சினிமா எனும் கனவு தொழிற்சாலை
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 60 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..
நீங்கள் சினிமா எனும் "கனவு தொழிற்சாலையில்"சேர்ந்து புகழ் அடையும் யோகம் உங்களுக்கு உண்டா ? ..நீண்ட தொடர் -1
ஒருவர் எழுத்து துறையில் சிறந்து விளங்கவும்,மக்கள் போற்றும் எழுத்தாளராகவும் புகழ்பெற அவரது சாதக கட்டத்தில் மூன்றாம் பாவமும் மற்றும் ஒன்பதாம் பாவமும் பலம் பெற்றிருப்பதோடு ,கிரகங்களில் புதன் பகவான் பலம் பெற்று குரு பார்வை பெற்றிருக்கவேண்டும்.
இதேபோல இசை ம்றும் கலைகளின் அதிபதியான சந்திரனும்,சுக்கிரனும் பலம்பெற்று வாக்குஸ்தான தொடர்பு இசைதுறையில் சாதிக்க வைக்கும்.
ராசி சக்கரத்தில் இரண்டாம் வீட்டிலோ அல்லது ஐந்தாம் வீட்டிலோ சூரியனும்,புதனும் அல்லது குருவும்,சந்திரனும் இணைந்து இருப்பின் சங்கீத சாஸ்திரத்தில் கரை கண்டவராக இருப்பர்.
சப்தமஸ்தானமான ஏழாம்வீட்டில் நீச சுக்கிரன் சிற்றின்ப பாடல்களை பாடுபவராக இருப்பார்.
இரண்டில் செவ்வாய்,சுக்கிரன் இருப்பின் பக்தி பாடல்களை பாடுவார்.
நடன நாட்டிய மங்கையாக வலம் வர அவரது சாதகத்தில் சுக்கிரன் பகவான் மற்றும் சனிபகவான் பலம் பெற்று திகழவேண்டும்.
சிறந்த கவிஞராக வலம் வர புதன்,சுக்கிரன் பலம் பெற்று குரு பார்வை பெற வேண்டும்.
சினிமா உலகில் பின்னனி பாடல்கள் பாடி புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் சாதத்தினை ஆராய்ந்து பார்ப்போம்.
கிரகநிலை (லதா மங்கேஷ்கர்)
மகர லக்கனம்,விருட்சக ராசி
(4-ல் ராகு,5-குரு, 7-ல் சுக்கிரன்,8-ல் சூரியன்,9-ல் புதன்,செவ்வாய்,10-ல் கேது,12-ல் சனி)
(4-ல் ராகு,5-குரு, 7-ல் சுக்கிரன்,8-ல் சூரியன்,9-ல் புதன்,செவ்வாய்,10-ல் கேது,12-ல் சனி)
ஒருவர் சினிமாவில் பின்னனி பாடி புகழ்பெற வேண்டுமாயின் அவரது வாக்கு ஸ்தானம் பலமடைதவேண்டும்.இவரது சாதகத்தில் வித்தைக்கு அதிபதியான புதன் பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று ஒன்பதாம் பாவத்தில் பலம் பெற்று உள்ளது.இந்த புதன் பகவானுக்கு குரு பார்வை செய்து வலுவிற்கு வலு சேர்க்கிறார்.
. அதேபோல கலைக்காரகனான சுக்கிரபகவான் தொழில்ஸ்தானமான பத்துக்கு பத்தாம் இடமான ஏழாம் இடத்தில் வலுவடைந்து உள்ளார்.
மேலும் வாக்குஸ்தானதிபதி சனி பகவான் தன் வீட்டிற்கு லாபத்தில் அமர்ந்துள்ளார்.
இசையில் சாதனை புரிய வைக்க கூடிய கிரகங்களான குரு,புதன்,சந்திரன் மற்றும் கலைகாரகன் சுக்கிரன் போன்ற கிரக வலிமையடைந்ததால் சிறந்த பின்னனி பாடகராக சினிமா உலகில் 2500 பாடல்கள் பாடி சாதனை படைத்தார்.
------தொடரும்...தொடர்ந்து பல சினிமா பிரபலங்களின் சாதகத்தினை ஆராய்வோம்.....
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
My whatsup ;
97151 89 647
by
AstroRavichandran M.SC,MA,BEd.
Astrological Researcher,
P.G Assistant in Chemistry,
OM SAKTHI ASTRO CENTRE,
Pudukkottai District.
AstroRavichandran M.SC,MA,BEd.
Astrological Researcher,
P.G Assistant in Chemistry,
OM SAKTHI ASTRO CENTRE,
Pudukkottai District.
Email:
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My web.click hear.
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandran. blogspot. Com
............
No comments:
Post a Comment