புதிய தொழில் தொடங்க...
கிரகங்கள் படுத்தும் பாடு--( 209 )
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
ஒருவர் பல லட்சம் கடன் வாங்கி தொழில் ஆரம்பித்திருந்திருக்கிறார்.தொழில் ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலே வியபாரம் சரியாக நடக்காமல் தொழிலை தக்கவைக்க கடன்மேல் கடனாக வாங்கி இறுதியாக எல்லாவற்றையும் இழந்து மேலும் பல லட்சங்களை கடன் வாங்கி கடன்காரர் ஆகிய பிறகு என்னிடம் சாதகம் பார்க்க வந்தார்.
சாதகம் பார்க்க வந்தவர் தனது சாதகத்தினை பதிவில் போட விரும்பாததால் அவர் எதனால் தான் மேற்கண்ட தொழிலால் கடன்காரர் ஆகும் சூழ்நிலை உருவாகியது என்பதை பலருக்கு பயன்படும் வகையில் பொதுப்பலனாக எடுத்துரைக்கிறேன்.
பொதுவாக ஒருவர் ஒரு சுய தொழிலை தேர்ந்தெடுக்கும்போது லக்கனம் மற்றும் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இட அதிபதி நிலையினை நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பத்தாம் இட அதிபதியினைக்கொண்டு எவ்வித தொழிலினை சாதகர் மேற்க்கொள்ளலாம் என முடிவு மேற்கொள்ளவேண்டும்.
சுய தொழில் ஆரம்பிக்க தற்பொழுது உகந்த காலமாக உள்ளதா ? என ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.
ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்புவரது சாதகத்தில் பத்தாம் இட அதிபதி (நீசம்,அஸ்தங்கம், பகை....) பலம் இழந்து நிற்க கூடாது. அவ்வாறு பலம் இழந்து நிற்கின்ற அமைப்பினை தனது சாதகத்தில் பெற்றவர்கள் சுய தொழில் தொடங்காமல் இருத்தல் நல்லது.
மேலும் ஒருவருக்கு நடைபெறும் திசையினை நன்கு ஆராய்ந்து அறியப்பட வேண்டும். நடப்பு திசையானது நாம் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழில் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளதா ? என கவனிக்கப்படவேண்டும்.
ஒரு புதிய தொழில் தொடங்கும்போது கோசார பலன்களை நன்கு கவனித்து ஆராய்ந்து நோக்கப்பட வேண்டும்.
தொழில் தொடங்கும் நேரங்களில் சாதகருக்கு அஷ்டம சனி ,ஏழரை சனி போன்றவை நடப்பில் இருந்து சாதகருக்கு ராகு அல்லது சந்திர திசை நடப்பில் இருந்தால் புதிய தொழில் தொடங்க கூடாது.
ஒருவரது சாதகத்தில் பத்தாம் அதிபதி உச்சம்,ஆட்சி ,மூல திரிகோணம் போன்ற வகைகளில் பலமடைந்து இயற்கை மற்றும் ஸ்தான அடிப்படையில் பலமான கிரகங்களால் பார்வை பெறவேண்டும்.
இவை மட்டுமன்றி தன யோகத்தினை தரக்கூடிய இரண்டாம் அதிபதி மற்றும் வருமான யோகத்தினை தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி ஆகியவை சாதகருக்கு பலமடைந்து இருக்க கூடிய சூழலில் தொழில் யோகம் மேலும் சிறந்து விளங்கும்.
தன,பாக்கிய ,ஜீவன மற்றும் லாபாதிபதி ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று பலமடைந்து நிற்க சாதகருக்கு சொந்த தொழில் யோகம் மேலும் சிறந்து விளங்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சாதகரை வழிநடத்தக்கூடிய லக்கன அதிபதி மற்றும் ராசி அதிபதி ஆகிய இரண்டும் பலமடைந்து நிற்க சாதகருக்கு சொந்த தொழில் யோகம் சிறப்பாக இருக்கும்.
சாதகருக்கு தொழில் யோகம் இல்லாத சூழலில் தங்களது குடும்ப அங்கத்தினர் சாதகங்களில் யாருக்கு தொழில் யோகம் சிறப்பாக உள்ளது ? என சோதிடர்களின் ஆலோசனை பேரில் கண்டறிந்து அவர்களது பெயரில் தொழில் தொடங்கி சாதகர் அந்த தொழிலினை வழிநடத்தி செல்லலாம்.
ஒரு சிலருக்கு தொழில் யோகம் இருந்தும் தனயோகம் அற்றவர் எனில் தங்களது குடும்ப அங்கத்தினர்களில் நம்பிக்கைகுரியவர்களை கல்லாவில் அமர செய்யலாம்.
நன்றி
வாட்ஸ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்திஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
M.Sc,MA,BEd,
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்திஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
....................
No comments:
Post a Comment