சாதக கட்டத்தில் பணிரெண்டாம் இடம்-ஒரு பார்வை
கிரகங்கள் படுத்தும் பாடு--( 205 )
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!
ஒருவரது சாதக கட்டத்தில் பணிரெண்டாம் இடம் என்பது மறைவிட ஸ்தானமாக இருந்தாலும் அவை மறைவிட ஸ்தானமான ஆறு மற்றும் எட்டாம் இடத்தினை போல அதிக இன்னல்களை தனது திசையில் தந்துவிடுவதில்லை.
ஒருவருக்கு அயன,சயன, நித்திரை சுகம்,படுக்கை சுகம் மற்றும் முக்தியோகம் போன்றவற்றை தரும் இடமும் பணிரெண்டாம் இடமே ஆகும்.
ஒருவரது சாதகத்தில் பணிரெண்டாம் இடத்தின் அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இருந்தால் அவருக்கு கடல் கடந்து செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.
ஒருவரது சாதகத்தில் பணிரெண்டாம் இடத்தில் கேது பகவான் இருக்க அவருக்கு மறுபிறப்பற்ற முக்தி யோகத்தினை அடைவர்.பணிரெண்டாம் இடத்தில் கேதுபகவான் இருந்து ஒன்பதாம் அதிபதியும் பலமடைந்து இருக்கின்ற நிலையில் முக்தியோகம் முழுமை அடையும்.
பணிரெண்டாம் அதிபதி சுப கிரகமாக இருந்தும் உச்சம், ஆட்சி பெற்று கேந்திரங்களில் இருந்து பணிரெண்டாம் இடத்தில் சுபகிரகங்கள் இருந்தாலும் அரசாட்சி செய்யும் மனிதராக இருப்பர்.அவர் செய்யும் விரயம் அனைத்தும் சுப விரயமாகவே அமையும்.
பணிரெண்டாம் இடத்தில் புதனிருந்து பாவ கிரகங்களின் சேர்க்கை,அல்லது பார்வை படுமாயின் அவரது செல்வம் அழிந்து கொண்டே இருக்கும்.
ஒரு சிலரது சாதகத்தில் பணிரெண்டாம் இட அதிபதி ஆறு மற்றும் எட்டாம் இடங்களில் இருந்து சனியும்,ராகுவும் பணிரெண்டாம் ராசியில் நிற்க அவர்களை சுப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் குடியிருக்க சொந்த வீடு இல்லை.
பணிரெண்டாம் அதிபதி இரண்டில் இரண்டாம் அதிபதி பணிரெண்டில் இருந்து லக்கனாதிபதி நீசமானால் சாதகரது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினை சென்றடையும்.
பணிரெண்டாம் இடம், நான்காம் இடம் பலம்பெற்று சுபர் பார்வை ஏற்பட்டால் வாகனம்,வீடு வசதியுண்டாகும்.
பணிரெண்டாம் இட அதிபதி ஒன்பதாம் அதிபதி உடன் சேர்ந்தோ அல்லது சூரியன் சேர்க்கை பெற்றோ இருந்தால் அந்த சாதகர் தந்தையை நன்கு பேணிகாப்பர்.
பிதுர்காரகன் ஆன சூரியனுக்கு பணிரெண்டில் இலக்கினாதிபதிபனும்,
இலக்கினாதிபதிபனுக்கு பணிரெண்டில் சூரியனும் இருந்தால் சாதகர் தந்தைக்கு விரோதியாக திகழ்வர்.
இலக்கினாதிபதிபனுக்கு பணிரெண்டில் சூரியனும் இருந்தால் சாதகர் தந்தைக்கு விரோதியாக திகழ்வர்.
இதேபோல மாதர்காரகன் ஆன சந்திரனுக்கு பணிரெண்டாம் இடத்தில் இலக்கினாதிபதியும்,
இலக்கினாதிபதிக்கு பணிரெண்டாம் இடத்தில் சந்திரனும் இருந்தால் சாதகருக்கு பெற்ற தாயே விரோதியாக இருப்பர்.
இலக்கினாதிபதிக்கு பணிரெண்டாம் இடத்தில் சந்திரனும் இருந்தால் சாதகருக்கு பெற்ற தாயே விரோதியாக இருப்பர்.
பணிரெண்டாம் இடம் என்பது இளைய மனைவிக்கு குடும்பம் ஸ்தானம் என்பதால் பணிரெண்டாம் இடம் வலிமை பெற சாதகருக்கு மனைவியல்லாத மற்றொரு குடும்பம் அமைய வாய்ப்பு உண்டு.
பணிரெண்டாம் இடம் பலம் பெற்ற அமைப்பினை பெற்வர்கள் மன்மதனைபோல காம சுகத்தினை அள்ளி வழங்கி திருப்திபடுத்துவதில் வல்லவர்.
பணிரெண்டாம் ராகு பகவான் ஒருவரை அந்நிய தேசம்,அந்நிய மொழி மற்றும் அந்நிய மனிதரோடு பழகக்கூடிய வாய்ப்பினை தனது திசையில் வழங்குவார்.
பணிரெண்டாம் இடத்தில் சுக்கிரன்,செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் படுக்கை சுகத்தினை பங்கு கொள்வதில் ஆர்வம் உடையவராக இருப்பர்.
பணிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் பலம்பெற்ற அமைப்பினை பெற்றவர்கள் சகல ஆடம்பர வசதிகளை அனுபவிக்கும் யோகம் பெற்றவராகிறார்.
குருபகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் கூடி பணிரெண்டாம் இடத்தில் இருப்பின் லெட்சுமியோகம் உடையவராக திகழ்வர்.
பணிரெண்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் பகையாக இருந்து சந்திரன்,செவ்வாய், சனி ஆகிய இம்மூவரும் பணிரெண்டாம் இடத்தில் இருப்பின் சாதகர் நில புலன்கள்,வீடு வாசலை இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகலாம்.
இதேபோல சூரியனும்,சந்திரனும் இணைந்து நிற்க கூடாது.அவ்வாறு நிற்பின் தரக்கூடிய பலன்களை பாடலாகவே தந்துவிடுகிறேன்.
"ஆறுமி ஆறு தன்னிலர
அம்புலி கதிரோன் சேர
கூறுவாய் ஈனன் என்று
கொடும் பிணி விரோதனன்று
சீருள அன்னை தந்தை
செல்வமும் விரயமாவதோடு
வேறுவேறாய் வாழ்வர்
வேதியர் உரைத்த வாக்கு"
அம்புலி கதிரோன் சேர
கூறுவாய் ஈனன் என்று
கொடும் பிணி விரோதனன்று
சீருள அன்னை தந்தை
செல்வமும் விரயமாவதோடு
வேறுவேறாய் வாழ்வர்
வேதியர் உரைத்த வாக்கு"
விதிப்பலனால் பணிரெண்டாம் இடத்தில் சூரியன், சந்திரன் இணைந்து பிள்ளை ஜெனித்தால் பெற்ற தாய் தந்தையர் ஒரே வீட்டில் இருந்தாலும் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.இவரகளது காலத்தில் சேர்த்த சொத்து இவர்கள் கண் பார்க்க அழியும் சூழல் உருவாகலாம்.விதிப்பலன் வேறு என்ன செய்வது.
நன்றி
வாட்ஸ் ஆ ப்
97 151 89 647
செல்
740 257 08 99
. 97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc,MA ,BEd
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
..
AstroRavichandran. blogspot. com
AstroRavichandransevvai.blogspot. com
..
No comments:
Post a Comment