Tuesday, 10 October 2023

தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன்

 தாம்பத்திய சுகத்தை தரும் சுக்கிரன் 

       


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 ஒருவர் தன் வாழ்நாளில் முறையாக சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட தாம்பத்திய சுகத்தை பெறுவதை நவ கிரகங்களில் சுக்கிரன் பகவானை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சுக்கிரன் பகவானே ஏழாம் இடத்திற்கு காரகன் ஆவார்.ஆதலால் 

      சுக்கிரன் பகவானே  ஒருவருக்கு வரும்  குடும்ப வாழ்க்கை துணைக்கான காரகன் ஆவார்.


  ஒருவர்  தன் மனைவி/ கணவன் உடன்  அனுபவிக்கும் இல்லற சுகத்தை அவரது ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் பகவானை கொண்டு அறிந்து கொள்ளலாம்.


    ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பகவான்  நீசம் அடைந்து இருந்தாலும் குடும்ப வாழ்வில் மூலம் இல்லற சுகத்தை முறையாக பெற இயலும்.அதே நேரத்தில் அந்த நீசம் அடைந்த சுக்கிரன் உடன் ராகு சேர்ந்த நிலையில் விதவை பெண்ணுடன் தொடர்பு அல்லது சனி சேர்ந்த நிலையில் அலுக்கான தாழ்நிலை பெண்களுடனான தொடர்பு அல்லது செவ்வாய் சேர்ந்த நிலையில் வாட்ட சாட்டமான பெண்கள் உடன் தொடர்பு போன்ற நிலைகளில் காம வாழ்வு அமைகிறது.


மேற்குறிப்பிட்ட பலன்கள் சில நேரங்களில் இயற்கை  சுப கிரகமான குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகிய சுப கிரக பார்வை அல்லது சேர்க்கையை பெறும்போது பலனில் மாற்றம் ஏற்படும்.


   சுக்கிரன் நீசம் அடைந்து இருந்தால் ஒரு மனைவி என்றும் அதே நேரத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ள நிலையில் பல மனைவி என்று வேடிக்கையாக ஜோதிடத்தில் சொல்வது உண்டு.


  ஒரு கிரகம் நீசம் அடைந்து இருந்தாலும் மனிதனுக்கு தேவையான அடிப்படையான தேவைகளை தந்து விடுவது உண்டு.ஆனால் பாவத்தன்மை அடைந்து இருந்தால் தான் ஒரு கிரகம் தரக்கூடிய ஒன்றையும் தர விடாமல் செய்து விடுவது உண்டு என்ற ஜோதிட உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.


  ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடம் , களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் இட அதிபதி மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் ஆகிய மூன்றும் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால் கட்டிய மனைவி மூலம் தாம்பத்திய சுகத்தை திருப்தியாக மன நிறைவாக அனுபவித்து புத்திர்களை பெற்று எடுத்து உதாரணமான தம்பதிகளாக திகழ்வார்கள்.


 விரிவாக புரியும் படியாக சொல்ல வேண்டும் எனில் ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல், ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்து , ஏழாம் இட அதிபதியும் இயற்கை சுப கிரகமாக  இருந்து கேந்திர, கோணங்களில் பலமடைந்து சுப தன்மை  அடைந்து மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் சுபத் தன்மையை அடைந்து நல்ல முறையில் அமர்ந்து உள்ள தம்பதிகள் ஆகும்.


 சுக்கிரன் பகவான் உடன்  தேய்பிறை சந்திரன்,சனி , செவ்வாய், ராகு மற்றும் கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்த நிலையில் அல்லது பார்வை செய்த நிலையில் சுக்கிரன் பகவான் கடுமையான பாவ தன்மையை அடைந்து விடுவார்.இந்த அமைப்பு ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத நிலையை தராமல் நமது கலாச்சாரம் வரம்பை மீற செய்து விடுவது உண்டு.ஆனால் ஒற்றை சுப குரு அல்லது வளர்பிறை சந்திரன் பார்வை அல்லது இணைவு பலனை முற்றிலும் மாற்றி ஜாதகர் நல்ல குணம் படைத்தவராக திகழ்வார்.


  குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்பதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் சுக்கிரன் காதல் உணர்வுகளை தூண்டி வளர்ப்பவர்.ஆதலால் இளவயதில் உடலியல் கவர்ச்சியை காதல் என்று தவறாகக் புரிந்து கொணடு பெற்றோர்களை தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறி கடி மணம் புரிந்து கொள்வார் என்பதால் தான் இளவயதில் சுக்கிரன் தசை வரக்கூடாது என்பார்கள்.


 சுக்கிரன் பகவான் அனைத்து ஆடம்பர விஷயங்களையும் அனுபவிக்க துடிக்கும் மனம் கொண்டவராக இருப்பார்.தன்னை மாற்றவர்களிடம் அழகாக காட்டி கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.அதே நேரத்தில் மனதளவில் திருப்தியற்ற மனம் உடையவராக இருப்பார்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                      


அன்புடன்

 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

No comments: