கிரகங்கள் தரக்கூடிய கல்வி நிலைகள்.
கிரகங்கள் படுத்தும் பாடு -(8)
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணையுடன்...
கிரகங்கள் தரும் கல்வி நிலைகளையும் மற்றும் அவைகள் தரும் புலமைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம்.இப்பதிவில் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
செவ்வாய் பகவான்
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பகவானை வலிமையாக பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் ஈடுபட வைக்கிறது.ஏனெனில் செவ்வாய் பகவான் ரத்தத்தின் காரகர்.செவ்வாய் பகவான் வலுப்பெற்று சுப சாரம் மற்றும் பார்வை பெற்றவர்கள் நேர்மையான சேவை மனப்பான்மை மிக்கவர்களாக மாற்றுகிறது.
அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்றாலும் பாவிகளின் தொடர்பை பெற்றவர்கள் மருத்துவர்களாக இருந்தாலும் சேவை மனப்பான்மை குறைந்து பணநோக்கோடு பணிபுரிய வைத்துவிடுகிறது.
செவ்வாய் பகவான் வலிமையின் காரகராக இருப்பதால் போலிஸ்,ராணுவம் போன்ற துறைகளில் ஆர்வமுடையவராக மாற்றுகிறார்.
செவ்வாய் பகவான் பூமி மற்றும் பூமி சார்ந்த விவசாயத்திற்கும் காரகராக இருப்பதால் விவசாய தொடர்பான அக்ரிகல்சர் போன்ற துறைகளில் ஈடுபட வைப்பார்.
இவை மட்டுமல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் ,மெஷினரி மற்றும் என்ஜினிரியரிங் போன்ற கல்வி நிலைகளின் மீது ஆர்வத்தினை உண்டாக்குவார்.
புதன் பகவான்
பலமடைந்த புதன் பகவானை தனது சாதகத்தில் பெற்றவர்கள் கணிதம் சார்ந்த துறைகளில் புகழ் பெற்றவர்களாகவும்,கணிப்பொறி இயக்கும் வல்லுணர்களாகவும்,கதை,கவிதை
,கட்டுரை ,தலையங்கம் எழுதுவதில் வல்லவராகவும் இருப்பர்,தலை சிறந்த சோதிட ஞானம் பெற்றவராகவும் திகழ்வர்.
ஒரு சிலர் தலைசிறந்த ஆசான்களாகவும்,கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களாகவும் விளங்குவார்.
சூரியன் பகவான்
சூரியன் பகவான் தரும் கல்விநிலைகளை பற்றி பார்ப்போம்.ஒருவர் ஜாதகத்தில் சூரிய பகவான் வலுப்பெற்றிருப்பின் மின்சாரம் சார்ந்த படிப்புகளை படிக்க வைப்பார்.
" இவர் அரசாங்கத்தின் காரகர் அரசியல் சார்ந்த பெலிடிக்கலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிப்பதற்கு ஆர்வமூட்டுவார்.மேலும் மருந்துப்பொருட்கள் சார்ந்த படிப்புகளிலும் ஆர்வமூட்டுவார்.
இவை மட்டுமல்லாது ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில் ஈடுபடலாம்."
சந்திரன் பகவான்
அடுத்தப்படியாக சந்திர பகவான் மனதிற்கு காரகர் .மேலும் நீர்கிரகம்
மற்றும் பால் தொடர்பானவைகளுக்கும் காரகராகவும் உள்ளவர்.எனவே ஒருவருடைய சாதகத்தில் சந்திரன் பலம் பெற்றால் கற்பனை சக்தியை தூண்டக்கூடிய ஆராய்சி படிப்புகள்,விவசாயம் தொடர்பான படிப்புகள் மற்றும் பால் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் அவை
சார்ந்த மருத்துவராகவும் இருப்பார்.
குரு பகவான்
பலமடைந்த குருபகவானை பெற்றவர்கள் ஆசிரியர்,பேராசிரியர் போன்ற போதகர்களாக திகழ்வர் .ஆன்மீக சொற்பொழிவாளர்களாகவும்
வழக்கறிஞர்களாகவும்,,அருள் வாக்கு சோதிடர்களாகவும் இருப்பர்.
சுக்கிரன் பகவான்
பொறியியல் நிபுணராகவும்,கலை ,இலக்கிய நாட்டம் உடையவராகவும் இருப்பர்.நடனம்,இசையில் நாட்டம் உடையவராகவும் திகழ்வர். சினிமாத்துறை ஆர்வம் உடையவராகவும் இருப்பர்.
அழகு கலை உடையவராகவும் இருப்பர்.
சனி பகவான்
இதனைத்தொடர்ந்து சனி பகவான் தரும் கல்விகளை பற்றி பார்ப்போம்.
இவர் இரும்புக்காரகர்.எனவே இவை வலுப்பெற்றிருப்பின் பொறியியல் வல்லுனர்களை உருவாக்குவார்.மெக்கானிக் மற்றும் மின்சாரம் சம்பந்தப்பட்ட என்ஜினியராக்கி விடுவார்.
சனி பகவான் கீழ் மட்டநிலை தொழிலாளராகவும்,மசகு,எண்ணெய் பிசின்களை அப்பிகொண்டு வேலை பார்க்ககூடிய மெக்கானிக் வேலை பார்ப்பவர்களாகவும் இருப்பர்.தான் பார்க்கும் வேலையினை மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட இயலாத பணிகளை புரிபவராகவும் இருப்பர்.
ராகு பகவான்
" ராகு பகவான் பலம் பெற்றிருப்பின் விஷத்தை தரக்கூடிய உரம்,பூச்சி மருந்து மற்றும் மனிதர்களுக்கு உதவக்கூடிய மருந்தாக்க வேதியியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக மாற்றி அழகு பார்ப்பார்.
கணிப்பொறி இயக்குவதில் வல்லவராகவும்,இனையத்தினை றயன்படுத்தி செய்யப்படும் வணிகத்தில் புகழ்பெற்றவராகவும் திகழ்வர்.
ஷேர் மார்க்கெட்,வெளிநாட்டு வாசம்,பி்ல்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவராகவும் விளங்குவார்.
கேது பகவான்
ஒரு மனிதரின் ஜாதக கட்டத்தில் இரண்டு ,ஐந்து மற்றும் ஒன்பது போன்ற ஸ்தானங்களில் கேது பகவான் பலம் பெற்றிருப்பின் ஜாதகரை சிறந்த ஜோதிடராக மாற்றுவதில் வல்லவர்.அது சார்ந்த நூல்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்.
மேற்கண்ட கிரகங்கள் கீழ்கண்ட ஸ்தானங்களில் நின்று பலம் பெறும்போது கல்வியில் உயர்நிலையை அடைய முடியும்.
இரண்டாமிடம் -ஆரம்ப கல்வி
நான்காமிடம் -உயர்கல்வி
ஐந்தாமிடம் -கல்வியில் புலமை
எட்டாமிடம் -ஆராய்சி படிப்பு
ஒன்பதாமிடம் -மேல்நிலைப்படிப்பு
போன்ற ஸ்தானங்களில் நவ கிரகங்கள் நின்று பலம்பெறும்போது அந்த கிரகங்கள் காட்டும் கல்வி நிலைகளில் திறமையுடையவனாக மாற்றி புகழ் பெற செய்யும் என்ற தகவலோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
(Teacher & Astrologer)
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 97 151 89 647
Cell: 740 257 08 99
Whatsup no
97 151 89 647
(போனின் வழியாக தங்களது சாதக பலனைப்பெறலாம்.கட்டணம் உண்டு.தொடர்பு கொள்ளவும்.தங்களது பிறந்ததேதி ,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விவரங்களை பெறவும் )
My email id
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
....AstroRavichandran. blogspot. com
..................
No comments:
Post a Comment