கிரகங்களின் சேர்க்கையினால் மாறுபடும் பலன்கள்.
கிரகங்கள் படுத்தும் பாடு- ( 127 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடுவதுபோல கிரகங்களும் சேரக்கூடிய இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறும் மற்றும் சேர்ந்துள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப பலனில் மாறுபாடு ஏற்படுகிறது.
கிரகங்களில் தலையாய கிரகமான சூரியபகவானை எடுத்துக்கொண்டால் இதனுடன் சந்திரபகவான் சேரும் சூழலில் ஒருவருக்கு அமாவாசையோகத்தை வழங்குகிறார்.சாதகரானவர் அமாவாசையில் ஜெனித்திருப்பார்.
அதேநேரத்தில் சூரியனோடு அவரின் புதல்வரான சனிபகவான் சேரும்போது தந்தை -மகன் உறவுநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சூரியனுக்கு சனிபகவான் பகை பெறுவதால் தந்தைக்கு ஆகாது என்பதால் இதுபோன்ற அமைப்பு உடையவர்களுக்கு அவரது சாதகத்தில் தந்தைஸ்தானமான ஒன்பதாம் இடமும் கெட்டு சாதகருக்கு இருந்தால் தந்தையால் எவ்வித லாபமும் இல்லாத சூழலும் மற்றும் இவன் பிறந்த பிறகு தந்தைக்கு எவ்வித யோகமில்லாத சூழலும் உருவாகிவிடுகிறது.
சூரியனோடு குருபகவான் சேர்ந்து பலப்படும்போது ஆன்மீக தலைவராக ஒருவரை மாற்றிவிடுகிறது.
சூரியனோடு செவ்வாய் பகவான் சேர்க்கையான ஒருவரை கபடு,சூது மற்றும் சூழ்ச்சி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது.
சூரியனோடு அரவுகளான ராகு மற்றும் கேது சேர்க்கை தந்தைஸ்தானத்திற்கு பாதிப்பையும் மற்றும் அரசாங்கயோகமும் கிடையாது.
சூரியபகவானோடு புதன் பகவான் இணைந்து பலப்பட "புத ஆதித்ய யோகத்தையும் மேலும் இவ்விரு கிரகங்களும் எட்டு,நான்கு மற்றும் ஒன்றில் சேர "அரசாளும் யோகத்தை "அளிக்கிறது.
இதேபோல ஒருவரது சாதகத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரபகவானும் மற்றும் மங்களநாயகன் செவ்வாய்பகவானும் ஒருவரது சாதகத்தில் இணைவு பெறாமல் இருப்பது பொதுவாக நல்லதுஂஇது ஒரு சிலரை காம எண்ணத்தை மிகுதியாக தந்து வேலி தாண்டிய வெள்ளாடு போல ஆக்கிவிடுகிறது.
இதேபோல சுக்கிரனுடன் சனிபகவான் சேர்க்கை மற்றும் அரவுகளான ராகு மற்றும் கேது பகவான் சேர்க்கையானது ஒரு சிலருக்கு திருமண தடையை உருவாக்கிவிடுகிறது.சிலநேரங்களில் திருமணம் நடைபெற்று இருந்தாலும் தம்பதிகளிடம் அன்யோன்ய தன்மை குறைந்து அதன் விளைவாக தவறான வழிகளில் ஈடுபட வைக்கிறது.
ஒருவரது சாதகத்தில் சனிபகவானின் ஜென்ம விரோதியான செவ்வாய்பகவானும் சேர்ந்து பார்க்கும் இடத்தை கெடுத்துவிடும்.ஒருவித சூழ்ச்சிதன்மையே மிகுந்திருககும்.
ஒருவரது சாதகத்தில் குருபகவானோடு சந்திரன்,செவ்வாய்,சனி மற்றும் கேதுபகவானின் இணைவு நன்மையை தரும்.மாறாக ராகு,சுக்கிரன் இணைவு நல்லதல்ல.
குருவோடு இணைந்த ராகுபகவான் புத்திர தடையை உருவாக்குகிறார்.குருபகவானின் எதிர்தன்மை உடைய சுக்கிரபகவான் இணைவு பெறாமல் இருத்தல் நலம்.
வித்தைகாரகன் புதன்பகவானோடு சனி,ராகு மற்றும் கேதுபகவான் கற்ற வித்தையில் பூர்ணத்துவம் அடையவிடாமல் தடைபெறலாம்.
செவ்வாய் பகவானோடு சேர்ந்த ராகு மற்றும் கேதுபகவான் சகோதரதோஷத்தை தருகிறது.பூமியோகத்தை தடைபடுத்துகிறதுஂ.விவசாய யோகத்தை குறைக்கிறது.
பொதுவாக ராகு மற்றும் கேதுபகவான் சேர்க்கையானது அந்தஸ்தான பலத்தையும் மற்றும் காரகபலத்தையும் குறைக்கிறது.
மேலே குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கையினால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே ஆகும்.இந்த பலன்களில் மாற்றம் ஏற்படலாம்.
சிலநேரங்களில் பார்வை ,நட்சத்திரசாரம் மற்றும் இருக்கும் ராசியாதிபதியின் வலு மற்றும் ஸ்தான பலம்...இதுபோன்ற பல்வேறு காரண்களினால் பொதுபலனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.இதுபோன்ற அமைப்பு தாங்களுக்கு இருப்பின் சோதிடரின் ஆலோசனை பெற்றே பலனை முடிவு செய்து கொள்ளவேண்டும்.
நன்றி!
------
(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருணபொருத்தம் மற்றும் பரிகாரவழிபாடு போன்ற பல்வேறு சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதகபலனை #போன்வழியாக பெறலாம்.
பிறந்த தேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும்.)
தொடர்புக்கு
வாட்ஸ்அப்
97 151 89 647
97 151 89 647
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
1 comment:
வாழ்த்துகள் ஐயா!!!
Post a Comment