கிரகங்களின் சேர்க்கையினால் உண்டாகும் பலன்கள்.
கிரகங்கள் படுத்தும் பாடு -( 151 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒருவருடைய சாதகங்களில் அசயர்களான சூரியன், சனி,ராகு ,கேது மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் ஒரு கிரகங்களோடு சேரும்போது அந்த ஸ்தான பலத்தையும்,காரகபலன்களையுமே மாற்றிவிடுகிறது.இதனை கூடாநட்பு எனலாம்.
ஒருவரது சாதகத்தில் மனதுக்காரகன் ,மாதர்காரகன் என அழைக்கப்படும் சந்திரபகவானோடு செம்பாம்பு என்றழைக்கப்படும் ராகுபகவான் இணைந்து இருக்கும்பட்சத்தில் அக்கிரக சேர்க்கையானதுசாதகரது மனநிலையில் மாற்றங்களை தரமுயல்கிறது.
மேலும் சந்திரன் இருக்கும் வீடே ஒருவரது ராசியாகும்.ராசியினை லக்கனமாக கொண்டு பார்க்கும்போது அவரது லக்கன மற்றும் களஸ்திரஸ்தானத்தோடு ( 1,7 ) ராகு ,கேது தொடர்பு களஸ்திர தோஷத்தையும் வழங்கி காலதாமத திருமணத்தையோ ,மனதிற்கு பிடித்த கணவன் அமைவதிலோ தடையை உருவாக்கிவிடுகிறது.
இவை மட்டுமல்லாமல் உடல் ரீதியாக பலவீனமாகவும் இருப்பார்கள்.சந்திரனோடு ராகுபகவான் ஆனவர் தாய்க்கு பீடையை உருவாக்குவாராகவும் இருப்பர்.
சந்திரபகவானோடு சனிபகவான் சேரும்போது கால தாமத திருமணம் ,காதல்மணம்,கலப்புமணம் மற்றும் காம மிகுதி போன்றவைகளை உருவாக்குகிறது.புணர்பூ தோஷம் என்று சொல்லக்கூடிய தோஷம் உருவாகிறது.இதனால் மனைவி,புத்திரன் இல்லாதவன் ஆவான்.
சந்திரனோடு கேதுபகவானது சேர்க்கை ஞானநிலை,ஆன்மீக சிந்தனையை தருகிறது.ஆனால் தாய்க்கு பீடை ,காலதாமத திருமணம் போன்றவை தருகிறது.
சந்திரனோடு செவ்வாய்பகவானின் சேர்க்கையானது"சசி-மங்கள யோகத்தை " தருகிறது.
ஆத்மாக்காரகன், அரசாங்ககாரகன்,தந்தைக்குகாரகன் என்று அழைக்கப்படும் சூரியபகவானோடு சனி அல்லது ராகு சேரும்போது தந்தை -மகன் உறவுநிலைகளில் பாதிப்பது மட்டுமன்றி கல்வி கற்றவராக இருப்பின் அரசு வேலைகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஆகிறது.
சூரியன் ,செவ்வாய் சேர்க்கை சாதகருக்கு துணிச்சல் மற்றும் அடாவடிதனத்தையுய் தருவார்.சூரியன் உடன் கேதுபகவானின் சேர்க்கை ஆன்மீக தேடலையும் ,அதை நோக்கிய பயணத்தையும் தருவார்.
களஸ்திர,வாகனகாரகனான சுக்கிரபகவானோடு சனிபகவான் சேர்க்கை காதல்மணம்,கலப்பு திருமணம் மற்றும வெட்கம் கெட்ட,முறைதவறிய காமதொடர்பு முதலியன.
சுக்கிரனோடு செவ்வாய் சேர்க்கையானது சாதகரை மிகுதியான காம எண்ணங்களுக்கு ஆட்பட்டு முறைதவறி நடக்க வைக்க முயற்சி செய்யும்.சுபகோள் நோக்க பலனில் மாறுதல் உண்டாகலாம்.
இச்சேர்க்கையானது "பிருகு -மங்கலயோகத்தையும் தருகிறது.
இச்சேர்க்கையானது "பிருகு -மங்கலயோகத்தையும் தருகிறது.
சுக்கிரன் பகவானோடு ராகு அல்லது கேதுபகவான் சேர்க்கையானது திருமண தடையை உருவாக்க்ம்.வாகனயோகங்களை தடை செய்யும்.
குருபகவானோடு சனி அல்லது ராகு சேர்க்கையானது "குரு சண்டாளயோகத்தை "நல்கும்.இவை ஆன்மீக நாட்டத்தை குறைக்கும்.மேலும் புத்திரதோஷத்தை தந்து குழந்தைபாக்கியம் தாமதப்ளடலாம்.
குருவோடு சனி சேர்க்கையானது பிரம்மஹத்தி தோஷத்தை தரும்.
குருவோடு சனி சேர்க்கையானது பிரம்மஹத்தி தோஷத்தை தரும்.
குரு-செவ்வாய் சேர்க்கையானது "குருமங்கல யோகத்தை "வழங்குகறது.குருபகவானோடு கேதுபகவான் சேர்க்கையானது ஆன்மீக நாட்டத்தை உருவாக்குகிறது.
சனி,ராகு,கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவிகளோடு சேர்ந்த புதன்பகவானும் பாவி ஆகிவிடுவதால் வித்தையில் பாதிப்பினையும் ,மாமன் உறவுகளால் நன்மை பெற இயலாத சூழல் உருவாகும்.
ஜாதகத்தில் சனி,செவ்வாய் சேர்க்கையானது எந்த பாவத்தில் சேர்ந்திருந்தாலும் அந்த பாவகம் கெடும்.கடுமை மற்றும் கொடுமையான பலன்களையும் உண்டாக்கும்.வாகனவிபத்து,தீயினால் ஆபத்து போன்றவற்றை உருவாக்கும்.
சனி,புதன் சேர்ந்து இருந்தால் ஆண்மைக்குறைவு உருவாகலாம்.சனி,சந்திரன் சேர்ந்து இருந்தால் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருக்கும்.
சனி,ராகு சேர்க்கையானது சங்கடங்கள் ,சறுக்கல்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை.
சனி,ராகு சேர்க்கையானது சங்கடங்கள் ,சறுக்கல்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை.
குறிப்பு ; மேற்கண்ட அனைத்தும் பொதுபலனே.அவரவர்க்கு நடைபெறும் திசை,புத்தி ,குருபார்வை மறறும் கிரகங்கள் சேர்க்கை பெற்றுள்ள வீட்டு அதிபதிகளின் வலு முதலியவற்றை பொறுத்து பலனில் மாற்றங்கள் உருவாகலாம்.
நன்றி!
(தங்களது சாதகபலன்,திருமஙபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்.)
தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரம் பெறலாம்.)
செல்
749 257 08 99
97 151 89 647
749 257 08 99
97 151 89 647
வாட்ஸ்அப்
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran.blogspot. com
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment