Friday, 7 May 2021

விதி வழி தரும் மனித வாழ்வு-ஜோதிட ரீதியிலான பார்வை

விதி வழி தரும் மனித வாழ்வு


                                          



செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு மனித பிறப்பானது அவரது ஊழ்வினை பயனுக்கு ஏற்ப இவ்வுலகில் கீழ்க்கண்ட மூன்று வகையில் ஏதேனும் ஒரு வகையில் மனித பிறப்பாக பிறப்பு எடுக்கிறார். 


 1)  பணக்காரர் ஆக பிறந்து பணக்காரர் ஆகவே மறைவது.


  2) ஏழையாகப் பிறந்து தனது கடின முயற்சியால் பணக்காரர் ஆக மாறுவது.


 3)  ஏழையாக பிறந்து ஏழையாகவே  கடைசி காலம் வரை கஷ்டப்பட்டு மறைவது.


  ஒருவரது ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி அதிபதி எவ்வித பாவத்துவ நிலையும் அடையாமல்  நன்கு பலமடைந்து நின்று, தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம் அதன் அதிபதி , சிம்மம் மற்றும் தந்தைக்கு காரகனான சூரியன் பகவான் பலமடைந்து , பூர்வ புண்ணிய ஸ்தானமான ஜந்தாமிடம் பலமடைந்து நின்று தன,பாக்கிய மற்றும் லாபதிபதி பலம் பெற்று அதன் தசைகள் தொடர்ந்து நடப்பில் இருப்பின் சிலர் பிறக்கும் போதே வசதியான இடத்தில் பிறந்து வசதியாகவே வாழ்ந்து மறையக்கூடிய ஜாதகம் ஆகும்.


  ஒரு சிலரது ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசி அதிபதி பலமடைந்து நின்று தந்தை ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி, சிம்மம்  மற்றும் சிம்மாதிபதி சூரியன்  பலவீனமான நிலையில் இருந்து பூர்வீக ஸ்தானமும் பலமிழந்து சூழலில் ஒரு குறிப்பிட்ட வயதில் தன-பாக்கிய -லாபாதிபதி பலமடைந்து நிலையில் அதன் தசைகள் உரிய வயதில் நடப்பில் இருப்பின் சாதகர் பிறந்த பிறகு அவரது யோக அமைப்பால் வசதி படைத்தவராக வாழ்வில்  உயர்ந்து விடுவது.


  ஒரு சிலரது ஜாதகத்தில் அவரது லக்கனம் மற்றும் ராசி அதிபதி பலம் இழந்த நிலையில் தந்தை ஸ்தானம் அதன் அதிபதி , சிம்மம் மற்றும் சிம்மாதிபதி சூரியன் ஆகியவையும் பலமிழந்து மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் கெட்ட நிலையில் ஜெனன காலத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் தசைகளும் உகந்ததாக அமையாத பட்சத்தில் ஏழை வீட்டில் பிறந்து இறுதி வரை ஏழையாகவே வாழ்ந்து மறையக்கூடிய ஜாதகம் ஆகும்.


 கீழ்க்கண்ட உதாரண ஜாதகம் பிறந்ததிலிருந்து இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் மூன்றாவது ரகத்தைச் சார்ந்த ஜாதகம் ஆகும்.


இவரது 

பிறந்த தேதி 23.03.1990, பிறந்த நேரம்: 10.33 Am  பிறந்த இடம்; யாழ்ப்பாணம் ,இலங்கை.


     ஜாதக  கட்டம் 


                       


  இவரது ஜாதகத்தில் லக்னம் ரிஷபம் ,

ராசி; மகரம்,

 நட்சத்திரம்; திருவோணம் ஆகும்.


  இவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு அதிபதியான சுக்கிரன் பகவானும் ராசிக்கு அதிபதியான சனிபகவானும் மகர வீட்டில் ஒன்று சேர்ந்து செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறைச் சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இணைவு பெற்று பாவத்த நிலையை அடைந்துள்ளது. மேலும் லக்கனம் மற்றும் ராசிக்கு சுபகிரக பார்வை கிடையாது.


  மகர ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி ,ராகு மற்றும் அமாவாசையில் நோக்கி நகர்கின்ற சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்று எவ்வித சுபகிரகங்கள் பார்வை பெறவில்லை.


 இங்கு 

சந்திரன்-20 °.50'

செவ்வாய்-14°.50'

சனி-8°.35'

ராகு-20°.26'


  இவருக்கு மகர வீட்டில் இந்த நான்கு கிரகங்களும் பாகை அடிப்படையில் மிக நெருக்கமாக அமைந்து பாவம் நிலைப்பெற்றுள்ளது சுப கிரகமான குரு பார்வையும் இப்பாவ கிரகங்கள் மீது விழுந்து சுபத்துவ படுத்தவில்லை.


  இவருக்கு பிறந்ததிலிருந்து பாவத்துவ நிலை அடைந்த சந்திரன், செவ்வாய், மற்றும் ராகு தசைகள் தொடர்ந்து வந்து தற்பொழுது நடப்பில் இருக்கும் குரு தசையும் ரிஷப லக்கினத்திற்கு அவ யோகியான குருவின் தசை என்பதால் பிறந்ததில் இருந்து இதுவரை கஷ்டப்பட்டு கொண்டு உள்ளார்.


 இவர் ஜாதகத்தில் தந்தை ஸ்தானமான ஒன்பதாம்  இடத்தில் சனி, செவ்வாய், ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் போன்ற பாவ கிரகங்கள் இடம் பெற்று பாவத்துவ நிலை அடைந்து தந்தைக்கு ஸ்தானாதிபதியான சனி பகவானும் பாவியான ராகு செவ்வாய் தேய்பிறைச் சந்திரன் போன்ற பாவ கிரகங்களுடன் இணைந்து பாவத்த நிலையை அடைந்துள்ளது. தந்தைக்குக் காரகன் சூரியன் மட்டும் நல்லெண்ணெயில் இருப்பதால் தந்தை இருக்கிறார். தந்தை தந்தையாக இல்லை.


 மாதுர் காரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவான் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்களுடன் இணைந்து உள்ளதாலும் , சந்திர பகவானே தேய்பிறைச் சந்திரன் என்பதாலும் தாய்வழி ஆதரவு கிடையாது.


   இவரது ஜாதகத்தில் ஒரே ஆதரவாக குருவும், புதனும் பரிவர்த்தனை பெற்றதால் இரு கிரகமும் ஆட்சி பெற்ற நிலைக்கு சமமாக இருப்பதால் அம்சத்திலும் குரு ஆட்சி பெற்று இருப்பதால் ஏதோ அடிப்படையான  தேவைகளுக்கு  கஷ்டப்படாமல் உள்ளார்.


நன்றி.


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


   வாட்ஸ் அப்

   9715189647

       செல்

   9715189647

    7402570899


My website

www.astroravichandransevvai.in


                                                 



    அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

      M.Sc,M.A,BEd

(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: