Tuesday 26 March 2024

சனி , செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு

 சனி, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று பாவ கிரகங்கள் தொடர்பு.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ‌.     ஒரு ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் சனி , செவ்வாய் மற்றும் ராகு போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று நின்றாலோ அல்லது ஏதாவது ஒரு கிரகம் நின்றிருந்தால் உடனே அந்த பாவகம் அல்லது அந்த கிரகம் பாதிப்பு அடைந்தது விட்டது என எண்ணி பலன் அளித்து விடக்கூடாது.


 அந்த கிரகம் இடம் பெறும் வீட்டின் அதிபதி வலுப்பெற்று சுபர் கிரக பார்வை பெற்று இருந்தாலோ அல்லது அந்த கிரகத்திற்கு சுபர் பார்வை அல்லது குரு பார்வை பெற்று இருந்தாலும் அல்லது இயற்கை சுப கிரகங்கள் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த குறிப்பிட்ட ஸ்தானம் அல்லது கிரகம் பாதிப்பு அடைந்து விடாது.


  பாவ கிரகங்கள் எட்டு பாகைக்குள்ளாக இணையும் போது மட்டும் தான் கூடுதலான பாவ தன்மையை அடைந்து பாதிப்பை தருகிறது.ஆதிபத்திய பாதிப்பை அந்த தசை நடைபெறும் காலங்களிலும் மற்றும் காரக பலனை வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது.


 அந்த குறிப்பிட்ட பாவ கிரகங்களுக்கு இடையே பதிமூன்று பாகை வித்தியாசத்தில் இருப்பின் ஐம்பது சதவீதம் மட்டுமே பாதிப்பை தருகிறது.


 இருபத்து மூன்று பாகை வித்தியாசத்தில் இருந்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லை.எனவே இணைந்து இருக்க கூடிய கிரகங்களை சிறிதளவு கூட பாதிப்பை அடைய விடுவதில்லை.


சனி , செவ்வாய் மற்றும் ராகு இணைவு பெற்று இருந்தால் அந்த தசை வரக்கூடிய காலங்களில் மட்டுமே அதிகமான பாதிப்பை தந்து விடுகிறது.


 புத்திர காரகன் குருவுடன் இந்த சனி, செவ்வாய் மற்றும் ராகு தொடர்பானது புத்திர பாக்கிய தோஷத்தை தருகிறது.

புத்திர தோஷம் தரும் பாதிப்பை உறுதி செய்ய ராசி மற்றும் லக்கனத்திற்கு ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதி, கோச்சார மற்றும் நடப்பு தசா ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து தோஷத்தின் சதவீதம் தெரிந்து கொள்ள வேண்டும்.


     செவ்வாய்,சனி மற்றும் ராகு ஆகிய பாவ கிரகங்கள் திருமண ஸ்தானமான லக்கனம் மற்றும் ராசிக்கு 1,2,7,8  ஆம் இடம்,அதன் அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் உடன் பார்வை அல்லது சேர்க்கை வகையிலான தொடர்பு திருமண தடையை உருவாக்குகிறது.அதற்கு உரிய பாவ கிரக தசையில் திருமணம் கால தாமதம் ஆகி கொண்டு செல்கிறது.


 சகோதர ஸ்தானத்துடன் தொடர்பு சகோதரர் தோஷத்தை தருகிறது.சகோதர  உறவு நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவற்றை தெரிந்து கொள்ள அந்த வீட்டின் அதிபதி,சகோதர காரகன் செவ்வாய் ஆகிய நிலைகளை ராசி மற்றும் லக்கனம் ஆகிய இரு வழிகளிலும் ஆய்வு செய்து பார்த்து தான் பலன் அளிக்க வேண்டும்.


தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சனி, செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு கொண்டு இருந்தால் உடனே தந்தை இறந்து விடுவார் என முடிவு கட்டி பலன் சொல்லி விட கூடாது.லக்கனம் மற்றும் ராசி ஆகிய இரண்டிற்கும் தந்தை ஸ்தான அதிபதி மற்றும் தந்தையின் கார்கள் சூரியன் ஆகியவற்றின் நிலை மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்ட கிரகம் போன்றவற்றை ஆராய்ந்து நடக்கக்கூடிய தசையை பொறுத்தும் தான் ஜாதகரின் தந்தை நிலையினை பற்றி ஆய்வு செய்து பலன் அளிக்க வேண்டும்.


 பொதுவாக சூரியன் உடன் சனி சேர்க்கை அல்லது சம சப்தம பார்வை அதிலும் குறிப்பாக மேசத்தில் சூரியன் உச்சம், துலாத்தில் சனி உச்சம் பெற்ற நிலை ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை பார்த்தால்  அதன் தசா புத்தி நடந்தால் நிச்சயமாக தந்தை உயிருக்கு பங்கம் உண்டாகும்.


 சந்திரன் உடனான சனி செவ்வாய் மற்றும் ராகு தொடர்பு தாயின் குணத்தை பாதிக்கும். இதற்கு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒரு ஏழு வயது குழந்தையின் ஜாதகமே சாட்சி ஆகும்.


  சிம்மத்தில்  சந்திரன் அதாவது சிம்ம ராசி , விருச்சிகம் லக்கனம் மற்றும் பூரம் நட்சத்திரம்.


இங்கு தாய் பற்றி ஆய்வு செய்து பார்ப்போம். மாதுர் காரகன் மற்றும் மன நிலை காரகன் சந்திரன் ஆவார். சந்திரன் உடன் ராகு சேர்ந்த நிலையில் சந்திரன் பாவத்துவம்  அடைந்து உள்ளது. 

ராசிக்கு  ஏழாம் இடத்தில் சம சப்தமாக கேது உடன் இணைந்த செவ்வாய் பகவான். உள்ளார்.இந்த பாவ கிரக செவ்வாய் பார்வையானது சந்திரன் மற்றும் ராகு மீது  விழுந்து உள்ளது.


     விருச்சிகம் லக்கினத்தில் சனி மற்றும் புதன் சேர்க்கை.சனி தனது பத்தாவது பார்வையால் சிம்மத்தில்  உள்ள

சந்திரன் மற்றும் ராகு வின் மீது பார்வை.


   லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய் ,கேது பாவத்தன்மை அடைந்து  உள்ளது. ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் கேது இணைவு சூட்சும வலு என்பதால் தாயின் உயிருக்கு பாதிப்பு இல்லை.


    மனநிலை மற்றும் தாய்க்கு காரகராக விளங்கக்கூடிய சந்திரன் உடன் ராகு ,சனி மற்றும் செவ்வாய் தொடர்பு கொள்ள  தாய் குணம் கெட்டவளாக தந்தையிடம் இருந்து குழந்தையை  பிரித்து  வாழ்கிறார்.  விவாகரத்து வழக்கு தொடுத்து உள்ளார்.


  நான்காம் இடம்,அதன் அதிபதி மற்றும் காரக கிரகம் சந்திரன் ஆகிய மூன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் தாயின் குணங்களும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனை நடக்கக்கூடிய நேரத்தில் அந்த குழந்தைக்கு சுக்கிர திசையில் சனி புத்தியும் நடப்பில் இருக்கிறது. 


   கோச்சார  அடிப்படையில் சிம்ம ராசிக்கு கண்டக  சனி வேறு நடப்பில்  உள்ளது. .அதனை தொடர்ந்து அஷ்டம சனி.


      இவ்வாறு பாவத்துவ  கிரக சேர்க்கை ,கோச்சார பலன் மற்றும் தசாபுத்தி  அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்ட  நிலையில் வரும் பொழுது தான் இது போன்ற பாதிப்பை தந்து விடுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே

  097151 89647 

மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

   


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்   M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்,) ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Email: masterastroravi@gmail.com

No comments: