Monday 25 March 2024

உங்கள் வாழ்வு நிலையினை முடிவு செய்வது எது ?

 உங்கள் வாழ்வு நிலையினை முடிவு செய்வது எது ?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி எங்கு எப்படி உள்ளார்? என்பதை பொறுத்து ஜாதகரின் வாழ்வின் நிலை அமைகிறது.


 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன் அல்லது தனித்த புதன் அல்லது சுக்கிரன் ஆகிய சுப கிரக தொடர்பை  பெற்ற நிலையில்‌ ஜாதகர் எவ்வித சூழலிலும் நிலை குலையாமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி காண்பார்.


 சில நேரங்களில் லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் ராசியையும் அதன் அதிபதியையும் கவனிக்க வேண்டும்.விதி கெட்டால் மதி என்று சொல்வார்கள்.அந்த வகையில் ராசியில் எந்த பாவ கிரகம் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.ராசி அதிபதியும் பாவர் கலப்பு இன்றி சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை தொடர்பை பெற்றிருக்க வேண்டும்.


 விதி-மதி இரண்டும் கெட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.சூரியன் பகவான் ஆத்மா காரககன் மற்றும் லக்கன பாவகத்திற்கும் காரகன் ஆவார்.


 ஒருவர் ஜாதகம் என்னதான் யோகம் படைத்த ஜாதகமாக இருந்தாலும் அந்த யோகத்தை முழுவதுமாக முறையாக அனுபவிக்க லக்கனாதிபதி வலிமை அடைந்த நிலையில் பாவ தன்மை அல்லது பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும்.


 ஒரு கிரகம்  வலிமை அடைந்து சுப தன்மை அடைந்த நிலையில்  அந்த கிரகம் தரும்  யோகத்தை அதன் தசையில் மட்டுமே அனுபவிக்க இயலும்.அந்த கிரக தசை வராத நிலையில் என்ன தான் யோக நிலையில் இருந்தாலும் "ஒதி பெருத்து உத்திரத்திற்கு ஆகாது "என்ற நிலை தான் ஆகும்.


  லக்கனத்தை அடிப்படையாக கொண்டுதான் ஜாதக பலன் கணிக்கப்பட வேண்டும்.கோச்சார பலனை மட்டுமே ராசியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.

  

சில நேரங்களில் லக்கனத்திற்கு ஆறாம் இட அதிபதியாக வந்து அதுவே ராசி நாதனாக இருக்கும் பட்சத்தில் பெருமளவு ஜாதகருக்கு கெடு பலனை தந்து விடுவதில்லை.


 உதாரணமாக மீன லக்னத்திற்கு ஆறாம் இட அதிபதியாக சூரியன் வரும் போது சிம்மம் ராசியாக இருக்கும் பட்சத்தில் சூரியன் முழுவதும் ஆறாம் இட அதிபதியாக மட்டும் செயல்பட  மாட்டார்.காரணம் அவரே ராசி அதிபதி என்பதால் ஆகும்.


 ஒருவர் ஜாதகத்தில் லக்கன பாவகம் வலுவாக இருந்தால் எவ்வளவு அடிச்சாலும் தாங்கி கொண்டு அந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து தாங்கி கொண்டு வரும் மனநிலை இருக்கும்.


  பிறந்த நேரத்தில் இருந்து இறக்கும்  வரையிலும் ஒரு சிலருக்கு எல்லாமே சரியாக அமைந்து சரியான சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு நிறைவாக உயிர் மாய்ப்பார்கள்.காரணம் அவர்களது ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்லபடியாக அமர்ந்து லக்கனாதிபதி வலிமை பெற்று உகந்த யோக தசைகள் பிறப்பிலிருந்து இறப்பு வரை சரியாக அமைந்து இருக்கும்.


 சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு பிறந்து, வளர்ந்து மற்றும் கஷ்டப்பட்டு இறப்பார்கள். இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஜாதகத்தில் லக்கின பாவகமும் பலவீனம் பெற்று,  கிரக அமைவிடமும் சரியாக இல்லாமல் தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம்.


சில பிறக்கும்போது கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து பிறகு தனது முயற்சியால் கடினமாக உழைத்து வாழ்வின் உயரிய நிலையை அடைந்து நிறைவாக இறக்க கூடிய சூழல் சிலர் ஜாதகத்தில் அமைகிறது.


    இதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை பெற்ற நிலையில் இருந்து துவக்க காலத்தில் உரிய யோக தசையில் நடக்காமல் வாழ்வின் பிற்பகுதியில் அவருக்கு யோக தசையாக வந்து அந்த காலகட்டத்தில் நிறைவாக உழைத்து நேர்மையாக சம்பாதித்து பணக்காரராக மாறி நிறைவாக வாழ்ந்து  இறப்பதும் உண்டு.


லெளகீக வாழ்வில் ஈடுபடும் மனிதன் வாழ்வானது மேற்கண்ட மூன்று நிலைகளில் ஒன்றாக அமைகிறது.உங்கள் வாழ்வானது எந்த நிலையில் அமைகிறது என்பதை முடிவு செய்வது உங்களது ஊழ்வினை பயன் ஆகும்.நாம் நமது கர்ம வினைப்படி பிறப்பு எடுக்கிறோம்.


 எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த பெற்றோருக்கு எந்த மாதிரியான வாழ்வியல் நிலையில் எதற்காக பிறப்பு எடுக்கிறோம் என்பதை நமது கர்ம வினை முடிவு செய்கிறது.


நாம் நமக்கு கொடுக்கப்பட்ட அழகான வாழ்வினை நமது கர்ம வினைப் படி வாழ்ந்து கர்மவினைகளை முடித்து செல்வோம்.

 "எல்லோரும் இன்புற்று இருப்பதே யன்றி யாதோன்றும் அறியேன் பராபரமே!


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்

  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்  M.Sc,M.A,BEdஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: