய-லாப ஸ்தானமான 2,9,11 ஆம் இடங்கள் மற்றும் அதன் அதிபதிகள் உடன் தொடர்பு கொள்ள மிகப் பெரிய தன் யோகம் என்னும் கோடீஸ்வர யோகத்தை ஜாதகருக்கு வாரி வழங்ககூடியவர் ஆவார்.


 குருபகவான் மட்டுமே சர ,ஸ்திர மற்றும் உபய ராசிகளை  பார்க்கக்கூடிய ஒரே கிரகம் ஆகும்.குரு பகவான் தன  யோகத்தை அள்ளித் தரும் கிரகம் ஆகும்.நீதி, நியாயம் மற்றும் நேர்மைக்கும் கட்டுப்படும் கிரகம் ஆகும்.


 குரு பகவான் ராசி மற்றும் லக்கனத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் நேரிய வழியில் பாதை தவறாது மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வைக்கும் கிரகம் ஆகும்.


ஒருவர் நீதி , வங்கி, பொருளாதாரம் போன்ற துறைகளில் நேர்மையாக சம்பாதித்து பொருள் ஈட்ட வைப்பவர் ஆவார்.


 குருபகவான் நீதி வழங்கக் கூடியவராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் ஆலோசனை வழங்கக்கூடிய மந்திரியாகவும் மற்றும் மற்றவர்களுக்கு போதிக்கும் சாஸ்திர விற்பன்னர், பட்டி மன்ற பேச்சாளர்,பிரசங்கம் செய்பவர் ,வாக்கை கற்று கொடுக்கும் ஆசிரியர் இப்படி white colour job  என அழைக்கப்படும் எந்த துறையில் ஈடுபட்டாலும் தனக்கென ஒரு பாணியை வைத்து கொண்டு சிறப்பாக செயல்பட கூடியவராக சமூக அந்தஸ்தை பெற்றவராக இருப்பார். 

 

   குரு பகவான் லக்கனத்துடன் தொடர்பு கொள்ள நல்ல தேஜஸ்  உடையவராக மற்றவர்கள் பார்த்து மதிக்க கூடிய முகத்தை  கொண்டவராக இருப்பார்கள்.


 பக்தி மார்க்கத்தில் ஈடுபட கூடியவராக இருப்பார்.குரு ,சனி மற்றும் கேது சேர்க்கை ஆன்மீக வழிகளில் தனது வாழ்க்கை பாதை அமையும்.


 குருபகவான் ஒருவருக்கு ஆடம்பரமான வீடு ,அந்தஸ்து ,பொருளாதார நெருக்கடி இல்லாத நிலை சமூகத்தில் அந்தஸ்தோடு விளங்குதல் நாலு பேர் நம்மை மதிக்கக் கூடிய நிலையில் மனிதனை உயர்த்தி செல்லக்கூடிய கிரகமாக இந்த குரு பகவான் அமைகிறது.

  குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன், சந்திரன், செவ்வாய் உடன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள மிகுந்த யோகத்தை சாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது. குரு பகவான் தனது எதிரணியைச் சேர்ந்த சுக்கிரன், சனி மற்றும் புதனுடன் சேரும்பொழுது குருபகவான் தனது பலத்தை இழக்கிறது


 குரு பகவான் உபய லக்கனங்களுக்கு (மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம்) ஹம்ச யோகம் லக்கனத்தை தவிர ஏனைய கேந்திர சொந்த வீடுகளில் கேந்திரா திபெத்திய தோஷத்தை அடைவதால் ஹம்ச யோகத்தை சிறப்பாக தர இயலாது.


ஸ்திர லக்கனத்திற்கு (ரிஷபம், சிம்மம் விருச்சிகம், கும்பம்) கேந்திரத்தில் குரு உச்சம் மற்றும் ஆட்சி அடைய வாய்ப்பு இல்லை என்பதால் ஹம்ச யோகம் செயல்படுவது கிடையாது.


 குரு பகவான் சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் கேது   உடன் குரு பகவான் இணைவு அல்லது பார்வை சில ராஜ யோகம்,குரு சந்திரன் யோகம்,குரு-மங்கள யோகம், கேது உடன் இணைவு கேள் யோகம் போன்ற யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


 நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

         



அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.SC,M.A,BEd (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: