கோடீஸ்வரர் ஆகும் யோகம் உங்களது சாதகத்தில் உண்டா ?
கிரகங்கள் படுத்தும் பாடு -( 25 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
ஒரு சிலர் அரசாங்கத்திற்கு கடன் கொடுக்கும் அளவிற்கே வசதி படைத்த கோடீஸ்வராக இருப்பார்கள் எப்படி இந்த யோகம் அவர்களுக்கு வந்திருக்கும் ? என ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர்களது சாதகத்தில் "தனம் ஸ்தானம்" எனப்படும் இரண்டாமிடம் மற்றும் "பாக்கியம"எனப்படும் வருமானத்தை தரும் ஒன்பதாமிடமும் ,"தொழில் ஸ்தானம்" எனப்படும் பத்தாமிடமும் மற்றும் "லாபஸ்தானம" எனப்படும் பதினொறாமிடமும் ஒருவரது சாதகத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ராகு இருக்கும் வீட்டிற்கு ஒன்பதாமிடத்தில் சுக்கிர பகவானும்,புதன் பகவானும் கூடியிருக்கவேண்டும்.இவ்வாறு கூடியிருப்பின் கோடீஸ்வரயோகமாகும்.
பொதுவாக ஒருவருக்கு தனம் யோகம் பெற்றிருக்க வேண்டுமெனில் அவனது சாதகத்தில் தனகாரகன் குரு பகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.இதேபோல தனஸ்தானம் ,பாக்கியஸ்தானம் ,
தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகிய நான்கு ஸ்தானங்களும் பலம்பெற்று இருந்தாலோ அல்லது தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று சேர்க்கை பெற்று சுப ஸ்தானம் ஏறியிருந்தாலோ தனயோகம் நிரம்ப பெற்றவராகிறார்.
தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகிய நான்கு ஸ்தானங்களும் பலம்பெற்று இருந்தாலோ அல்லது தங்களுக்குள் பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று சேர்க்கை பெற்று சுப ஸ்தானம் ஏறியிருந்தாலோ தனயோகம் நிரம்ப பெற்றவராகிறார்.
தனாதிபதி குரு வீடு ஏறி குரு பார்வை பெறுவதும் தனயோகத்தை தரும்.
தனஸ்தானத்திற்கு தன-லாப பரிவர்தனை,தன-பாக்கிய பரிவர்தனை,தன-தொழில்ஸ்தான பரிவர்தனை மற்றும் 3-9, 4-9 பரிவர்தனை பெறுவதும் தனயோகம் தரும்.
குரு உச்சம் பெற்று 1,2,5,9,11 போன்ற ஸ்தான தொடர்பு பெறுவதும் தன யோகத்தை தரும்.
லக்கனாதிபதியை ஐந்து கிரகங்கள் பார்ப்பதும்,சூரியன் பதினொன்றில் உச்சம்,ஆட்சி பெற்று வர்க்கோத்தமம் பெற்று குரு பார்வை பெறுவதும் தனயோகம் ஆகும்.
பல கிரகங்கள் சர ராசியில் இருந்து பலம் பெறுவதும் தன யோகத்தை தரும்.
மூன்று,ஆறு ,எட்டு மற்றும் பதிரெண்டாமாதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வது "விபரீத ராஜயோகத்தை"அதன் தசை புத்திகளில் தந்து தனயோகத்து தரும்.
ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்தனை ,சேர்க்கை மற்றும் ஒன்றுக்கொன்று சமசப்தம பார்வை பெற்றிருந்து
தர்ம -கர்மாதிபதி யோகத்தை பெற்றிருப்பது.
தர்ம -கர்மாதிபதி யோகத்தை பெற்றிருப்பது.
.குருவும்,சந்திரனும் சேர்ந்திருந்து
"குரு -சந்திர யோகம்" பெற்று
இருப்பது தன யோகத்தை உண்டுபண்ணும்.
"குரு -சந்திர யோகம்" பெற்று
இருப்பது தன யோகத்தை உண்டுபண்ணும்.
தனாதிபதியானது பாக்கியாதிபதி நட்சத்திரசாரம் பெற்று இருப்பின் பாக்கியயோகத்தை தரும்.
"வல்லரவு தனித்து நின்று
மறையவனோடு இசைஞானி
மறுவக்காணில் எல்லையிலலா
நிதிக்கு இறைவன் இவன் என்று
இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான்போலும்"
மறையவனோடு இசைஞானி
மறுவக்காணில் எல்லையிலலா
நிதிக்கு இறைவன் இவன் என்று
இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான்போலும்"
--என்ற பாடல் வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒருவரது சாதகத்தில் ராகு பகவான் தனித்து நின்று அந்த ஸ்தானத்திற்கு ஏழாம் இடத்தில் கேது பகவானோடு குரு பாகவான் இணைந்திருந்தால் எல்லையில்லா நிதிக்கு இறைவனாக இருப்பான்.
குறிப்பு : யோகத்தை தரும் வீட்டு அதிபதி பலம் குறையக்கூடாது.அந்த கிரகம் பாதகாதிபதியாக இருக்க கூடாது.
ஒருவருக்கு என்னதான் தனயோகம் உடையவர்களாக இருந்தாலும் அவருக்கு நடைபெறும் திசையானது உகந்ததாக அமையவேணாடும்.மாறாக ஆறு மற்றும் எட்டாமிட திசையோ அல்லது அட்டமசனி மற்றும் ஏழரை சனி காலங்களில் தன விரயத்தை ஒருவருக்கு உண்டாக்கும்.இதுபோன்ற காலங்களை ஒரு நல்ல சோதிடரின் உதவியுடன் அறிந்துகொண்டு பெரும் முதலீடு செய்து புதிய தொழில் முயற்சி செய்யாமல் இருத்தல் நலம்.
திசை உகந்ததாக இல்லாத காலங்களில் தனநஷ்டத்தை தவிர்க்க சாதகர் பண வரவு-செலவு விவரங்களை சாதகர் செய்யாமல் தனயோகம் உள்ள நபருக்கு மாற்றி செய்ய வைக்கவேண்டும்.
தனயோகம் தர
தனயோகத்தை சிறப்பாக உங்களுக்கு கிடைக்க வியாழன்தோறும் குருபகவான் வழிபாடு செய்யவும்.அன்றைய தினம் சுண்டல் அவித்து வழிபாடு செய்து பலருக்கு கொடுங்கள்.மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொள்ளுங்கள்.உங்களது அருகில் தென்முகமாக பார்க்கும்படி தெட்சிணாமூர்த்தி போட்டோவை வைத்து தினம்தோறும் குருஸ்தோத்திரம் செய்யுங்கள்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99
M.SC,MA,BEd
சோதிட ஆய்வாளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
செல் : 740 257 08 99
(தங்களது சாதகத்திற்கு சோதிட ஆலோசனையை போனின் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு .பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை மேற்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வங்கி விவரங்களை தெரிந்து கொள்ளவும் )
My Email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
AstroRavichandran. blogspot. com
**********************************////*
No comments:
Post a Comment