Tuesday, 3 June 2025

உங்கள் ஜாதகத்தில் அதிக சுபத்துவ கிரகத்தை கண்டறிவது எப்படி?சுபத்துவ கி

 உங்கள் ஜாதகத்தில் அதிக சுபத்துவ கிரகத்தை கண்டறிவது எப்படி?




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் ஜாதகத்தில் எந்த  கிரகம் அதிக சுபத்துவம் அடைந்து உள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.சுபத்துவம் அடைந்து உள்ளது என்பதை கண்டறிய கீழ் குறிப்பிட்ட படிநிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


  1) ஒரு கிரகம் இயற்கை பாவ கிரகங்கள் ஆன சனி, செவ்வாய், ராகு, தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் உடன் சேர்க்கை அல்லது பார்வையை பெறாமல் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு பகவான், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருக்க வேண்டும்.


2) இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற எந்த ஒரு கிரகமும் சுபத்துவம் அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


3) எந்த ஒரு கிரகத்தை குரு பகவான் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள சுப தன்மை அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


4/ ஒரு சிலர் ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் சுபத்துவம அடைந்த நிலையில் இதில் எந்த கிரகம் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்கிறதோ ‌அல்லது தன ஸ்தானமான இரண்டாம் இடத்துடன் தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகம் தொடர்பு கொள்ளும் தொழில் முறையானது ஜாதகருக்கு உண்டாகும்.


5) வளர்பிறை சந்திரனுக்கு 6,7,8 ஆம் இடத்தில் இயற்கை சுப கிரகங்கள் ஆன குரு , புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நின்று  அவை பத்தாம் இடத்து அதிபதி உடன் தொடர்பு கொண்டு தசை நடத்தினால் அந்த கிரகம் அதிக சுபத்துவம் அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


6) சில நேரங்களில் பாவ கிரகங்கள் மற்றும் சுப கிரகங்கள் ஆகிய இரண்டும் தொடர்பு கொள்ள கூடிய நிலையில் பாவ கிரகங்களை விட இயற்கை சுப கிரகங்கள் அதிகமாக தொடர்பு கொள்ள கூடிய கிரகமானது அதிக சுபத்துவம அடைந்த கிரகமாக கருதப்படுகிறது.


7) சுபத்துவம அடைந்த கிரகமானது லக்கனம் மற்றும் ராசிக்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும் அவை தொடர்பு கொண்ட தசைகள் நடப்பில் இருக்க வேண்டும்.


8) சுபத்துவம அடைந்த கிரகத்தில் தசை நடக்காத கால கட்டத்தில் அல்லது அவ யோக தசைகளில் ஒரு தொழிலை ஆரம்பித்தால் கடுமையான கஷ்டங்களை அல்லது நஷ்டங்களை ஜாதகருக்கு கொடுக்கும்.


நன்றி 


For online appointment 


செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல் ‌7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: