கூட்டு கிரகங்கள் தரும் பலன்கள்.
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தனித்து நின்று ஒரு விதமான பலனையும் அதே கிரகம் மற்ற கிரகங்களோடு சேரும்போது வேறு விதமான பலன்களையும் தருகிறது என்பதை அடிக்கடி பல பதிவுகளில் உங்களுக்கு விளக்கி வந்துள்ளேன்.
ஒரு ஜாதக கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து ஒரு ராசியில் இருக்கும் பொழுது அந்த கூட்டு கிரகங்கள் தரும் பலனை கணிப்பது மிகுந்த ஞானமும் மற்றும் சோதிட அனுபவமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கூட்டு கிரகங்கள் தரும் பலனை நிர்ணயிக்கும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களில் மிகுந்த ஆழமான சிந்தனை தேவைப்படுகிறது.
ஒரு ஜாதக கட்டத்தில் இடம் பெறும் பல கிரகங்களுடைய ஸ்தான வலிமை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கிரகங்களுக்கு இடையே உள்ள உறவு நிலைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
அடுத்தபடியாக ஒவ்வொரு கிரகமும் எத்தனை பாகை அளவில் நிற்கின்றது என்ற விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கூட்டு கிரகங்களை பார்வை செய்யும் கிரகங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜாதக கட்டத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் உடைய நட்பு பகை நிலைமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஜாதக கட்டத்தில் சுப கிரகங்கள் மற்றும் பாவ கிரகங்கள் இரண்டும் இணைந்து இருக்கக்கூடிய நிலைகளில் அவை தரும் பலன்களை கணிப்பதில் மிகுந்த ஆய்வு தேவைப்படுகிறது.
ஒரு ராசி கட்டத்தில் சனி மற்றும் ராகு ஆகிய இரண்டு பாவ கிரகங்கள் மூன்று சுபக்கிரகங்களோடு இணைந்து இருக்கக்கூடிய நிலையில் சனி மற்றும் ராகு எந்த கிரகங்கள் உடன் நெருக்கமாக இணைந்த நிலையில் உள்ளது.எந்த கிரகத்துடன் எவ்வளவு தூரம் விலகிய நிலையில் உள்ளது என்பது போன்ற விவரங்களை கணக்கிடும் போது தான் கூட்டு கிரகங்கள் தரும் பலனை எளிதாக கணிக்க இயலும்.
இரண்டு கிரகங்களுக்கு இடையே எட்டு பாகைக்குள்ளாக இருக்கும் பொழுது 100% தன்னோடு இணைந்த கிரகத்தை பாதிக்கிறது.. பதிமூன்று பாகை வித்தியாசத்தில் இருக்கும் பொழுது ஐம்பது சதவீதம் தன்னுடன் இணைந்த கிரகத்தை பாதிப்படைய செய்கிறது. இருபத்தியிரண்டு பாகைக்கு மேலாக இருக்கும்போது ஒன்றை யொன்று பாதிப்பதில்லை
பாவக்கிரகங்களுடைய பார்வையானது ஒரு ராசியில் உள்ள கிரகங்களின் மீது பெற்றால் கூடுதலான கெட்ட பவனை ஜாதகருக்கு கொடுக்கும்
ஒரு ராசியில் பாவர் மற்றும் சுபர் ஆகிய இருவரும் எட்டு பாகைக்குள்ளாக நெருக்கமாக இணைந்து பாவத்தன்மை அடைந்திருக்கும் பொழுது ஒரு இயற்கை சுப கிரகம் அந்த ஒட்டுமொத்த சுப கிரகத்தையும் பார்வை செய்யும் பொழுது சுப தன்மையை அடைந்து மிகுந்த நல்ல பலனை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கிறது.
உதாரணமாக விருச்சிகம் வீட்டில் சூரியன் ,புதன் ,சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது மீனத்தில் உள்ள குரு பகவான் ஒட்டுமொத்த கிரகத்தையும் பார்வை செய்யும் பொழுது அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சுபத்தன்மை அடைய வைத்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கும்.
அதே நேரத்தில் ஒரு ராசியில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் இணைந்து இருக்கும் பொழுது ஒற்றை பாவ கிரக பார்வையானது ஒட்டுமொத்த அமைப்பையும் பாவ தன்மை அடைய வைத்து கெட்ட பலனை ஜாதகருக்கு தர வைத்து விடுகிறது
உதாரணமாக விருச்சிக வீட்டில் சூரியன், சந்திரன், புதன் , சுக்கிரன் மற்றும் ராகு இணைந்து இருக்கக்கூடிய நிலையில் கும்பம் வீட்டில் உள்ள சனி பகவான் தனது பத்தாவது பார்வையால் ஒட்டுமொத்த கிரகத்தையும் பார்வை பாவ தன்மையை அடைய வைத்து விடுகிறது.
சில நேரங்களில் இந்தப் பார்வையை முடிவு செய்யும் பொழுது டிகிரி அடிப்படையாகக் கொண்டும் பார்வையின் நிலையை முடிவு செய்ய வேண்டும்.
சில நேரங்களில் ஒரு வீட்டின் கடைசி எல்லையில் உள்ள ஒரு பாவ கிரகம் தனது பார்வை செய்யும் வீட்டில் உள்ள தொடக்க எல்லையில் உள்ள ஒரு கிரகத்தை பார்வை செய்து விட முடியாது என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட இது பல விவரங்களை தெரிந்து கொண்டாலும் நீங்கள் எந்த லக்கனம் என்பதை பொறுத்தும் மற்றும் நடக்கக்கூடிய தசா புக்திகளை பொறுத்தும் கூட்டு கிரகங்கள் தரும் பலனில் மாற்றம் ஏற்படுகிறது. ஏனேனில் லக்கனம் மாறுபடும் பொழுது ஆதிபத்தியங்கள் மாறுபடுகிறது.
நன்றி!
ஜோதிட ஆலோசனை பெற
செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment