Monday, 3 February 2025

யோகத்தை அள்ளிக் தரும் "Planet combination"

 யோகத்தை அள்ளித் தரும்        "Planet combination".




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவருடைய ஜாதகத்தில் யோகத்தை அள்ளித் தரும் கிரகங்களுடைய பார்வை மற்றும் சேர்க்கை பற்றி விரிவாக பேசுவது இந்த பதிவின் நோக்கமாகும். இதனையே ஆங்கிலத்தில் "பிளானட் காம்பினேஷன் " என்று அழைக்கப்படுகிறது.


ஒரு இடத்தில் யோகத்தை அள்ளித் தரக்கூடிய கிரக பார்வை மற்றும் சேர்க்கை பற்றி விரிவாக பார்ப்போம்.யோகத்தை அள்ளி தரக்கூடிய கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவற்றில் முதலில் நிற்பது இயற்கை சுப கிரகமான குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகும் .


    இந்த இரண்டு கிரகங்களும் எந்த ஒரு கிரகத்தை பார்வை அல்லது சேர்க்கை செய்யும் போது அந்த கிரகமானது அதன் தசையில் யோகத்தை அள்ளித் தரக்கூடிய கிரகமாக மாறி அதன் தசையில் யோகத்தை அள்ளி தருகிறது.அதுவே ஜாதகருக்கு யோக தசையாக மாறி யோகத்தை அள்ளி ஜாதகருக்கு கொடுக்கிறது.


  ஒரு ஜாதக கட்டத்தில் இரண்டு மூன்று பாவ கிரகங்கள் ஒரு ராசியில் சேர்ந்த நிலையில், ஒரு வளர்பிறை சந்திரன் சேர்க்கை பெற்ற நிலையில் மற்றும் 

குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் அந்த பாவ கிரகங்கள் கூட தனது தசையில் யோக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


    குரு பகவானுக்கு நட்பு கிரகங்களாக சூரியன்,, சந்திரன், மற்றும் செவ்வாய் ஆகியவை விளங்குகிறது.

சுக்கிரன் உடன் செவ்வாய் சேர்க்கை,

குரு பகவான் உடன் சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை., சூரியன் பகவான் உடன் சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை, சந்திரன் பகவானுடன் செவ்வாய் சேர்க்கை மற்றும் பார்வை, ஆகிய அமைப்புகள் சுபத்துவமான நிலையில் அதன் தசை நடக்கக்கூடிய காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது.


   வளர்பிறை சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் சுக்கிரன்,குரு மற்றும் புதன் பகவான் ஆகிய கிரகங்கள் நின்று தசை நடத்தும் போது அதன் தசையில் யோகத்தை அள்ளித் தருகிறது.


  வளர்பிறை சந்திரன் கேந்திரத்தில் குரு, புதன் மற்றும் சுக்கிரன் பகவான் நின்று தசை நடத்தினால் அதன் தசையில் அந்த கிரகத்துக்கு உரிய ஆதிபத்தியம் மற்றும் காரக பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


குரு பகவான் இருக்கும் இடத்திற்கு 

5, 7, 9 ஆம் இடங்களில் உள்ள கிரகங்கள் ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறது. யோகம் மிகுந்த ஜாதகங்களில் பெரும்பாலான கிரகங்களை குரு பகவான் பார்வை செய்கிறார்.


  குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரனுக்கு அடுத்த படியாக சுக்கிரன் மற்றும் பாவி உடன் சேராமல் உள்ள புதன் பகவான் ஆகிய இரண்டு கிரகங்களுடைய சேர்க்கை மிகுந்த யோகங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.


ஒரு ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஒரு விதமான யோகங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது. வளர்பிறை சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேரும் போது அதன் தசைகள் மிகுந்த யோகங்களை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


உங்கள் ஜாதகத்தில் இயற்கை பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் பகவான் அதன் தசையில் யோகத்தை தர வேண்டுமாயின் இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருக்க வேண்டும் அல்லது கேது பகவானுடன் இணைந்து மறைமுக வலுவினை பெற்றிருக்க வேண்டும்.


   உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் அதன் தசை காலங்களில் யோகத்தை தர வேண்டுமாயின் முதலில் அந்த ராகு பகவான் மேஷம் ,ரிஷபம், மகரம், கடகம் கன்னி ஆகிய ஐந்து வீடுகளில் அமர்ந்து அவை லக்கினத்திற்கு உப ஜெய ஸ்தானமான மூன்று, ஆறு, பத்து மற்றும் பதினொன்றாம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவானுடைய பார்வையை பெற்ற நிலையில் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.


   உங்கள் ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதன் பகவான் ஆகிய கிரகங்கள் சேர்க்கை அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை தரக்கூடிய அமைப்பில் இருந்து வருகிறது.

 இந்த அமைப்பை குரு பகவான் பார்த்தாலோ அல்லது பௌர்ணமி யோகத்தில் அமைந்து இருந்தாலும் மிகப்பெரிய அரசன் ஆகும் தன்மை அல்லது அரசியலில் உயரிய பதவி அல்லது அரசாங்க பதவி போன்றவற்றை ஜாதகருக்கு அந்த தசை காலங்களில் கொடுக்கிறது.


   லக்கன அவ யோக தசைகள் நல்ல பலனை தர வேண்டுமாயின் இரண்டு ஆதிபத்தியங்களில் ஒன்று மறைவிட ஸ்தானமான ஆறு அல்லது எட்டாம் இடமாக இருந்தால் அந்த ஆறு அல்லது எட்டாம் இடத்திற்கு ஆறு அல்லது எட்டாம் இடத்தில் கிரகங்கள் அமரும் போது அந்த மறைவிட யோக பலனை தராமல் மற்றொரு ஆதிபத்திய யோக பலனை எண்பது சதவீதம் அதன் தசையில் ஜாதகருக்கு கொடுக்கிறது.


 இயற்கை பாவ கிரகமான சனி மற்றும் செவ்வாய் அதன் தசையில் யோகத்தை தர‌ வேண்டுமாயின் நேரடியாக உச்சம் அல்லது ஆட்சி போன்ற ஸ்தான வலிமையை பெறாமல் திக் பலம் போன்ற அமைப்பில் இருந்து சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்ற நிலையில் அதன் தசையில் ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தருகிறது.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


For online appointment 


Cell & WhatsApp & gpay 

  097151 89647 


Other cell no

 7402570899



அன்புடன் 


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: