Tuesday, 3 June 2025

வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு ஜாதகத்தில் பலன் அறிவது எப்படி?

 வாழ்வின் முக்கிய கேள்விகளுக்கு ஜாதகத்தில் பலன் அறிவது எப்படி?





செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஜோதிடம் தொடர்பான விஷயங்களை படிப்பதற்கும் மற்றும் அதை புரிந்து கொள்வதற்கும் ஒரு வித ஆர்வம் கலந்த ஞானம் வேண்டும் என்றாலும் ஜோதிட பலன்கள் சொல்வதற்கு மேம்பட்ட பயிற்சி அவசியம் தேவையாக உள்ளது .இதை விளக்குவதற்கு ஒரு உதாரண ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்கலாம்.


    உதாரணமாக 



ரிஷப லக்னம், விருச்சிக ராசி மற்றும் கேட்டை நட்சத்திரம் .


     ஏழாம் இடத்தில் தேய்பிறை சந்திரன்,ராகு நின்று கும்ப லக்னத்தில் சனி பகவான் நின்று தனது பத்தாம் பார்வையால் ஏழாம் இடத்தில் உள்ள சந்திரன் மற்றும் ராகுவை பார்வை செய்து கூடுதல் பாவத்துவம் அடைய செய்து விட்டது.


 ஏழாம் இட அதிபதி செவ்வாய் , குடும்ப மற்றும் புத்திர ஸ்தான அதிபதி புதன் , களத்திர காரகன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைந்து சூரியனால் அஸ்தமனம் அடைந்து தனது பலத்தை இழந்து விட்டது.


  ராசி வழியாக ஆராய்ந்து பார்த்தால் ராசியில் சனி + ராகு தொடர்பு மற்றும் ஏழாம் அதிபதி சுக்கிரன் பலவீனம் 


   மேற்கண்ட இந்த விதிகளை மட்டும் வைத்து கொண்டு குருவின் பார்வையை கணக்கிடாமல் பலன் சொல்ல போனால் இந்த ஜாதகருக்கு இதுவரை 17.03.2025 வரை திருமணம் நடந்து இருக்காது.


    ஆனால் இவருக்கு திருமணம் ஆகி விட்டது, புத்திர பாக்கியம் உள்ளது .


    காரணம் ஒற்றை குருவின் ஐந்தாவது பார்வை அதாவது துலாத்தில் உள்ள குரு பகவான் சனி பகவானை பார்வை செய்வதால் குரு பார்த்த சனியின் பார்வை கெடுதலை தருவதில்லை அதே நேரத்தில் நல்ல பலனையும் தருவதில்லை.எனவே சனியின் பத்தாம் பார்வை பத்தாம் இடத்தில் விழுந்தாலும் பாதிப்பை தந்து விடவில்லை மேலும் குரு பகவான் ஒன்பதாம் பார்வை வேறு குடும்ப ஸ்தானத்திலும் விழுந்து சுபத்துவ நிலையை அடைய செய்து விட்டது.மேலும் சந்திரன் மற்றும் ராகு பகவானுக்கு இடையே கோண வித்தியாசம் 16 பாகை என்பதால் ராகு பகவான் சந்திரனை நாற்பது விழுக்காடு மட்டுமே பாவ தன்மையை அடைய வைத்து விட்டது.


    எனவே ஜோதிட பலன் சொல்லும் போது ஜோதிட விதிகளை ஏதேனும் 

ஒரு கோணத்தில் மட்டும் பார்த்து பலன் சொன்னால் கூறிய பலன் தவறாக போய்விடுகிறது என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்காக இந்த உதாரண ஜாதகத்தை எடுத்து விளக்கினேன்.


    மேலும் பல நுணுக்கங்களை விளக்க முற்படும் போது குடும்ப அதிபதியான புதன் எட்டில் மறைந்து அஸ்தமனம் ஆகிய இருந்தாலும் அது பின்னோக்கிய அஸ்தமனம் ஆகும்.இன்னும் நுட்பமாக பார்த்தால் புதனுக்கு அஸ்தமனம் தோஷம் கிடையாது.


   இவை மட்டும் அல்லாமல் குடும்ப அதிபதியான புதன் எட்டில் மறைந்தாலும் தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் வலுப்பெறும் என்ற வகையில் குடும்ப அதிபதியான புதனும் வலிமை பெற்று இருக்கிறார்.


   புதன் வலிமை பெற்று இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த இவர் நன்றாக படித்து உள்ளார்.இதனை கொண்டும் புதனின் வலிமையை உறுதி செய்து கொள்ளாலாம்.


 இதுபோன்று ஒரு குறிப்பிட்ட பலனை துல்லியமாக சொல்வதற்கு பன்னிரண்டு ராசிகளும்,ஒன்பது கிரக காம்பினேஷன் (சேர்க்கை, பார்வை) , நடக்கும் தசை மற்றும் கோச்சார பலன்கள் போன்ற பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து பலன்கள் எடுக்கப்பட வேண்டும்.அவ்வாறு எடுக்கும் போது ஏதாவது ஒரு கோண ஆய்வை விட்டு விட்டு பலன் சொல்ல போனால் பலன்கள் தவறாக போய் விடும்.


   எனவே தான் ஒருவர் துல்லியமான பலனை சொல்ல வெறும் ராசி மற்றும் நட்சத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்ல முடியாது .லக்கினத்திற்கு இரண்டில் குரு இருந்தால் என்ன பலன்? என்பது போலவும் ஜாதக பலன் சொல்லி விட முடியாது.இந்த வகையில் தரக்கூடிய பலன்கள் மேலோட்டமாக இருக்குமே ஒழிய துல்லியமான பலனாக இருக்காது.


   ஜோதிட பலன்கள் சொல்வதற்கு நீண்ட நெடிய பயிற்சி அவசியமானதாக உள்ளது.நான் எனது யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான சந்தேகங்களை விளக்கும் போது பலர் பின்னூட்டத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு அரசு வேலை கிடைக்குமா ? திருமணம் எப்போது நடக்கும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள்.


 அரசு வேலை, திருமணம் போன்ற வாழ்வின் மிக முக்கியமான வினாக்களுக்கு வெறும் ராசி மற்றும் நட்சத்திரத்தை மட்டுமே கொண்டோ அல்லது ஜாதக கட்டத்தில் உள்ள ஒரு சில கிரகங்களை மட்டுமே வைத்து ஜாதக பலன் தந்து விட முடியாது.அவ்வாறு தரக்கூடிய பலன்கள் ஒன்றிரெண்டு அதிர்ஷ்ட வசமாக சரியாக இருக்காலாமே ஒழிய எல்லாவற்றிற்கும் பொதுமை படுத்தி பார்க்கும் போது துல்லியமாக இருக்க வாய்ப்பு இல்லை.


 வாழ்வின் முக்கிய அம்சங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை காண்பது என்பது ஜாதகத்தில் மேலோட்டமாக பார்த்து பலன் அறிந்து விட முடியாது என்ற உண்மையை விளக்கவே இந்த பதிவினை பயன்படுத்தி கொண்டேன்.


 இதே போல செய்தித்தாள்களிடம், தொலைக்காட்சிகளிலும் மற்றும் 

வார/மாத பத்திரிகைகளிலும் தரக்கூடிய தின/ மாத/ வார/ ஆண்டு பலன்களை அப்படியே நம்பி ஏமாந்து விடாதீர்கள் அவை அனைத்தும் பொதுவாக தரக்கூடிய பொது பலன்களே ஆகும். அவை உங்களுடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் மற்றும் நடக்கும் தசா புக்தி உடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் பலனை முடிவு செய்ய வேண்டும் .


    ராசி பலன்ல இந்த மாதம்/வருடம் உங்கள் ராசிக்கு கோடி கோடியா கொட்ட போகுதுன்னு சொன்னாங்க சார்

 அதை நம்பி பல லட்சத்தை முதல் போட்டு ஒரு தொழில் ஆரம்பித்தேன் சார் கடுமையா நஷ்டமா போச்சு அப்படின்னு பின்னால சொல்லி வருத்தப்படாதீர்கள்.


 அதேபோல இந்த பரிகாரம் செய்தால் உங்கள் வியாபாரம் ஒரே நாள்ல ஒகோன்னு போயிடுவீங்க அப்படி என சொல்லி பெருந்தொகை வசூலித்து செய்யக்கூடிய பரிகாரங்களையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.


ஒரு குறிப்பிட்ட பரிகார ஸ்தாலம் சென்று அமைதியாக ஓரிடத்தில் மனதால் ஒருமுகப்படுத்தி இறைவனிடம் இறைஞ்சினாலே அதுவே பெரிய தொகை செலவழித்து செய்யக்கூடிய பரிகாரங்களை விட சால சிறந்தது ஆகும்.


நன்றி.


For online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே 


  097151 89647 


மற்றொரு செல் : 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: