மனித வாழ்வை வழி நடத்தும் கோள்கள் தரும் சுவராஸ்யமான தகவல்கள்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவர் ஜாதகத்தில் கோச்சார பலன்களை ராசியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
கோச்சார பலன் என்பது வான வீதியில் கிரகங்கள் தற்போது நின்ற நிலையை குறிப்பிடுவதாகும். குரு பெயர்ச்சி பலன்கள் ,சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போன்றவை கோச்சார அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
சந்திரன் பகவான் ஒரு ராசியில் இரண்டு கால் நாள் தங்குவார். இதனை நாள் கோள் என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் ஒரு மாத காலம் சஞ்சாரம செய்கிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் தங்குவார். இந்த நான்கு கோள்களும் மாத கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.
சூரியனுடன் அல்லது சூரியனுக்கு முன்பின் ஒரு ராசிகளில் புதன் பகவான் மற்றும் சூரியன் உடன் சூரியனுக்கு முன்பின் இரண்டு ராசிகளுக்குள் சுக்கிரன் பகவானும் தொடர்ந்து நகர்ந்து கொண்டு வருவார்கள். இதனால் இவ்விரு கிரகங்களும்" உள் வட்ட கிரகங்கள்" என்று அழைக்கப்படுகிறது.
குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்குவார், ராகு -கேது ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்குவார் மற்றும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் தங்குவார்., இந்த கோள்களை வருட கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.
கோள்களிலே சனி பகவான் மட்டும் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாகும் மற்றும் மெதுவாக நகரக்கூடிய கோளும் ஆகும் . இதனால் இதனை மந்த கோள் என்றும், மெதுவாக நகரும் கோள் என்றும் அழைக்கப்படுகிறது.
குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஒரு ஓராண்டு எடுத்துக் கொள்ளும் .புதிய ராசியில் இணைந்த குரு நல்லது கெட்ட பலன்களை இரண்டு மாதம் கழித்து தான் தருவார். ஒரு நாளைக்கு ஆறு கலை தூரம் கடப்பார். ஒரு நட்சத்திர பாதத்தை ஒரு மாதம் பத்து நாள் ஒரு மணி 33 நிமிடம் 20 வினாடி நகர்வார்.
தசா புக்தி பலன்களை லக்னத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது . கோச்சார பலன்கள் ராசியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது
தசா புத்தி பலன்கள் மனித வாழ்வை வழிநடத்திச் செல்லக்கூடிய மனித வாழ்வை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
லக்கன முதலாக 12 ஆம் வீடு வரை ஒவ்வொரு ஸ்தானம் பெற்றுள்ள பலன்களை ஆதிபத்திய பலன்கள் என்று அழைக்கப்படுகிறது ஒவ்வொரு கிரகமும் பெற்றிருக்கக் கூடிய பலன்களை தாரகத்துவம் என்று அழைக்கப்படுகிறது..
ஆதிபத்திய பலன்களை அதன் தசை வரக்கூடிய காலங்களிலும் மற்றும் காரகத்துவ பலன்களை ஆண்டு முழுவதும் பெறலாம்.
சூர்யா தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்வதால் மகர ஜோதி தரிசனம் அதாவது மகர சங்கராந்தி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது . பூமியின் சுழற்சியானது தட்சிணாயத்திலிருந்து உத்திராயணத்திற்கு செல்கிறது.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர ஆடி மாதம்.ஆரம்பிப்பார்.இதனை தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வார் இந்த காலம் விதை விதைக்க உகந்த காலம் ஆகும் .எனவேதான் நமது முன்னோர்கள் "ஆடி பட்டம் தேடி விதை "என்றார்கள்.
ஆடியில் விதைத்த
பயிர்களை தை மாதம் அறுவடை செய்வார்கள். எனவே தான்
" தை பிறந்தால் வழி பிறக்கும் "என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.
தை மாதம் தனது சுழற்சியினை வடக்கு நோக்கி தை, மாசி ,பங்குனி, சித்திரை வைகாசி மற்றும் ஆனி ஆகிய காலங்கள் வரை வடக்கு நோக்கி நகரும்.
நமது முன்னோர்களுக்கு பிடிக்கக்கூடிய அமாவாசையை கூட வருடம் முழுவதும் பிடிக்க முடியாதவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை வெகு சிறப்பாக பிடிப்பதற்கு இந்த இரண்டு சுழற்சி மாற்றங்கள் முக்கிய காரணமாகும்.
ஒரு ராசியில் இரண்டு நாள் தங்கி பெயர்ச்சி செய்யும் சந்திரனை அடிப்படையாக வைத்தும் வளர்பிறை தேய்பிறை என்ற காலமாற்றம் உருவாக்கப்படுகிறது.
சந்திர பகவான் சூரியனை 8 பாகைக்குள் நெருங்கும் பொழுது அமாவாசை உருவாகிறது சூரியனை விட்டு ஏழாவது வீட்டுக்கு அதாவது சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து
180 பாகையில் சந்திரன் வரும் பொழுது பௌர்ணமி உருவாகிறது.
எனவே சூரியன் இருக்கும் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீடு வரை வளர்பிறை சுக்கில பட்சம் அல்லது பூர்வ பட்சம் என்று அழைக்கப்படுகிறது. எட்டாம் வீட்டில் இருந்து 12ஆம் வீடு வரை சந்திரன் இருக்கும் காலத்தை தேய்பிறைக்காலம் அதாவது அமரபட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மேஷ ராசிக்கும் ,வைகாசி மாதம் ரிஷப ராசிக்கும் ....இவ்வாறாக பங்குனி மாதம் மீனம் வீட்டிற்கு வருகிறார்.
நிழல் கிரகங்களில் ராகு கேது எப்பொழுதும் ஒன்றாக ஒரு வீட்டில் இருப்பதற்கு வாய்ப்பில்லை .
ராகு இருக்கக்கூடிய வீட்டிற்கு ஏழாவது வீட்டில் கேது பகவான் வாசம் செய்வார். ராகு மற்றும் கேது ஒரு பருப்பொருள் இல்லாத நிழல் கிரகமாகும்.
ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு என்பதையும் கிடையாது இவர்களுக்கு பார்வை கிடையாது. உச்சம் ஆட்சி போன்ற ஸ்தான வலிமை கிடையாது.
நன்றி.
For online appointment
Cell & WhatsApp & Gpay
097151 89647
Another cell no: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment