Friday, 6 June 2025

10' th and +2 முடித்த பிறகு உங்கள் ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் நீங்கள்?

 10 'th and +2 முடித்த பிறகு உங்கள் ஜாதகப்படி என்ன படிப்பு படிக்கலாம் நீங்கள்?


 


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை! 


   தனது பிள்ளைகள் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் என்ன படிப்பு படிக்க வைக்கலாம் ? .எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் ? இது போன்ற குழப்பங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் .


      உங்கள் பிள்ளைகளுக்குரிய படிப்பு துறையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவர்களுடைய ஜாதகத்தை தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று அலசி ஆராய்ந்து பார்ப்பது என்பது சாலச் சிறந்த ஒன்றாகும். 


    மாணவர்களுடைய படிப்பை முடிவு செய்வது என்பது பெற்றோர்களுடைய விருப்பத்தை அதில் திணிப்பது அல்ல. பிள்ளைகளுக்கு எந்த துறையில் படிக்க ஆசை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அவை சார்ந்த விஷயங்களில் படிக்க வைக்கும் பொழுது தான் அவன் பிற்காலத்தில் ஒரு சாதனை மிக்க மாணவனாக திகழ்வார் .இதனை தவிர்த்து தனது சுய வெறுப்பு வெறுப்புகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது.


கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் தான் விளையாட்டாக கூறுவார் .

" புத்தகங்களே பிள்ளைகளை கிழித்து விடாதீர்கள் ''என்பார். .


    எனவே தங்களது பிள்ளைகளை அவர்கள் விருப்பப்படி படிக்க வையுங்கள் அவர்கள் விருப்பப்படி என்பது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்தன்மையோடு ராசி மற்றும் லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்தோடு தொடர்பு கொள்கிறதோ, அந்த கிரகம் சார்ந்த துறைகளில் எண்ணங்களும் செயல்களும் உருவாகி அவை சார்ந்த விஷயங்களை நிச்சயமாக மாணவனுக்கு படிப்பதில் ஆர்வம் இருக்கும் என்பதை உறுதிப்பட உங்களுக்கு கூறுகிறேன்.


 ஆகவே ஜாதக கட்டத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையோடு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.


    ஆதலால் முதலில் உங்கள் பிள்ளைகளை எந்த துறையில் படிக்க வைக்கலாம் என்பதை முடிவு செய்து அதற்கு முன்பாக அவர்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சென்று அவர்கள் ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமை அடுத்து லக்கனத்துடன் எந்த கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் அதிகமாக தொடர்பு கொள்கிறதா ? போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்த்து அவரது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையோடு இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும் அவ்வாறு ஒரு ஜாதகத்தில் சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் அதிக சுபத் தன்மையோடு இருக்கும் பொழுது அதில் எந்த கிரகம் தொழிற் ஸ்தானத்தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகம் சார்ந்த படிப்பை மாணவன் தேர்ந்தெடுக்கும் போது நிச்சயமாக அதில் வெற்றி பெறக்கூடிய தன்மையை உங்கள் பிள்ளைகளுக்கு உண்டாக்கும்.


  இரண்டு மூன்று கிரகங்கள் சுபத்தன்மையோடு இருக்கும் பொழுது அதில் எந்த கிரகம் ஸ்தான வலிமை பெற்று இருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்


     எந்தக் கிரகம் ஜாதக கட்டத்தில் அதிக சுப தன்மையோடு இருக்கிறது ? என்பதை கண்டுபிடிப்பது எல்லோருக்கும் எளிய விஷயம் அன்று. இதற்கு மேம்பட்ட ஜோதிட ஞானமும் மற்றும் நிறைய ஜாதகங்களை ஆய்வு செய்து பார்த்த சோதிட அனுபவமும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.


   உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்தன்மையுடன் இருக்கிறது ? என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக முதலில் 

சுப தன்மை என்றால் என்ன ? மற்றும் 

 பாவத்தன்மை என்றால் என்ன ? 

 போன்ற விஷயங்களை ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


      சுப தன்மை என்றால் உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் இயற்கை சுப கிரகமான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் ,,பாவி உடன் சேராத தனித்த புதன் மற்றும், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.


    பாவத்தன்மை என்பது உங்கள் ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் 

சனி, செவ்வாய், ராகு, கேது தேய்பிறை சந்திரன் மற்றும் பாவியுடன் சேர்ந்த புதன் போன்ற கிரகங்களுடன் பார்வை அல்லது எனது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அவை ஜாதக கட்டத்தில் பாவத்தன்மை அடைகிறது என்று அர்த்தமாகும்.


   மேற்கண்ட இரண்டையும் தெரிந்து கொள்வது என்பது சாதாரண நடைமுறையாகும் .ஆனால் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுப தன்மையுடன் இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு இன்னும் சற்று கூடுதலான சோதிட அனுபவம் தேவைப்படுகிறது.


     உங்களுடைய சாதகத்தில் எந்த கிரகம் இரண்டு மூன்று சுப கிரகங்களுடன் பார்வை அல்லது சேர்க்கை முறையான தொடர்பை பெற்றிருக்கிறது என்பதையும் அதிகமாக கவனிக்கப்பட வேண்டும். அவ்வாறு எந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தை முதன்மையான சுபத்துவம் பெற்ற கிரகமாக கருதப்பட வேண்டும்.


இவ்வாறு முதன்மையான சுபத் தன்மையை பெற்ற கிரகத்தை கண்டறிந்து அந்த கிரகம் உங்களுடைய ஜாதக கட்டத்தில் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்துடனும் மற்றும் தன ஸ்தானமான இரண்டாம் இடத்துடனும் தொடர்பு கொண்டு உள்ளதா ? என்பதையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.


 இவ்வாறு கண்டறிந்த பிறகு அந்த காலகட்டத்தில் நடக்கக்கூடிய தசா புக்திகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். 


     முதன்மையான சுபத் தன்மை பெற்ற கிரகத்தின் கல்வித்துறையை தேர்ந்தெடுக்கும் போது உகந்த தசா புத்திகள் ஒத்துழைக்கும் போது தான் அந்த துறையில் படித்து உங்கள் பிள்ளை வெற்றி பெற முடியும். எனவே தசா புத்தி ஆய்வு செய்து அவ்வாறு தசாபுத்தி உகந்த யோகத்தை தரக்கூடிய தசா புக்திகளாக இருக்கக்கூடிய பட்சத்தில் அந்த துறையை தேர்ந்தெடுத்து உங்கள் பிள்ளையை படிக்க வைக்கும் பொழுது எதிர்காலத்தில் அந்த கல்வித் துறையின் மூலமாக உயர்ந்த புகழையும் மற்றும் பணத்தையும் சம்பாதிக்கக்கூடிய சூழலை சாதகருக்கு உருவாக்கிக் கொடுக்கும்.


    உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் உள்ள சுபத்துவ படி நிலைக்கு ஏற்ப அந்த துறையில் உயரிய நிலை, நடுத்தர நிலை மற்றும் கீழ்மட்ட நிலை ஆகியவை அமையும்.


    செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் அதிக சுப தன்மையுடன் இருந்து அவை தொழில் ஸ்தானமான பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் எம்பிபிஎஸ் படிப்பு படிப்பார். சற்று சுப தன்மை குறையும் பொழுது மருத்துவம் சார்ந்த இதர துறையில் படிப்பார். அதனை அடுத்து விவசாயத் துறை படிப்பார் .அதற்கு அடுத்த நிலையில் போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். இன்னும் குறைவான சுபத்துவ படிநிலை கொண்டுள்ள போது டீ பார்ம், நர்சிங் மற்றும் பிளட் டெஸ்ட் சென்டர் போன்ற துறைகளில் ஈடுபட வைக்கும்.


   குருபகவான் அதிக சுப தன்மையுடன் இரண்டு மற்றும் 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ஆசிரியர் துறையில் ஈடுபட வைப்பார். 


 ஸ புதன் பகவான் அதிக சுப தன்மையுடன் இரண்டு மற்றும் பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது கணிதம், , கம்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம்(ID field ) இசையில் ஈடுபாடு போன்ற துறை வழியாக படிக்க வைப்பார்.


   சுக்கிரன் பகவான் அதிக சுபத்தன்மையுடன் இரண்டு மற்றும் பத்தாம் இடத்தில் தொடர்பு கொள்ளும் பொழுது கேட்டரிங், பியூட்டி பார்லர், டிரான்ஸ்போர்ட் ,விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் நடனம் இது போன்ற துறைகளில் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.


சனி பகவான் அதிக சுபத் தன்மையுடன் இருக்கும் பொழுது அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட வேலை, குடிக்க இயலாது திரவம் சம்பந்தமாக படிப்பதில் ஆர்வம் ,மெக்கானிக் கனரக வாகனங்களை இயக்குதல், சுரங்கம் தொடர்பான படிப்பு போன்ற வகையில் ஈடுபட வைப்பார்.


   ஒளிக்கிரமான சூரியன் மற்றும் சந்திரன் வலிமை பெற்று பௌர்ணமி அமைப்பில் பிறந்திருக்கும் பொழுது அரசின் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை ஜாதக பெறுவார் .


    சூரிய பகவான் அதிக சுபத்துடன் இருக்கும்பொழுது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், மின்சாரம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் போன்ற துறைகளில் படிக்க அதிக ஆர்வம் உண்டாகும்.


 சந்திரன் பகவான் அதிக சுபத்துவ நிலையில் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு ஆர்வம் ஏற்படும். 


 இதே போல ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆயிரக்கணக்கான துறைகள் விரிந்து கிடக்கிறது .அதில் ஒன்று இரண்டை மட்டும் மேலே கோடிட்டு காட்டு உள்ளேன். முழுவதையும் இந்த ஒரே பதிவில் பெற முடியாது. உங்கள் பிள்ளைகளுக்கு என்ன படிக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைகளுடைய ஜாதகத்தை பொறுத்து அமைகிறது என்பதை இந்த பதிவில் விளக்குவதே எனது நோக்கமாக அமைந்தது. முழு விவரங்களையும் ஜோதிடரிடம் நேரடியாக ஆலோசனை பெற்று தெரிந்து கொள்ள வேண்டும்..


நன்றி.


ஜோதிட ஆலோசனைக்கு


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: