Sunday, 3 November 2024

சனி செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் பார்வை தரும் கெடு பலன்கள் (லக்னம் முதல் ஆறாம் வீடு வரை )

 லக்கனம் முதலாக ஆறாம் இடம் வரை சனி,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் பார்வை தரும் கெடு‌பலன்கள்




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒரு ஜாதகத்தில் பொதுப்பலனாக சனி செவ்வாய் சேர்ந்து இருக்கின்ற இடமும் பார்வை செய்யும் இடங்களையும் கடுமையாக பாதிக்கும் .அந்த நிலையில் இன்னும் கூடுதலாக ராகுவும் இணையும் பொழுது அவை இருக்கும் இடத்தையும் சனி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் பார்க்கும் இடங்களையும் கடுமையான பாதிப்பை அதன் தசை வர கூடிய காலங்களில் கொடுக்கும். இதன் காரக பலனை வாழ்நாள் முழுவதும் கெடுக்கும்.


   உங்களுடைய ஜாதகத்தில் பன்னிரெண்டு இடங்களில் எந்த இடத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்த நிலையில் நின்றால் வேறு ஏதேனும் சுபத்துவம் கிடைக்காத நிலையில் கடினமான கெடு பலன்களை ஜாதகருக்கு அதன் தசை வரும் காலங்களில் கடுமையாக கொடுக்கும்.


    ஒரு ஸ்தானத்தில் சனி ,செவ்வாய் மற்றும் ராகு சேர்த்து அந்த ஸ்தானம் அந்த கிரகத்துக்குரிய ஆதிபத்திய பலன்களும் கெடு பலனைத் தராமல் இருக்க வேண்டுமானால் இயற்கை சுப கிரகமான குரு பகவான் மற்றும் சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்வை சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.


 ஒரு ஸ்தானத்தில் சனி, செவ்வாய் ராகு சேர்ந்த நிலையில் நின்று அந்த கிரகங்கள் ஒன்றை ஒன்று அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகுமா ? அல்லது குறைந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகுமா ? என்பதை முடிவு செய்ய அந்த கிரகங்களுக்கு இடைப்பட்ட டிகிரி போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு ஜாதகத்தில் சனி செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்றும் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வேறு ஏதேனும் சுபத்துவம் கிடைக்காத நிலையில் ஜாதகருடைய குணநலன்களை கடுமையாக பாதிப்பதோடு ஏழாம் இடத்தையும் சம சப்தமாக பார்வை செய்வதால் திருமண வாழ்வை அதாவது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை அமைப்பையும் அது கடுமையாக பாதிக்க கூடிய அமைப்பாகும். இவை மட்டுமல்லாமல் சனி பார்வை செய்ய க்கூடிய ஏனைய பிற அமைப்புகளான இளைய சகோதர ஸ்தானமான மூன்றாம் இடம், தொழில் ஸ்தானமான 10-ஆம் இடம் அதேபோல செவ்வாய் பார்வை செய்யக்கூடிய சுக ஸ்தானமாக நான்காம் இடம், மாங்கல் ஸ்தானமான எட்டாமிடம் ஆகியவை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.


  இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்பம் களத்திர ஸ்தானத்தில் சனி, செவ்வாய் மற்றும் ராகு சேர்த்து நிற்கும் நிலையில் அது குடும்பம் அமைவதில் காலதாமதம் ஆக்குவதோடு தன யோகத்தையும் குறைக்கும் , கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையில் தரும், பொருளாதார செயல்களில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.


இரண்டாம் இடத்தில் நின்று தனது சமசுப்தம் பார்வையால் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தையும் பார்வை செய்வதால் இல்லற வாழ்வில் கடுமையான பிரச்சனைகளை சிக்கல்களை கொடுக்கக்கூடிய நிலையை தரும்.


  இரண்டாம் இடத்தில் உள்ள சனி, செவ்வாய் ராகு‌ ஆகிய சேர்ந்த நிலையில் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகத்தை தரக்கூடிய நான்காம் இடத்தை பார்வை செய்து மேற்கூறிய பலனை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. தனது பத்தாவது பார்வையால் லாப ஸ்தானமான 11ஆம் இடத்தை பார்வை செய்வதால் மூத்த சகோதரத்தை பாதிக்கிறது.


 மூன்றாம் இடமான இளைய சகோதர ஸ்தானத்தில் அல்லது கீர்த்தி ஸ்தானத்தில் சனி ,செவ்வாய், ராகு ஆகிய இயற்கை பாவ கிரகங்கள் சேர்ந்து நின்ற நிலையில் இளைய சகோதரத்தில் பாதிப்பை உண்டாக்கும். மூன்றாம் அதிபதியை பொறுத்து அடுத்த சகோதரர் உண்டா ? என்பதை முடிவு செய்ய வேண்டும் .கீர்த்தி புகழ் அடையாமல் போய்விடும் .கதை ,கவிதை கட்டுரை ,கற்பனை போன்ற விஷயங்களில் ஈடுபட வைக்காது. வேறு ஏதேனும் வகையில் சுபத்துவம் கிடைக்க கூடிய நிலையிலும் அல்லது அந்த வீட்டினுடைய அதிபதி உச்சம் பெற்ற நிலையிலும் சில நேரங்களில் எதிர்மறையான வகையில் நல்ல பலனை தரக்கூடும்.


 மூன்றாம் இடத்தில் செவ்வாய் மற்றும் ராகு உடன் இணைந்து பாவத்துவம் கூடுதலான சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்ர ஸ்தானத்தை பாதிப்படையச் செய்கிறது. தனது பத்தாம் பார்வையால் 12ஆம் இடத்தை பார்வை செய்து வெளிநாடு யோகம் பாதிக்கிறது சாதகரை கஞ்சத்தனம் மிக்கவனாக மாற்றுகிறது.


மூன்றாம் இடத்தில் உள்ள செவ்வாய் பகவான் சனி மற்றும் ராகுவால் கூடுதலான பாவ‌ தன்மையை அடைந்து தனது நான்காம் பார்வையால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பாதிப்பு அடைய செய்து தாமத திருமணம் நடைபெற காரணமாக அமைகிறது.தனது ஏழாவது பார்வையால் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தையும் மற்றும் எட்டாம் பார்வையால் லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் பார்வை செய்து பாதிப்பு அடைய செய்கிறது.


நாலாம் இடத்தில் செவ்வாய் ,சனி மற்றும் ராகு இணைந்து இருக்கக்கூடிய வேலையில் அது தன் சுகம், தாய் சுகம், கல்வியால் சுகம் மற்றும் வண்டி வாகன சுகம் போன்ற வகையில் சுக ஸ்தானத்தை பாதிப்படைய செய்கிறது.


    நான்காம் இடத்தில் உள்ள மேற்கண்ட கிரகங்கள் தனது ஏழாம் பார்வையால் அதாவது பத்தாம் இடத்தையும் அதிக பாதிப்புகளை அடைய செய்கிறது.


  நான்காம் இடத்தில் சனி மற்றும் ராகு‌ இணைந்து அதிக பாவத்துவ நிலையில் உள்ள செவ்வாய் பகவான் தனது நான்காம் பார்வையால் கலக்கிர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்வை செய்தால் திருமண தடையை உண்டாக்குகிறது. எனது எட்டாம் பார்வையால் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தை பார்வை செய்து பாதிப்படையை செய்கிறது.


சனி பகவான் செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து தனது மூன்றாவது பார்வையால் ஆறாம் இடத்தை பார்வை செய்து ஆறாம் இடத்தின் கெட்ட பலனை கொடுக்க விடாமல் செய்கிறது. மேலும் தனது பத்தாம் பார்வையால் லக்னத்தை பார்வை செய்து சாதகரை சோம்பேறித்தனம் ,சுறுசுறுப்பு இல்லாத தன்மை , அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடிய தன்னை போன்ற கெடுபலனை ஜாதகருக்கு வேறு ஏதேனும் சுபத்துவம் இல்லாத நிலையில் கொடுக்கிறது

No comments: