Tuesday 26 March 2024

தேவ குருவும் அசுர குருவும்

 #தேவகுருவும்அசுரகுருவும் 




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 தேவர்களின் குரு என அழைக்கப்படுபவர் பிரகஸ்பதி என்று அழைக்க கூடிய குரு பகவான் ஆகும் .அசுர குரு என்று அழைக்கப்படுபவர் சுக்கிர பகவான் ஆவார்.


  குரு பகவான் மற்றும் சுக்கிரன் பகவான் ஆகிய இருவரும் இயற்கை சுப கிரகம் ஆகும்.


   இந்த இரு கிரகங்களும் எந்த ஸ்தானத்தை பார்த்தாலும் அல்லது எந்த கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த கிரகமும் மற்றும் ஸ்தானமும் சுப தன்மை அடையும் என்பது அனைவரும் அறிந்த ஜோதிட உண்மையாகும்.


ஆனா அதே நேரத்தில் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்னை படைத்த கிரகமாகும்.


  குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இவ்விரு கிரகங்கள் இணைந்து இருந்தாலும் அல்லது ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டாலும் அந்த நிலையில் ஜாதகருக்கு குரு திசை சுக்கிர புத்தி, சுக்கிர திசையில் குரு புத்தியை நடப்பில் இருக்கக்கூடிய காலங்களில் கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் பிரச்சனைகளை கொடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டு .தாம்பத்திய சுகத்தில் தடைபடக்கூடிய நிலையை உருவாக்குவார் .அதற்கு ஏற்றார் போல் சில நேரங்களில் சுப பிரிவாக வெளிநாடு செல்லுதல், வெளியூர் செல்லுதல் போன்ற நிலைகளை உருவாக்கி விடுவார், சில நேரங்களில் பாவத்துவமான நிலைகளில் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உருவாக்கி விடுவார்.


    தேவ குருவான குரு பகவான் அருள் அணியைச் சேர்ந்தவர். இந்த அணியினை சேர்ந்த ஏனைய கிரகங்கள் சந்திரன், செவ்வாய் சூரியன் முதலியன ஆகும். குரு அணியைச் சேர்ந்த ராசிகளாக தனுசு, மீனம், மேஷம் விருச்சகம், கடகம் ,சிம்மம் ஆகும்.


       அசுரகுருவான சுக்கிரனை தலைமையாகக் கொண்ட அணியை பொருள் அணி என்று அழைக்கிறோம். இந்த அணியை சேர்ந்த ஏனைய கிரகங்கள் சனி, புதன் ஆகும் .ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும்.


       நிழற் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் எந்த அணியை சேர்ந்தது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அவர்கள் ஒரு பச்சோந்தி கிரகம் என்று அழைக்கப்படுகிறது .அவர்கள் குரு. அணியைச் சேர்ந்த லக்னத்தில் பிறந்தவரா நீங்கள் இருந்தால் அவர் குரு அணியை சேர்ந்த வீடுகளில் இருக்க வேண்டும் .நீங்கள் சுக்கிர அணியை சேர்ந்த லக்கனங்களில் பிறந்திருந்தால் அந்த ராகு கேது அதாவது நிழல் கிரகங்கள் சுக்கிர அணியை சேர்ந்த வீடுகளில் இருக்கும் பொழுது நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கும்.


குரு சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் சேர்ந்து சனி , செவ்வாய் ,ராகு போன்ற பாவ கிரகங்களுடன் இணைந்து இருக்கும் பொழுது இவ்விரு கிரகங்களும் சேர்ந்து அந்த பாவ கிரகங்களை சுப தன்மை அடைய வைக்கிறது .அதே போல சனி, ராகு ,செவ்வாய் போன்ற பாவ கிரகங்களை குரு மற்றும் சுக்கிரன் தனித்து அல்லது சேர்ந்தோ பார்க்கும் பொழுது அந்தக் கிரகம் முழு சுபத்தன்மை அடைகிறது.


    குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு பிறப்பிலிருந்து சூரிய, சந்திர ,செவ்வாய் குரு மற்றும் குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சகம் ,தனுசு, மீனம், கடக மற்றும் சிம்மம் வீட்டில் உள்ள ராகு பகவான் அல்லது கேது பகவான் தசை தொடர்ந்து வரக்கூடிய அமைப்பை பெற்றார்கள் யோக ஜாதக வரிசையில் அமைகிறது.


    ஒரு சமயம் மாற்று அணியை சேர்ந்த சுக்கிரன், சனி மற்றும் புதன் தசை நடப்பில் வரும் பொழுது அதை உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு, பத்து, பதினொன்னாம் இடங்களில் நட்பு நிலையில் நின்றாலோ அல்லது இயற்கை சுப கிரகமான இந்த குரு சுக்கிரன் ஆகியவை தொடர்பு பெற்ற நிலையில் இருந்தாலும் அந்த கிரகம் நல்ல பலனை தரக்கூடிய நிலையில் உள்ளது.


   பொதுவாக நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கும் வீட்டையே சொந்த வீடாக கொண்டு செயல்படும். மேலும் இருக்கக்கூடிய வீட்டையும் சேர்ந்துள்ள மற்றும் பார்க்கின்ற கிரகங்கள் பொறுத்து பலன்கள் அமைகிறது.


  நீங்கள் சுக்கிர அணியை சேர்ந்த லக்கணங்களில் பிறந்திருந்தால் தொடர்ந்து சுக்கிரன் புதன் மற்றும் சனி ஆகிய தசைகள் தொடர்ந்து வரக்கூடிய அமைப்பில் பெற்றிருந்த ஜாதகம் யோக ஜாதகம் வரிசையில் வருகிறது. 


    நிழல் கிரகங்கள் ஆன ராகு மற்றும் கேது ஆகியவை சொந்த வீடு கிடையாது என்பதால் அவை இருக்கு வீட்டின் அதிபதியைப் போல செயல்படுவார் என்பதால் சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு இந்த நிழல் கிரகங்கள் அந்த அணியைச் சேர்ந்த ரிஷபம் ,துலாம், மிதுனம் ,கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு மிகுந்த யோக பலனை அள்ளித் தருகிறார்.


    "ஒரு சமயம் மாற்று அணியை சேர்ந்த தசை நடப்பவருக்கு யோகமே தராதா ? அவங்க வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படணுமா? " அப்படின்னு நீங்க கேள்வி கேட்டீங்கன்னா அப்படி சொல்லிவிட முடியாது. மாற்று அணியை சேர்ந்த சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் குரு தசைகள் நடக்கும் பொழுது அந்த கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 3 ,6, 10, 11ஆம் இடத்தில் நட்பு நிலையில் நிற்கும் பொழுது அல்லது இயற்கை சுப கிரக தொடர்பு பெற்ற நிலைகள் அந்த தசையும் ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் மாறுகிறது.


  ஜாதகத்தில் குரு பகவான் தன காரகன், புத்திர காரகன் மற்றும் கல்விக்கு காரகன் ஆகவும் செயல்படுகிறார் .சுக்கிர பகவான் தாம்பத்திய சுகத்தை தரக்கூடியவராகவும், களத்திர காரகன், வாகனம் மற்றும் வீட்டிற்கு காரகராகவும் செயல்படுகிறார்.


குரு பகவான் ஜாதக கட்டத்தில் தன ஸ்தானமான இரண்டாம் இடம், புத்திர ஸ்தானமான ஐந்தாமிடம், பாக்கிஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11 இடம் ஆகிய நான்கு வீடுகளுக்கும் காரக கிரகமாக செயல்படுகிறது. சுக்கிரன் வாகன ஸ்தானமான நான்காம் இடம் மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாமிடம் ஆகிய இரண்டிற்கும் காரக கிரகமாக செயல்படுகிறார்.


குரு பகவானுக்கு உயிர் காரகத்துவம் புத்திர பாக்கியம் மற்றும் சுக்கிர பகவானுக்கு உயிர் காரகத்துவம் வாழ்க்கைத் துணையாகும்.


குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் வாசம் செய்யக்கூடிய கிரகமாகும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாதனாக செயல்படுகிறார். தனுசு, மீனம் ஆட்சி வீடாகவும், கடகம் உச்சவீடாகவும், மகரம் நீச விடவும் செயல்படுகிறது குரு பகவானுக்கு தனுசு மூல திரிகோண வீடு ஆகும். இதனுடைய தசை காலம் 16 ஆண்டு ஆகும். குரு பகவான் லக்னத்தில் திக்பலத்தையும், ஏழாமிடத்தில் நிஷ் பலத்தையும் பெறுகிறார்.


சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாத கால தங்கக்கூடிய கிரகமாகும். இவை சூரியன் இருக்கும் இடத்திற்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் அல்லது சூரியனுடன் சேர்ந்து சுழலக்கூடிய கூடிய உள்வட்ட கிரகமாகும் .சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம் ஆட்சி வீடாகவும்,

 மீனம் உச்ச வீடாகவும்ஃ கன்னி நீச வீடாகவும் உள்ளது சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு துலாம் ஆகும். சுக்கிர பகவான் பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திர நாதனாக செயல்படுகிறார் ‌சுக்கிரனுடைய தசைக்காலம் 20 ஆண்டுகள் ஆகும். சுக்கிரனுக்கு நான்காம் இடம் திக்பலம் ஆகும். பத்தாம் இடத்தில் நிஷ் பலம் பெறுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: