ஐந்தாம் பாவகம்- ஓர் அடிப்படை ஆய்வு
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 55 )
மனித வாழ்வில் கிரகங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை எல்லாம் வ்லல ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளோடு தொடர் பதிவாக எழுதி வருகிறேன்.இன்றைய ஐம்பத்தைந்தாம் பதிவாக "ஐந்தாம் பாவகம்" பற்றி விரிவாக பார்ப்போம்.
ஒரு மனித சாதக கட்டத்தில் இராண்டாவது திரிகோண ஸ்தானம்தான் இந்த ஐந்தாம் பாவகமாகும்.ஒருவருடைய பூர்வ புண்ணிய விபரங்களை பெற இந்த ஸ்தானத்தைதான் பார்க்க வேண்டும்.
ஒருவருக்கு பாட்டனால் தேடப்பட்ட சொத்து உண்டா ?என அறிந்துகொள்ளவும் அவ்வாறு இருந்தாலும் அந்த சொத்தால் சாதகருக்கு பயன் உண்டா ?என தெரிந்து கொள்ள இந்த ஸ்தானத்தைதான் ஆராய்சி செய்யப்பட வேண்டும்.
கீழ்கண்ட ஏதோ ஒரு வகை பாதிப்பால் பூர்வீக சொத்தால் பலனடைய இயலாமல் போக வாய்ப்பு உண்டு.
1) ஒருவருடைய சாதகத்தில் இந்த ஸ்தானத்தில் சுபர் பார்வை மற்றும் சேர்க்கையற்று அசயர்களான ராகு,கேது தொடர்பு பெற்றாலோ அல்லது ஐந்தாமாதிபதி அரவுகள் சாரம் பெற்றிருந்தாலோ சாதகர் பூர்வீக மனைகளில் வசிக்காமல் இருத்தல் உத்தமம்.
2) ஐந்தாமிடத்திலோ அல்லது அதன் அதிபதியோடோ ஆறாமாதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீக சொத்தால் எதிர்ப்புகள் உருவாகும்.அதேநேரத்தில் எட்டாமிட தொடர்பு பூர்வீக சொத்து பிரச்சினையால் கோர்ட் ,வழக்கு,சிறை செல்லல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
3) ஐந்தாமாதிபதி நீசம்,மறைவு மற்றும் அஸ்தமனம் போன்றவை ஏற்பட்டால் சாதகருக்கு பூர்வீக சொத்தே இருக்காது.
4) ஐந்தாமிடத்திற்கு பணிரென்டாமிட தொடர்பு இருப்பின் பூர்வீக சொத்து அதிகம் இருந்து பிறகு விரயமாகி இருக்கும்.
பூர்வீக சொத்தால் பலன் பெற:-
1) ஒருவருடைய சாதக கட்டத்தில் ஐந்தாம் கட்டத்தில் பாவர்கள் சேர்க்கை மற்றும் பார்யின்றியோ இருத்தல் அவசியம்.
2)ஐந்தாமிடத்தோடு ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாமிட அதிபதிகளின் தொடர்பு பெறக்கூடாது(பார்வை,சேர்க்கை மற்றும் நட்சத்திரசாரம்.போன்ற ஏதோ ஒரு வகையில்)
3)ஐந்தாமிட அதிபதி உச்சம்,மூலதிரிகோண மற்றும் ஆட்சி போன்ற அமைப்பில் ஏதாவது ஒரு வகையில் பலம் பெற்று பாவிகள் தொடர்பற்று இருத்தல்.
ஒருவர் முற்பிறவியால் உண்டான ஊழ்வினைப்பயனை இந்த ஸ்தானம் கொண்டு அறியலாம்.எனவேதான் நமது முன்னோர்கள் இந்த ஐந்தாமிடத்தையே "புத்திரஸ்தானமாகவும் வைத்திருக்கிறார்கள்.எனவே ஒருவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் அவர் செய்யும் பூர்வபுண்ணியத்திற்கும் தொடர்பு உண்டு.ஆதலால்தான் புத்திரஸ்தானமும்,பூர்வபுண்ணிய ஸ்தானமும் ஒன்றாக வைத்திருக்கிறார்.
"யார் செய்த புண்ணியமோ இப்படி ஒரு குழந்தை உன் வயிற்றில் பிறந்திருக்கு என்பார்கள". எனவே நம்மால் இயன்றவரை புண்ணியம் தரும் செயல்களான ஆதரவற்றோர்,ஊனமுற்றோர்கள் ,
பசியால் துடிப்பவருக்கு உதவுதல் மற்றும் கல்வி உதவி செய்தல் போன்ற தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்.
பசியால் துடிப்பவருக்கு உதவுதல் மற்றும் கல்வி உதவி செய்தல் போன்ற தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்.
ஒருவர் தனக்கு பிறக்கும் குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ள இந்த ஸ்தானம் மிக அவசியமாகும்.
ஒருவருக்கு ஐந்தாம் ஸ்தானம் பலம்பெற்று பாவர் " ஐந்தா சுப கிரக பார்வை மற்றும் சேர்க்கை பெறும்போது கல்வியாலும்,செல்வத்தாலும் சிறந்த குழந்தை பிறப்பான்.இவனுக்கு சூரியனும்,குருவும் பலப்படும்போது நாடாளும் குழந்தை பிறப்பான்.
அதேபோல ஒருவருக்கு புத்திர பாக்கியத்தை பெறுத்தவரை நான்கு விதமான வகையில் தோஷங்கள் உருவாகலாம்.
1). குழந்தை பிறக்க காலதாமதம் ஆதல்,
2) குழந்தை பிறந்து, பிறந்து நிலைக்காமல் இருத்தல்.
3) பெண் புத்திரம் மட்டுமே பிறத்தல்
4)புத்திர சந்தானமே இல்லாது போதல்.
பொதுவாக ஒருவருக்கு புத்திரதோஷம் உருவாக கீழ்கண்ட காரணங்களினால் உருவாகலாம்.
1)ஐந்தாமிடத்தில் அசயர்களான ராகு,கேது தொடர்பு,
2)ஐந்தாமாதிபதியானது ராகு,கேது சாரம் பெறுவது,
3)ஐந்தாமிடத்திலோ அல்லது அதன் அதிபதியோடவோ மறைவு ஸ்தான அதிபதி ஆறு மற்றும் எட்டாமிட தொடர்பு,
4)ஐந்தாமாதிபதி நீசம்,அஸ்தமனம் பெறுவது,
மேற்கண்ட எந்த ஒரு சுபர் பார்வை பெறாமல் இருப்பது ஆகும்.இவை தவிர புத்திரகாரகன் குரு மற்றும் ஐந்துக்கு ஐந்தாம் பாவமான ஒன்பதாமிடத்தையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்(ஐந்தாம் பாவம் பற்றிய கட்டுரையாதலால் இவற்றை விரிவாக விளக்கவில்லை).
பொதுவாக புத்திரதோஷத்தை ராசிக்கும் மற்றும் லக்கனத்திற்கும் ஐந்தாமிடத்தை தம்பதிகளான ஆண்/பெண் இருவருக்கும் விவாக பொருத்தம் பார்க்கும் சோதிடர் நன்கு கவனித்து இருவருக்கும் தோஷம் இருக்கும் பட்சத்தில் இணைக்ககூடாது.
ஒருவனுக்கு கற்பனை சக்தி மற்றும் புத்தி கூர்மையை தரும் ஸ்தானம் இந்த ஸ்தானமாகும்.இந்த ஸ்தனம் பலப்படும்போது கதை,கவிதை மற்றும் நற்றமிழ் புலவர்களால் பாடல்கள் இயற்றலும் மற்றும் வேத சாஸ்திரம் படித்தலும் உண்டாகும்.அறிவில் சிறந்த ஆன்றோர்,சான்றோர்களிடம் பழகும் வாய்ப்பை வழங்குவதும் இந்த ஸ்தானமாகும்.
ஒருவரது குல தெய்வம் பற்றி அறிந்து கொள்ளவும்,முற்பிறப்பு நிலை பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஸ்தானத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
(புத்திரபாக்கியம் தங்களுடைய சாதகத்தில் உண்டா?என்பதை விரிவாக கீழ்கண்ட வெப்சைட் முகவரியை கிளிக் செய்து படிக்க.பல தலைப்புகளில் பதிவுகள் இருக்கும் தேவையான தலைப்பை தேடி படிக்க
AstroRavichandransevvai.blogspot.com
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம்..
் வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
97 151 89 647
My Email:
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandransevvai.blogspot. com
.........
AstroRavichandran. blogspot. Com
AstroRavichandransevvai.blogspot. com
.........
No comments:
Post a Comment