Monday, 3 February 2025

ஜோதிட பலன் கேட்கும் போது மெய் பலன் கேட்பது அறிவு

 ஜோதிட பலன் கேட்கும் போது மெய்பொருள் காண்பது அறிவு.




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


 நவக்கிரகங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவை பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு மனித வாழ்வை செம்மை படுத்துகிறது .


  ஜாதக பலன் என்பது உங்களுடைய பிறப்பு நேரத்தை துல்லியமாக கொண்டு கணித்து ஜாதக கட்டத்தை எடுத்து பாகை அடிப்படையில் நவ கிரகங்கள் 12 ராசிகளின் அமர்ந்து இருப்பதை பார்வை அல்லது சேர்க்கை முறையில் நடக்கக்கூடிய தசா புத்திகள் அடிப்படையாகக் கொண்டு அம்சத்தில் அவை சுப வர்க்கம் ஏறி இருக்கிறதா ? அல்லது பாவ வர்க்கம் ஏறி உள்ளதா ? போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பார்த்து கோச்சார அடிப்படையில் தற்போது பலம் தரக்கூடிய தசாபுத்தி கிரகங்கள் பன்னிரண்டு ராசிகளில் எப்படி அமைந்துள்ளது போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தரக்கூடிய பலன்களை நிச்சயமாக துல்லியமான ஜாதக பலன்களாக உங்களுக்கு அமையும்.


 யூடியூப் மூலமாக நாள்/வார/மாத / ஆண்டு/பெயர்ச்சி பலன்கள் மற்றும் டிரன்டிங் வீடியோ பார்த்து அதை அப்படியே நம்பி ஏமாற வேண்டாம்.


மேற்கண்ட இவை அனைத்தும் ஜாதக பொது பலன்களே . ஜோதிடர்களால் youtube மூலமாக தரக்கூடிய மேற்கண்ட பலன்கள் அனைத்தும் ஒரு வகையான பொதுவான பலன்களேஆகும் .இதை அப்படியே உங்களுடைய ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து பலன் அறிய முற்படாமல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கவலைப்படுவதோ அல்லது சந்தோஷப்படுவதோ கூடாது.


இதே போல யூடியூப் வழியாக தரப்படும் அழகு குறிப்புகள் , மருத்துவ குறிப்புகளான இந்த மூலிகையை சாப்பிட்டால் அல்லது இந்த கிழங்கை சாப்பிட்டால் நோய் குணமாகும் அந்த இலையை சாப்பிட்டால் நோய் முற்றிலும் வராது என்று தரக்கூடிய வீடியோக்களை பார்த்துவிட்டு அப்படியே

ஆராய்ந்து பாராமல் செய்து சாப்பிடும் போது அவை சில நேரங்களில் பேராபத்து ஏற்படுத்தி விடும். 


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "-என்றார் வான் புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகை.


 எந்த ஒரு விஷயத்தை கேட்டாலும் சொல்லப்படும் அந்த விஷயம் சரியானதா ? என்பதை பலவாறு ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மை பொருளை அறிவதே நல்லது என்று நமது மாதானுபாங்கி வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.


youtube ல் வியூவர்ஸ் எண்ணிக்கை /சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் சில நேரங்களில் ட்ரெண்டிங்கான வீடியோக்களை திறம்பட்ட கணிப்பொறி அறிவு கொண்ட நபர்கள் உதவியுடன். Trending video போட்டு மக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக சில மேலோட்டமான விஷயங்களைக் கொண்டு கவர்ச்சிகரமாக ஈர்க்கக்கூடிய தலைப்புகளை வைத்து வீடியோ போட்டு உங்களை அவர்கள் பார்க்க வைப்பார்கள் வீடியோக்களை பார்த்து முழுவதும் ஆராய்ந்து பார்க்காமல் அதனை நம்பி ஏமாற வேண்டாம்.


சில நேரங்களில் வெறும் ராசி மற்றும் ஜென்ம நட்சத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஜாதக பலன் கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ நிறுத்திக் கொள்ளுங்கள் இவ்வாறு நீங்கள் கேட்டு பெறக்கூடிய பலன்கள் அனைத்தும் ஒரு விதமான பொதுவான பலன்களை ஆகும்.


இதே போல லக்னத்தில் சூரியன் இருந்தால், இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் தருவார் என்று ஒற்றைக் கிரகத்தை கொண்டு சாதகத்தின் மொத்த பலனை கேட்பதும் தவறான அணுகுமுறையாகும். இதனைக் கொண்டு தரக்கூடிய சோதிட பலன்களும் நிச்சயமாக சரியானதாக இருக்காது. ஒரு கிரகத்தில் பலனை அறிய வேண்டும் எனில் அந்தக் கிரகம் இருக்கும் இடம், அந்த கிரகத்தை பார்க்கும் மற்றும் சேர்ந்துள்ள கிரகங்கள், அந்த கிரகத்தின் ஆதிபத்திய மற்றும் காரகபலன் மேலும் அவை லக்கனாதிபதிக்கு எந்த வகையில் உறவு கொண்டுள்ளது.


    நடக்கக்கூடிய தசாபுத்திக்கும் அந்த கிரகத்திற்கும் உள்ள தொடர்பு ,அம்சத்தில் அவை உள்ள நிலை இதுபோன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து பார்த்து தான் ஒரு பலனை நீங்கள் பெற முடியும். ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பலன் தருவதற்கும் 12 ராசிகளும் ஏனைய பிற கிரகங்கள் அவற்றுடன் கொண்ட தொடர்பு என்று பல வகையிலும் ஆய்வு மேற்கொண்டு தான் பலன் அறியப்பட வேண்டும்.


 எனவே நீங்கள் யூட்யூபில் பின்னூட்டத்தில் கேட்கப்படக்கூடிய கேள்விகள் ஒன்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் இரண்டில் புதன் இருந்தால் மூன்றில் சந்திரன் இருந்தால் என்று சாதக பலன் கேட்கப்படும் பொழுது அது நிச்சயமாக தவறான பலனாக போய்விடும்.ஏனேனில் இரண்டில் சூரியன் இருந்தால் நாங்கள் தரும் பலன்களை அந்த சூரியனை சனி பாத்தால் ஒரு விதமாக கெட்ட பலனாக மாறிவிடும். குரு பகவான் பார்த்தால் இன்னும் சற்று கூடுதலாக நல்ல பலனாகவும் மாறிவிடும்.எனவே பலனை முடிவு செய்து planet combination தான் ஆகும்.


நன்றி.


For online appointment 

Cell 📱 & WhatsApp & gpay no 


 097151 89647 


Another cell no 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: