புதன் பகவான் வழங்கும் புனித பணிகள் -(3)
கிரகங்கள் படுத்தும் பாடு -(122 )
ஸ்ரீபுதன் பகவான் சிற்றின்ப வாழ்வினை அளிக்க கூடிய சுக்கிரபகவானை தலைமையாக கொண்ட பொருள் அணியை சேர்ந்த ஒன்றாகும்.இந்த அணியில் புதனோடு ,சனி மற்றும் ராகு ஆகியவைகளும் அடங்கும்.
இந்த பொருள் அணியை சேர்ந்த புதன்பகவான் அளிக்கக்கூடிய புனித பணிகளை செவ்வாய்பட்டியில் எழுந்து என் நாவில் நிற்கும் ஸ்ரீபத்ரகாளியம்மன் துணையால் தொடர்ந்து எழுதி வருகிறேன்.படித்து பயன் பெற்று மற்றவர் பயன்பெற பகிருங்கள்.
ஸ்டேஷனரி பொருட்கள்;-
கல்வி சார்ந்த ஸ்டேஷரி பொருட்களை விற்கவும் மற்றும் அதில் லாபம் ஈட்டக்கூடிய அமைப்பை புதன் பகவான் வழங்குகிறார்.
இவை மட்டுமல்லாமல் புதன்பகவான் ஒருவரை நல்ல ஓவியனாக மாற்றி அழகு பார்க்கிறது.மக்கள்போற்றும் மகத்தான ஓவியர்களின் சாதகங்களை எடுத்து பார்த்தால் அவர்களது சாதகங்களில் புதன்பகவான் நல்ல அமைப்பில் இருப்பதை காணலாம்.
நல்ல நுண்கலை உணர்வினை அளிப்பதில் புதனுக்கு நிகர் புதனே ஆகும்.நல்ல சிலைகள் வடிக்கும் சிற்ப கலைஞராக ஒருவர் மாறுவதற்கும் புதன் பகவானின் அருளும் ஆசியும் அவசியமாகும்.
எவ்வளவு பேர் தொழில் ஆரம்பித்தாலும் அதில் ஒரு சிலர் திறமையாக செயல்பட்டு நாடு போற்றும் பெயர் சொல்லக்கூடிய நல்ல நிபுணத்துவம் பெற்ற வியாபாரிகளாக புகழ்பெற உதவுவது புதன்பகவானே ஆகும்.புதன் பகவானை பலமாக பெற்றவர்கள் நல்ல திறமை மிக்க லாபம் ஈட்டக்கூடிய வியாபாரிகளாக ஆகிவிடுகிறார்கள்.
சிலர் புத்தகம் ,நோட்டு மற்றும் நூல்கள் போன்றவற்றை அச்சிட்டு வெளியிடும் பிரஸ் உரிமையாளராகி அதன் மூலம் பொருள் ஈட்டக்கூடிய யோகத்தை புதன்பகவானே வழங்குகிறார்.
சிலர் ஒரு பொருளை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு சரியான மற்றும் நேர்மையான கமிஷன் வைத்து , வெளிப்படையாக வாங்குபவர் மற்றும் விற்பவர்களுக்கு தெரியும் வகையில் நேர்மையான தரகராக திகழ்வதற்கும் புதன்பகவானின் ஆசி அவசியமாகும்.
ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவருடைய அன்றாட நிகழ்வுகளை கவனிக்கவும் மற்றும் அவருடைய பணம் தொடர்பான கணக்குகளை கவனிக்கவும் நேர்மையான உதவியாளர் (personel assistant ) தேவையெனில் உதவியாளரது சாதகத்தில் புதன்பகவான் நல்ல நிலையில் இருக்கவேண்டும்..
ஒருவரது சாதகத்தில் புதன்பகவான் பலமடைந்து இருப்பவர்கள் வேடிக்கையாகவும்,விநோதமாகவும் மற்றும் நகைச்சுவை ததும்படியாகவும் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் நல்ல ஆலோசனை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
ஒருவருக்கு நல்ல ஆலோசனை வழங்கும் ஆலோசகராக திகழ்பவர்களது சாதகத்தில்
புதனாதிக்கம் இருக்கும்.
புதனாதிக்கம் இருக்கும்.
இலக்கிய ரசனை மிக்கவராகவும்,இலக்கண அறிவு உடையவர்களாகவும் திகழ புதன் பகவானே காரணமாகும்..
ஒரு இடத்தில் தலைமை பொறுப்பு பெறுவதற்குரிய தகுதி படைத்தவர்களாக இருப்பவர்கள் புதன் பகவானை பலமான அமைப்பாக பெற்றவர்களே ஆகும்.
சிலர் மாமன் வர்க்கத்தின் மூலம் அன்பும் மற்றும் அதிக ஆதரவும் பெறவும் .மேலும் இவர்கள் பிறந்தவுடன் மாமன் வீட்டு குடும்பம் முன்னேறவும் புதன்பகவானது ஆசியும் அருளும் ஆகும்.
தொடரும்....
(தங்களது குடும்ப உறுப்பினர்களது சாதகங்களை விரிவாக ஆராய்ந்து எல்லா பிரச்சினைகளுக்கும் மற்றும் உயர்வுக்கும் காரணமான கிரகங்களை ஆய்வு செய்து அதற்கான பரிகாரங்களையும் போன் வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு )
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற விவரங்களை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும்.
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
My website..click hear
AstroRavichandransevvai.blogspot.com
My email
masterastroravi@gmail. com
---------
................................................................
No comments:
Post a Comment