Sunday, 5 August 2018

கிரகங்கள் படுத்தும் பாடு--( 64 )

கிரகங்கள் படுத்தும் பாடு-(64)


                                    

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

குட்டி தகவல்கள்

இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் தரும் பலன்கள்;-

1)குரு+கேது -ஆன்மீக சிந்தனை

2)குரு+ராகு-பகுத்தறிவு சிந்தனை
      
3)சுக்கிரன்+செவ்வாய் -காம எண்ணம் உண்டாதல்

4)செவ்வாய்+ராகு-காமசிந்தனை

5)சூரி+செவ்வாய்-கபடு,சூழ்ச்சி

6)சூரி+குரு-ஆன்மீக தலைமை

7)சூரி+ராகு
சூரி+சனி    - தந்தை,மகன் உறவுநிலை பாதிப்பு

8)சந்+ராகு
சந்+சனி --மனக்குழப்பம்,தாய் பாதிப்பு

9)சந்+கேது-ஞானம் பெறுதல்

10)சனி+செவ்வாய்-பொய்,ஏமாற்று

11)சூரி+புதன்-சரஸ்வதியோகம்,
                         அரசாளும்யோகம்

12)சூரி+சந்-அமாவாசையோகம்
                     -தந்தை பாதிப்படைதல்

12)குரு+சனி-குருசண்டாளயோகம்

13)சனி+ராகு-சூழ்ச்சி,ஏமாற்றுத்தனம்

14)புதன்+கேது-சோதிடஞானம்

15)புதன்+ராகு-திருட்டுதனமான வித்தை,மாமன் உறவு பாதிப்பு,பொய் கணக்கு எழுதுதல்

16)புதன்+சந்திரன்-இசை ஆர்வம்,நகைச்சுவை பேச்சு,வேடிக்கை,விநோதம்

17புதன்+குரு-கல்வியில் உயர்வு

18)சுக்கிரன்+ராகு-காமம்,வாகனபாதிப்பு

19)சந்+செவ்வாய்-சசிமங்களயோகம்,மனைவியால் யோகம்.

20)குரு+சந்-குருசந்திரயோகம்,தனவரவு

21) சூரியன்+கேது-ஆன்மீக சிந்தனை

22) சூரியன்+செவ்வாய்-வீம்பு,வீண்விவாதம்,விதவை

23) புதன்+சனி-வித்தையில் பலவீனம்,அலித்தன்மை

24) புதன+செவ்வாய்-வித்தையில் சாதுர்யம்

25) குரு+செவ்வாய்-குருமங்களயோகம்

மேற்கண்ட கிரகங்கள் சேர்வதால் தரும் பலன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.எவ்வாறு எனில்

1)சுபகிரகங்களின் பாரவைப்பட்டால் பலன் மாறலாம்.

2)கிரகங்கள் இருக்ககூடிய அந்த வீட்டு அதிபதி பலம் பெற்றிருப்பின்

3)கிரகங்களின் ஸ்தானம் பலம்பெற்றிருந்தால் மாற வாய்ப்பு உண்டு.உதாரணமாக சூரி+ராகு சேர்க்கை தந்தையால் எந்த லாபம் இல்லை என பலன் சொல்வதற்குமுன் ஒன்பதாம் அதிபதியை கவனிக்க வேண்டும்.அவை பலம் பெற்றிருந்தல் பலன் மாறி தந்தையால் ஆதாயம் உண்டாகும்.

எனவே சோதிட பலனை மேற்கண்ட அடிப்படையில் அப்படியே எடுத்துக்கொள்ள இயலாது.

இரண்டு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருந்தால் முழுப்பலன் மேற்கூறியபடியே நடக்கும்.

                          

அன்புடன்

சோதிடர்ரவிச்சந்திரன்
 M.Sc,MA,BEd,
சோதிட ஆய்வாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம்.

செல் : 97 151 89 647
செல்: 740 257 08 99

வாட்ஸ் அப்
   97 151 89 647

(உங்களுடைய சாதகபலனை நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் போன் வழியாகவே முழுப்பலன் ஆய்வு அடிப்படையில் பெறலாம்.எனது வாட்ஸ்அப் எண்97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை அனுப்பி பலன் பெறலாம்.கட்டணம் உண்டு)

No comments: