Tuesday 26 March 2024

கோள்களின் அரசன் சூரியன்

 கோள்களின் அரசன் சூரியன் .




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  சூரிய பகவான் ஒளி கிரகமாகும். எல்லா கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. சூரியனே "கோள்களின் அரசன்" அழைக்கப்படுகிறது, ஆத்மா காரகன் என்றும் போற்றப்படுகிறது. வெளிநாடுகளில் சூரியன் இருக்கக்கூடிய வீட்டையே லக்ணமாகக் கொண்டு பலன் எடுக்கிறார்கள். சாதகத்தில் விதி ,மதி என்று லக்கனம் மற்றும் ராசி வழியாக பார்க்கக்கூடிய இரண்டும் கெட்டுப் போனால் கதி என்று அழைக்கப்படக்கூடிய சூரியனை லக்கினணமாகக் கொண்டு பலன் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 


   தலைமையேற்று நடத்தக்கூடிய தன்மைக்கும் மற்றும் தன்னம்பிக்கைக்கும் சூரிய பகவானின் வலிமையை பொறுத்து அமைகிறது.

சூரிய பகவான் ஒரு ராசியில் ஒரு மாத காலம் தங்குவார் இவ்வாறாக மேஷ வீட்டில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் மீனம் வீட்டை வந்து அடைகிறது. சூரியன் இருக்கக்கூடிய வீட்டை கொண்டு ஜாதகர் எந்த மாதத்தில் பிறந்து உள்ளார் ? என்பதை எளிதாக கண்டறிந்து விடலாம்.


சூரிய பகவான் தன்னை 17,15,13,11,9 என்ற பாகை அளவில் சனி, செவ்வாய்,சுக்கிரன் ,புதன் மற்றும் குரு நெருங்கும் பொழுது அந்த கிரகத்தை அஸ்தமன படுத்தி விடுவார் .இவ்வாறு சூரியன் தன்னுடைய இணைந்த சுப கிரகங்களை அஸ்தமன படுத்தும் போது தான் வலிமை பெற்று திகழ்வார்.


    குரு, செவ்வாய் மற்றும் சனி போன்ற கிரகங்கள் சூரிய பகவான் இருக்கும் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் வக்ரம் ஆரம்பித்து ஒன்பதாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறது. புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சூரியன் உடன் இணைந்து செல்லக்கூடிய கிரகங்கள் ஆகும் .

புதன் சூரியன் உடன் அல்லது முன்பின் ஒரு ராசியிலும் மற்றும் சுக்கிரன் சூரியனுடன் அல்லது முன்பின் இரண்டு ராசிகளுக்குள் சுற்றி வருவார்.


    சூரியனை சந்திரன் எட்டு பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை உண்டாகிறது .இது "அமாவாசை யோகம்" என்று அழைக்கப்படுகிறது. சூரியன் இருக்கும் இடத்திற்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சம சப்தமாக சந்திக்கும் பொழுது பௌர்ணமி உருவாகிறது. இது "பௌர்ணமி யோகம் "ஆகும்.

 


    சூரியனை நெருங்கும் சந்திரன் அல்லது சூரியனை விட்டு விலகும் சந்திரன் ஆகிய அமைப்புகளும் மற்றும் பௌர்ணமி அமைப்புகளும் ஒரு மனிதனை அரசு மற்றும் அரசியலில் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கக்கூடிய அமைப்பாகும்.

 இது எந்த வகையிலும் பங்கம் அடை.யாமல் அல்லது சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படாமலும் அல்லது சூரியனையோ அல்லது சந்திரனையோ சனி பார்க்காமலும் இருந்தால் மட்டுமே இந்த யோகம் முழுமையாக செயல்படும் .மேலும் அந்த யோகம் தசையே நடப்பில் வரும் காலங்களில் சிறப்பாக அமையும்.


 விருச்சிக லக்னத்தை பொருத்தவரை சந்திரன் பாக்ய அதிபதியாகவும் மற்றும் சூரியன் கர்ம அதிதியாகவும் செயல்படுவார் .விருச்சிக லக்கனத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி யோகத்தில் பிறந்திருந்தால் அவர்களுக்கு 

தர்ம-கர்மாதிபதி யோகம் மற்றும் பௌர்ணமி யோகம் ஆகிய இரண்டும் செயல்பட்டு அந்த காலகட்டத்தில் அரசியலில்லோ அல்லது அரசாங்க பதவிகள் மூலமாக பெரிய பதவி கிடைத்து அதில் நல்ல புகழை அடையக் கூடிய யோகம் லக்கனாதிபதியோட வலிமையை பொறுத்து அமையும்.


  ஒருவருடைய ஜாதகத்தில் சிம்மமும் அதன் அதிபதியான சூரியனும் வலிமை பெற்று இருந்தால் அரசாங்க உயர் பதவியில் அமரக்கூடிய யோகம் உண்டாகும் .மேலும் அப்பா வழி உறவுகளால் பெரிய ஆதாயத்தை ஈட்ட முடியும்.


 சிம்ம லக்னத்திற்கு லக்கனத்தில் ஆட்சி மற்றும் ஒன்பதாம் இடத்தில் உச்சம் போன்ற நிலைகளில் இருப்பதை விட சூரியன் மற்றும் செவ்வாய் பத்தாம் இடத்தில் திக்பலம் பெற்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை பெற்ற நிலையில் போலீஸ், ராணுவம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகள் மூலமாக பெரிய அளவில் புகழ் அடைய கூடிய தன்மையை ஜாதகருக்கு கொடுக்கும்.


சூரியன் பகவான் குரு ,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற இயற்கை சுப கிரகங்களை அஸ்தமனப்படுத்தும் போது இதுபோன்ற அமைப்பும் வலிமை பெற்ற அமைப்பில் இருந்து அரசாங்கம் மற்றும் அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு அந்த தசைகளில் கொடுக்கும் .இது லக்கனாதிபதி வலிமையை பொறுத்து அமைகிறது.


    சூரியன் பகவானுடன் சனி அல்லது ராகு உடன் நெருக்கமா இணைந்து இருப்பது அல்லது சூரியன் அல்லது சளி சம சப்தமாக பார்த்துக் கொள்ளக்கூடிய நிலை தந்தை மகன் உறவு நிலையை பாதிக்கும் .


      மேற்கண்ட அமைப்பில் பலன் தரும் படிநிலை என்பது ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றின் வலிமையை பொறுத்து அல்லது அந்த இடத்தின் சுபத்துவ தன்மையை பொறுத்து அமைகிறது . தந்தை ஆயுள், தந்தை -மகன் அன்பு அரவணைப்பு, தந்தை தந்தையாக இருக்கக்கூடிய நிலை போன்றவை அமைகிறது.


 சூரியன் மற்றும் சந்திரன் சம சப்தமாக பார்த்துக் கொள்ளும் பெளர்ணமி அமைப்பில் சூரியன் அல்லது சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணையும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

இதேபோல் அமாவாசை நேரத்தில் ராகு அல்லது கேது இணைந்த நிலையில் சூரிய கிரகணம் உண்டாகிறது.


சூரியன் மேஷத்தில் உச்சம்,,துலாத்தில் நீசம் , ஆகும். இது மேஷம் மற்றும் துலாத்தில் சூரியன் மற்றும் சனி சேர்ந்து இருப்பது நீச பங்கம் ராஜ யோகத்தை தராது. மாறாக அது கடுமையான அவயோக அமைப்பை தந்துவிடும்.

நேசத்தில் சூரியன் உச்சம் பெற்று சனி நீசம் பெறும் பொழுது நிச்சயம் அது சனிக்கு நீசபங்க ராஜயோகத்தை தராது இதற்கு மாறாக அவ யோக அமைப்பையே தரும்.


சூரியன் சிம்மத்தை ஆட்சி வீடாகவும் மற்றும் மூல திரிகோண வீடாகவும் கொண்டுள்ளது. காத்திகை, உத்திரம் உத்திராடம் ஆகிய நட்சத்திர நாதனாகவும் சூரிய தசை 6 ஆண்டுகள் ஆகும்.


சூரிய பகவானை பலமிழந்த அமைப்பை பெற்றவர்கள் சிவ வழிபாடு செய்வதும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதும் சிறந்த பரிகாரம் ஆகும்.


சூரிய பகவான் சுகத்துவமான நிலையில் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு பற்றிய ஆராய்ச்சி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் ஆர்வம், அரசாங்கத்தில் உயரிய பதவியில் அமரக்கூடியவர் ஆகும். ஆட்சிக் கட்டில் அமர்பவர் .

எந்த இடத்திலும் தலைமையேற்று நடத்தக்கூடிய , திறம்பட செயல் படக்கூடிய திறமை படைத்தவர் ஆகவும் இருப்பார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: