வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஜோதிடம்.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை" என்பார்கள்.திக்கு என்றால் "திசை" என்று பெயர். அதேபோல் வாழ்க்கையில் வழி அற்று தவிப்பவனுக்கு வாழ்வியல் சம்பவங்களை வழிகாட்டும் ஜோதிடம் காட்டும் "தசை" தான் முக்கியமாக அமைகிறது.
லௌகீக வாழ்வில் ஈடுபடக்கூடிய மனிதனுக்கு வழிகாட்டும் சுடராக ஜோதிடம் விளங்குகிறது.. ஒருவனுக்கு நடந்த ,நடக்கின்ற மற்றும் நடக்க இருக்கும் சம்பவங்களை 12 கட்டங்களில் 9 கிரகங்கள் அமர்ந்திருக்கக் கூடிய வழிமுறையின் அடிப்படையில் அவருக்கு நடக்கும் தசா புத்திகள் அடிப்படையில் நிச்சயமாக, துல்லியமாக நடக்கக்கூடிய விஷயங்களையும் , நடந்த மற்றும் நடக்க இருக்கின்ற சம்பவங்களை எடுத்துக் கூறி வழிநடத்த ஜோதிடம் உதவுகிறது.
இன்று ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். தனுசு லக்னம் லக்னத்தில் சனி மற்றும் ராகு , ஒன்பதாம் இடத்தில் சிம்மம் வீட்டில் குரு மற்றும் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சூரியன்,புதன் மற்றும் செவ்வாய் உள்ளது.தற்போது முப்பத்திரண்டாம் வயதில் அடி எடுத்து வைக்கும் இவருக்கு ராகு தசை ஆரம்பம் ஆக இருக்கிறது.
தற்போது ஜாதகருக்கு முப்பத்திரண்டு வயதை நெருங்குகிறது.
ஆனால் ஜாதகத்தை பார்த்தவுடனே ஜோதிட விதிகள் மற்றும் விதிவிலக்குகள் போன்ற வகைகளில் ஆய்வு செய்து பார்க்கும் போது இவருக்கு இன்னும் திருமணம் நடந்திருக்காது என்ற விஷயத்தை ஆணித்தரமாக சொல்ல முடிந்தது.
லக்கனத்தில் சனி +ராகு லக்கனத்தை பாவபடுத்தியதோடு பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவானும் லக்கனத்தில் சனி+ராகு பகவானை பார்வை இட லக்கன பாவகம் நன்றாக கெட்டு விட்டது.லக்னத்தில் சனி + ராகு மற்றும் ஏழாம் இடத்தில் கேது பகவான் . லக்னத்தில் உள்ள செவ்வாய் பார்வை பெற்ற சனி+ராகு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்து ஏழாம் இடத்தையும் பாவ நிலைக்கு தள்ளி உள்ளது.ஏழாம் இட அதிபதி புதன் பகவான் பாவரான செவ்வாய் உடன் இணைந்து செவ்வாய் பார்வை மற்றும் ராகுவின் சேர்க்கையை பெற்று கூடுதல் பாவத்துவமான சனி பகவான் ஏழாம் இட களத்திர ஸ்தானாதிபதி புதனை பார்வை செய்து ஏழாம் இட அதிபதியும் கெட்டு விட்டார்.
மேற்கண்ட காரணங்களால் திருமணம் தடைபட்டு கொண்டே செல்கிறது.
ஆனால் திருமணம் கட்டாயம் நடக்கும்.லக்கனத்தில் செவ்வாய் பார்வை பெற்ற சனி+ ராகு பகவானை சிம்மத்தில் உள்ள குரு பகவானும் பார்வை செய்வதால் திருமணம் நடைபெறும்.
குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க தடைபடும் அமைப்பு ஆகும்.இதில் 32 வயதில் ராகு தசையும் ஆரம்பம் ஆகிறது.எனவே திருமணம் செய்வது என்பது கஷ்டபட்டு தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
திருமணம் ஆக இருக்கும் தம்பதியினருக்கு தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் மற்றும் புத்திர பாக்கியத்தை தரக்கூடிய குரு பகவான் ஆகிய இருவரையும் அவசியம் ஆராய்ந்து பார்த்து பொருத்தம் போட வேண்டும்.
ஜோதிட விதிகளை தெரிந்து கொளாளும் நாம் ஜோதிட விதிவிலக்குகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் ஆசிரியர் ஆக வேண்டும் எனில் ராசி மற்றும் லக்கனத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் குரு பகவான் தொடர்பு கொள்ள ஒருவர் ஆசிரியர் ஆவார் என்பது விதி ஆகும்.இதே போல் அதே ஜாதகருக்கு சிம்மம் ஸ்தானமும் மற்றும் அதன் அதிபதியான சூரியன் பகவானும் வலுப்பெற்று உள்ள நிலையில் அரசு ஆசிரியர் ஆவார் என்பதும் தவிர்க்க முடியாத விதி ஆகும்.
மிதுன லக்கினம் ஜாதகிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்தில் உச்சம் அந்த வீட்டின் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ஆகும்.
குரு பகவான் லக்கனத்திற்கு பத்தாம் அதிபதியாகி வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தினை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறது.ஜோதிட விதிப்படி ஆசிரியர் ஆவதற்கு குரு பகவான் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொண்டு உள்ளது.எனவே இந்த ஜாதகர் ஆசிரியர் ஆக உள்ளார்.
இவர் ஜாதகத்தில் மிதுன லக்கினம் ரிஷபம் ராசி, இரண்டாம் இடத்தில் குரு மற்றும் புதன் பகவான், மூன்றாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய், ஏழாம் இடத்தில் ராகு மற்றும் எட்டாம் இடத்தில் சனி
இவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் உள்ள ராகு பகவான் குரு பகவானை போல செயல்பட்டு அரசு ஆசிரியர் ஆக இளவயதில் வந்து விட்டார்.
ஒரு சிலருக்கு கார் ,பங்களா போன்ற ஆடம்பர வாழ்க்கை மேற்கொள்வார்.ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகும்.இதற்கான விதி நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது தம்பதிகள் இருவரது ஜாதகத்தில் ராசி மற்றும் லக்கனத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சனி, ராகு பாவ கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பை பெற்று இருந்தாலும், புத்திர ஸ்தானாதிபதி ராகு போன்ற சர்ப்ப கிரகங்கள் இணைந்த நிலையில் இருந்தாலும் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் நீசம்,பகை அல்லது பாவ கிரகங்கள் தொடர்பு பெற்ற நிலையில் திருமணம் ஆன பிறகு தொடர்ந்து அவ யோக தசைகள் அல்லது ஆறு அல்லது எட்டு தசைகள் நடப்பில் இருப்பதாலும் குழந்தை பாக்கியம் தடை பெறுகிறது.
இது போன்று மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக ஜோதிடம் செயல்படுகிறது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்:
7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment