கிரகங்கள் படுத்தும் பாடு- ( 22 )
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
"கண்ணின் கடைப்பார்வை காதலியார் காட்டி விட்டால் -மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் "
ஒரு சிலரை காதல் மீது ஆர்வத்தினையும் ,காதல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும்,மன உறுதியையும் தருவதில் கிரகங்களின் பங்கு அளப்பறியது.
சாதக கட்டத்தில் எந்த கிரகங்களாலும் மற்றும் ஸ்தானத்தாலும் ஒருவரை பெற்றோரும்,உற்றார் உறவினரும் எதிர்த்து நின்றாலும்
"இருபது வயது வரை என் பெற்றோர் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே உன் வசம் வந்தேனடா " என ஓடி கூட திருமணம் செய்ய வைத்துவிடுகிறது என்பதை "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் இருபத்திரண்டாம் பதிவில் பார்ப்போம்.
"இருபது வயது வரை என் பெற்றோர் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே உன் வசம் வந்தேனடா " என ஓடி கூட திருமணம் செய்ய வைத்துவிடுகிறது என்பதை "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் இருபத்திரண்டாம் பதிவில் பார்ப்போம்.
"ஒருவர் காதல் கோட்டை கட்டவேண்டுமெனில் அதற்கு அஸ்திவாரமாக சாதக கட்டத்தில் ஜந்தாம் இடம் முக்கியமானது ஆகும்.
ஜந்தாமிடமும் அதன் அதிபதியும் ஒருவருடைய கற்பனை ,புத்தி ,யுக்தி,எண்ணங்கள் ,காதல் உணர்வு ,எழுத்தாற்றல் ,மொழியாற்றல் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றிற்கு காரகமாக இருப்பதால் மேற்கண்ட யாவும் ஒருவருக்கு காதல் உணர்வை தூண்ட பாலமாக உள்ளது.
எனவே லக்கனாதிபதி மற்றும் ஜந்தாமிட அதிபதி சேர்க்கை மற்றும் பரிவர்தனை தெய்வீகமான நேர்மையான காதல் உணர்வை ஒருவருக்கு வழங்கும்.
ஜந்தாமிடம் மற்றும் லக்கன,குடும்ப ,களஸ்திர மற்றும் லாப ஸ்தான
( 5 மற்றும் 1,2,7,11 ) தொடர்பும் காதல் திருமணத்தை ஒருவருக்கு ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.இதில் குறிப்பாக ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பு காதல் திருமணத்தை தரும்.
( 5 மற்றும் 1,2,7,11 ) தொடர்பும் காதல் திருமணத்தை ஒருவருக்கு ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.இதில் குறிப்பாக ஐந்தாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பு காதல் திருமணத்தை தரும்.
ஒருவரின் ஜாதகத்தில் இந்த ஜந்தாமிட அதிபதியும் ,கற்பனை ,ஆசை ,காதல் உணர்வை தரக்கூடிய மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பகவானும் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்துவிட்டால் அவர் எளிதில் காதல் வசப்பட்டுவிடுவார்.
(இரு பாலருக்கும் பொருந்தும் )
இதில் துளிகூட ஜயமில்லை.
(இரு பாலருக்கும் பொருந்தும் )
இதில் துளிகூட ஜயமில்லை.
ஒருவரது வாழ்க்கை துணையை குறிக்கும் பாவம் ஏழாம் பாவம்,களஸ்திரகாரகன் ஆடவருக்கு சுக்கிர பகவானும்/பெண்டிருக்கு செவ்வாய் பகவானும் இணைந்து இவர்களுடன் லக்கனாதிபதியும்,ஐந்தாமாதிபதியும் தொடர்பு கொள்ள இவர்களுக்கிடையே உருவான காதல் யாராலும் பிரிக்க முடியாத காதலாகிவிடும் என்பது திண்ணம்.
ஒருவரது வாழ்வில் ஏற்படும் வெற்றிக்கும் ,மகிழ்ச்சிக்கும்,யோகத்திற்கும் மற்றும் காதல் திருமணத்திற்கும் குரு பகவானும்,ஒன்பதாமாதிபதியான பாக்கியாதிபதியின் ஆசியும் ,அருளும் தேவை .எனவே இவர்களது பார்வை மற்றும் சேர்க்கையும் அவசியமாகும்.
ஜந்தாம் அதிபதியும்,ஏழாம் அதிபதியும் மற்றும் ஒன்பதாம் அதிபதியும் இம்மூவரும் கேந்திர திரிகோணங்களில் மற்றும் தனலாபமேறி சுபர் பார்வை பெறின் காதல் திருமணம் கைகூடி நீண்ட மகிழ்சியை ஒருவருக்கு வழங்கும்.மாறாக இம்மூவரும் மறைவு ஸ்தானங்களான ஆறு ,எட்டு ,பணிரெண்டாமிடம் போன்ற இடங்களில் மறைந்தாலும் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த சாதகருக்கு உருவாகும் காதல் தோல்வியில் போய் சேரும்.மீறியே திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு சிலர் பெற்றோரே எதிர்த்து திருமணம் செய்துகொள்ள காரணம் அவர்களது சாதகத்தில் களஸ்திரகாரகன் சுக்கிர பகவான் ஆறு அல்லது எட்டாம் இடத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று பாவிகளால் பார்க்கப்பட்டாலும் எதிர்ப்பில் திருமணம் நடக்கும்.
இதேபோல ஏழு மற்றும் எட்டாம் அதிபதிகள் இணைந்து ஆறு,எட்டு,பணிரெண்டாமிடத்தில் மறைந்து சனியால் பார்க்கப்பட்டாலும் பெற்றோரை எதிர்த்தே திருமணம் நடைபெறும்.
சிலர் கலப்புமணம் செய்துகொள்வதற்கு அவரது சாதகத்தில் களஸ்திரகாரகன் என ஆண் ,பெண் இருபாலருக்கும் கூறக்கூடிய சிற்றின்ப ஆசையை தூண்டும் கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைந்து கேந்திர ஸ்தானம் பெற்றிருக்கும்.
சிலர் தன் தகுதிக்கும் ,தரத்திற்கும் கீழான இடத்தில் காதல் மணம் செய்துகொள்ள காரணம் அவர்களது சாதக கட்டத்தில் ஏழாமிட அதிபதி ஆறு ,எட்டு இதில் ஓரிடத்தில் நின்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெறும்போது இதுபோன்ற அமைப்பு ஏற்படும்.
பொதுவாக ஒருவருக்கு காதல் மற்றும் காம உணர்வு தூண்டும் கிரக அமைப்பை பெற்றிருப்பவர்கள் ராகு திசையோ அல்லது புத்தியோ நடக்கும்போது இதுபோன்ற தகுதி தராதரம் அறியாமல் உடல் காட்டும் ஆசையில் தவறான முடிவெடுத்து வீட்டைவிட்டு கிளம்பி காதல் மணம் புரிந்து "ஆசை அறுபது மோகம் முப்பது "என மூன்று மாதம் சென்ற பிறகு உடல் காட்டிய சிற்றின்ப ஆசை முடிந்தவுடன் பொருளாதய பிரச்சினை வந்தவுடன் "நான் உன்னை திருமணம் செய்து கொண்டது தவறு ? உன்னை கட்டிக்கொண்டு என்ன சுகம் கண்டேன் ? என இவள் கேள்வி அவன் பதில் கேள்வி கேட்க என பிரச்சினையிலும் ,கஷ்டத்திலும் வாழ்க்கை நகர்த்துபவர்களும் உண்டு.வழக்காடு மன்றாம் நாடி சென்று விவாகரத்து வாங்கி கொள்பவர்களும் உண்டு.
இளம் வயதில் சுக்கிர திசை வரக்கூடாது என்பதும் இதற்காகத்தான்.இளம் வயது சுக்கிரன் தன்னை அழகுபடுத்தி கொள்வதிலும் ,கற்பனை உணர்வையும் தூண்டி தவறான வழியை தேர்ந்தெடுக்கவைக்கும் என்பதால்தான்.
எனவே காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுப்பவர்கள் தங்களது சாதகங்களை நன்கு ஆய்வு செய்து அந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால் மட்டும் திருமணம் செய்துகொள்ளல் உத்தமம்.இதைவிட்டு இரண்டு மனம் ஒத்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதத்திற்கு வர நான் தயாராக இல்லை.திருமணத்திற்கு முன்பு வரும் மனம் ஒத்த கருத்து உடலியல் கவர்ச்சியால் வருவதே ஆகும்.இன்றைய கால கட்டத்தில் நூற்றில் ஒரு நபரே திருமணத்திற்கு பிறகும் மனமொத்த காதல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.பாதிபேர் சமூக ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்ற காரணத்தால் திருமண வாழ்க்கை நகர்கிறது.
நன்றி நன்றி நன்றி.
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் ரவிசாசந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியிதல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர் ரவிசாசந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளர்
முதுநிலை வேதியிதல் ஆசிரியர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647
740 257 08 99
740 257 08 99
வாட்ஸ்அப் : 97 151 89 647
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
சோதிட தpகவல்களை விரிவாக படிக்க
Google Search my Blogspot
"""""""""""""""""""""""""""""""""""""""
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
****************************************************************************
Google Search my Blogspot
"""""""""""""""""""""""""""""""""""""""
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandran. blogspot. com
****************************************************************************
No comments:
Post a Comment