Monday, 28 October 2024

ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் தரும் பலன்கள்

 ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் தரும் பலன்கள்.




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  கிரகங்களின் தலைவன் என்று அழைக்கப்படுவது சூரியன் பகவான் ஆவார். தலைவியாக விளங்குவது சந்திரன் பகவான் ஆவார். சூரியனை அப்பன் என்றும் சந்திரனை அம்மை என்றும் அழைக்கப்படுகிறது.


 சூரியன் முழு ஒளி கிரகம் ஆகும்.சூரியனிடம் இருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் கிரகம் சந்திரன் ஆகும்.


   ஒருவர் ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் வலிமையுடன் இருந்தாலே அரசு , அரசியல், அரசாங்கம் மற்றும் ஆட்சி செய்யும் அமைப்புகள் போன்றவற்றில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்..


 இதேபோல் தாய் மற்றும் தந்தை மூலமாக நல்ல அன்பும் மற்றும் அரவணைப்பும் கிடைக்க சூரியன் மற்றும் சந்திரன் பகவான் அருளாசி மிகவும் அவசியமான ஒன்றாகும்.


  சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் மற்றும் சந்திரனுக்கு கேந்திரத்தில் சூரியனும் அமரப்பட்ட ஜாதகம் மிகவும் நல்ல ஜாதக அமைப்பு ஆகும்.


   ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து அமாவாசை அமைப்பில் இத்துடன் ராகு சேர்ந்த சூரிய கிரகணம் தோன்றும் ஜாதகம் அமைப்பில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பிறந்தவுடன் அந்த குடும்பமே நாசமாக சொத்துக்கள் விரயம் ஆகி தாய் மற்றும் தந்தையர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒன்றாக இல்லாமல் வசிக்கக் கூடிய நிலைகளில் கொண்டு சேர்க்கும்.


        அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் சம சப்தமாக சந்தித்து இயற்கை சுப கிரகங்கள் உடைய பார்வையைப் பெற்ற நிலையில் இருந்தால் அந்த அமைப்பில் பிறந்த தாய் மற்றும் தந்தைகள் புகழுடைய தந்தைகளாக இந்த குழந்தையின் பெயரைச் சொல்வதைவிட இன்னாருடைய பிள்ளை என்று சொல்லும் அளவுக்கு புகழ் படைத்த பெற்றோர்களாக இருப்பார்கள்.


       ஒளி கிரகங்கள் ஆன சூரியன் மற்றும் சந்திரன் உடன் சனி அல்லது ராகு இணைந்து அல்லது சனி பார்வையை பெற்ற நிலையில் நல்ல தாய் மற்றும் தந்தைகளாக இல்லாத நிலை ஏற்படும்.


       சில நேரங்களில் சூரியன் உடன் சனி அல்லது ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்ற நிலையில் அதன் தசை வரும் காலங்களில் தந்தை மரணிக்க கூடிய நிலையில் இருக்கலாம் அல்லது உங்களை விட்டு பிரிந்த நிலை ஏற்படும். அப்படி பிரிந்த நிலை என்பது சுப பிரிவாக சம்பாதிக்கும் பொருட்டு வெளி நாடு சென்று இருப்பது அல்லது எதற்கும் உபயோகபடாத பெற்றோராக இருப்பது போன்றவை உண்டாகும்.


     எவ்விதமான பலனை தரும் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த இடத்தில் உள்ள சுபத்தன்மை அல்லது பாவ தன்மையை பொறுத்தது. ஆகும்.

இருப்பினும் ஒன்பதாம் இடம் அதன் அதிபதியை பொறுத்து பலனில் சற்று மாற்றம் ஏற்படும்.


   இதே போல சந்திரன் உடன் சனி அல்லது ராகு பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொண்டு அதன் தசை வரக்கூடிய காலங்களில் தாய்க்கு மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான தொல்லைகளை கொடுக்கலாம் அல்லது தாய் பிரிந்து வாழக்கூடிய நிலை அல்லது பயனில்லா தாயாக இருக்கக்கூடிய நிலை. இவ்வகை நிவைகளை முடிவு செய்யவதற்கு நான்காம் இடங்களை‌ அல்லது அதன் அதிபதியையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.


பௌர்ணமி நெருங்குகின்ற சந்திரன் பௌர்ணமி சந்திரன் அல்லது பெளர்ணமியை விட்டு விலகுகின்ற சந்திரன் ஆகிய சந்திரன் வலிமை மிகுந்த சந்திரன் ஆகும். இத்தகைய நிலையில் சூரியனும் வலுப்பெற்று அதன் தசை காலங்களில் நல்ல பலனை தரக்கூடிய அமைப்பு உருவாக்குகிறது. இத்தகைய நிலையில் சந்திரனுக்கு ஆறு,ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் உள்ள இயற்கை சுப கிரகமான சுக்கிரன், தனித்த புதன் மற்றும் குரு பகவான் நிற்க சந்திராதி யோகம் பெற்று அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு அள்ளிக் கொடுக்கும்.


    இயற்கை சுப கிரகமான வளர்பிறைச் சந்திரனுக்கு இருபுறமும் இயற்கை சுப கிரகம் நிற்க சாமரை யோகம் ஆகும்.எந்த ஒரு கிரகம் ஆனாலும் கடக வீட்டில் நிற்கும் போது அந்த வீட்டின் அதிபதி சந்திரன் பகவான் வளர்பிறை சந்திரன் ஆக இருப்பின் அதன் தசை காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கும்.தேய்பிறை சந்திரனாக இருந்தால் அதன் தசை காலங்களில் யோக பலனை தராது.


  சூரியன் பகவானை சந்திரன் பகவான் பன்னிரெண்டு பாகைக்குள்ளாக நெருங்கும் பொழுது அமாவாசை உண்டாகிறது.சூரியன் பகவான் நிற்கும் இடத்திற்கு ஏழாம் இடத்திற்கு சந்திரன் பகவான் வரும் பொழுது பெளர்ணமி உண்டாகிறது.


சூரியன் பகவான் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடம் வரை வரும் சந்திரன் வளர்பிறை சந்திரன் ஆகவும், ஏழாம் இடத்திலிருந்து சூரியன் இருக்கும் இடம் நோக்கி செல்லும் சந்திரனை தேய்பிறை சந்திரனாக கருதப்படுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


 சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

உன் வாழ்க்கை நிலையினை முடிவு செய்வது எது?-உதாரண ஜாதக விளக்கம்

 உன் வாழ்க்கை நிலையினை முடிவு செய்வது எது ?-உதாரண ஜாதக விளக்கம் .









செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவர் பிறந்ததிலிருந்து கஷ்டப்படக்கூடிய அமைப்பு இருப்பதற்கு காரணம் அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி உடைய வலிமை மற்றும் மேலும் நடக்கக்கூடிய கசாப்புத்திகள் ஆகியவற்றை  பொறுத்து அமைகிறது.


      ஒருவர் ஜாதகத்தில் தொடர்ந்து அவயோகத்தை தரக்கூடிய தசா புத்திகளாக வந்தாரல் அவர்கள் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், முயன்றாலும் முன்னேற்றம் காண இயலாத  நிலையை அடைந்து விடுகிறார்.


ஒரு சிலருக்கு தொடர்ந்து அவயோக தசைகள் வந்தாலும் அவரை சுப கிரகங்கள் பார்க்க சில கஷ்டங்களை கொடுத்து அந்த கஷ்டத்திலிருந்து முன்னேறி வரக்கூடிய அமைப்பை சாதக பெற்று விடுவார்.


கீழே கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில்

பிறந்த தேதி: 30 நவம்பர் 1997

பிறந்த நேரம்: மாலை 04 .05 pm

 மேஷ லக்னம் 

விருச்சக ராசி

 கேட்டை நட்சத்திரம் முதல் பாதம்.


இந்த ஜாதகத்தில் முதலில் நாம் பார்க்க இருப்பது லக்கனம் மற்றும் லக்கனாதிபதியுடைய நிலை ஆகும். லக்கனாதிபதியின் வலிமையை பொருத்தே ஓர் ஜாதக பலன் அமைகிறது.

மேஷ லக்கனாதிபதியான செவ்வாய் பகவான் லக்கினத்திற்கு ஒன்பதாம் இடத்தில் அதாவது திரிகோணத்தில் சுக்கிரன், புதன் ஆகிய இரண்டு சுப கிரகங்களுடன் சேர்ந்திருப்பதால்  ஒரளவு கல்வி பயிலும் அமைப்பினை பெற்று உள்ளார்.பிறப்பிலிந்து 14.06.18 ஆண்டுகள் புதன் தசையே நடப்பில் இருந்ததால் கல்வி பயிலும் அறிவை ஜாதகருக்கு கொடுத்தது.இதனை தொடர்ந்து வந்த சுக்கிரன் தசையும் வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க கூடிய நிலையினை தந்தது.


     வெளிநாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கு 8 மற்றும் 12ஆம் இடம் சுப தன்மை பெற்றிருக்க வேண்டும். அதாவது எட்டாமிடத்தில் தேய்பிறை சந்திரன் நீசம் பெற்ற நிலை மற்றும் அமாவாசைக்கு அடுத்த நாள் பிறந்த நிலை. வேறு எந்த வகையிலும் சுபத்தன்மை அடையவில்லை பன்னிரண்டாம் இடத்தில் சனி பகவான் செவ்வாயில் பார்வை பெற்ற நிலையில் இருப்பதால் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வரக் கூடிய நிலையை தரும்.


என்னதான் இவர் படித்திருந்தாலும் இவர் படித்த படிப்பை வைத்து இதுவரை பொருளீட்ட முடியாத நிலையில் உள்ளார்   இதற்கு காரணம் லக்கனாதிபதி மற்றும் ராசி அதிபதியான செவ்வாய்

சனி பகவானுடைய தனது பத்தாவது பார்வையில் பெற்றிருப்பதால் ராசி. மற்றும் லக்கணம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்க கூடிய நிலையில் சாதகர் இல்லை.


இவை  மட்டுமில்லாத இவருக்கு பிறப்பிலிருந்து தொடர்ந்து வரக்கூடிய தசை அவயோகத் தசையாகவே உள்ளது.


     அதாவது லக்கினத்திற்கு 12-ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் தனது பத்தாம் பார்வையால் சுக்கிரன் ,புதன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றையும் பார்வை  செய்து பாவ தன்மையை அடைய வைத்துவிட்டார் .செவ்வாய் பகவான் ஆனவர் தனது நான்காம் பார்வையால் சளியை பார்வை செய்கிறார் 


       இவ்வாறு செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்ற நிலையில் புதன் மற்றும் சுக்கிரன். ஆகிய இரண்டும் மிகவும் பாவ தன்மையை அடைந்து விட்டது.


புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டும் சனி , செவ்வாய் தொடர்பு பெற்ற நிலையில் எவ்வித யோகத்தையும் தர முடியாத நிலையில் உள்ளது. இடையில் வந்த கேது தசையில் சனியின் வீட்டில் இருப்பதால் கேது பகவான் சனியை போல செயல்படுவார்.எனவே லக்னத்திற்கு பாவ கிரகம் சனி என்பதால் கேது திசையில் நல்ல பலனை தரவில்லை.


சுக்கிர திசையோ இவருக்கு 41 அரை வயது வரை நடக்க இருக்கிறது அடுத்து வரும் சூரிய சந்திர தசைகளும் அமாவாசை அமைப்பில் இருப்பதாலும் அதனை தொடர்ந்து வரும் செவ்வாய் தசையும் செவ்வாய்,சனி தொடர்பில் இருப்பதாலும் நல்ல பலனை தர போவதில்லை. எனவே மிகப்பெரிய யோகங்களை தரப்போவதில்லை.


  இது ஒரு கர்ம பலன் ஆகும் .நல்லா படித்திருந்த நிலையிலும் தனது அறிவை பயன்படுத்தி சம்பாதிக்க இயலாத நிலையில் ராசி மற்றும் லக்கனாதிபதியுடைய வலிமை குறைந்த பாவத்துவ  நிலை மற்றும் பிறப்பிலிருந்து தொடர்ந்து வரக்கூடிய தசையும் அவ யோகத்தை  தரும் தசைகளாகவே  இருப்பதால் பிறப்பு  முதல் இறப்பு வரை

வாழ்வு முழுவதும் பெரிய அளவிற்கு பொருளீட்டி சந்தோஷத்தை அடையக்கூடிய அமைப்பு இந்த ஜாதகத்தில் இல்லை.


எனவே உன் வாழ்க்கை நிலையை முடிவு செய்வது ராசி மற்றும் லக்கன அதிபதி மற்றும் தொடர்ந்து வரக்கூடிய தசா புக்தி அமைப்புகள் ஆகும். கோச்சார அமைப்பு கூட தசா அமைப்பு நன்றாக இருக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பை தந்து விடுவதில்லை.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

       M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.



அதிகாரம் மற்றும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் பொளர்ணமி யோகம்

 அதிகாரம் மற்றும் ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் "#பெளர்ணமியோகம்".




செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  யோகங்களில் முதன்மையானது என்று சொல்லப்போனால் என்னை பொறுத்தவரை பௌர்ணமி அமைப்பில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் ஆவார். 


 சூரியன் இருக்கும் வீட்டிற்கு ஏழாம் வீட்டிற்கு நேராக வரக்கூடிய காலகட்டத்தில் அதாவது சம சப்தமாக சந்திக்கக்கூடிய காலத்தில் பௌர்ணமி உருவாகிறது. இது நிறை மதி சந்திரன் ஆகும் .இந்த நேரத்தில் பிறக்க கூடியவர்கள் மிகுந்த ஒளி மிகுந்த ஆட்சியாளர் மற்றும் அதிகாரத் தோரணை மிக்கவர்களாகவும் தன்னில் அடங்கிய சித்த புருஷர்களாகவும் பிறக்கக்கூடிய நிலை உண்டு.


   இவ்வாறு பௌர்ணமி அமைப்பில் பிறந்திருந்தாலும் அந்த நேரத்தில் சந்திர கிரகணம் அல்லது சூரியன் அல்லது சந்திரனுடன் சனி அல்லது ராகு சேர்ந்திருக்கக்கூடிய நிலை இல்லாத நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு சேர்த்து இருக்க கூடிய நிலையில் சந்திர கிரகணம் அல்லது பாவ தன்மை அடைந்து இந்த பெளர்ணமி யோகம் சிறப்பாக வேலை செய்யாமல் போய் விடும்.இந்த அமைப்பில் லக்கனாதிபதியும் பலம் இழந்து அல்லது பாவ தன்மை அடைந்தால் பெளர்ணமி யோகம் முழுமையாக வேலை செய்யாமல் போய் விடுகிறது.


இவ்வாறு ‌மேற்கூறிய வகைகளில் பங்கம் அடையாத பெளர்ணமி அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகர் அரசாங்க உயரிய பதவி அல்லது அரசியலில் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை அதன் தசை வரக்கூடிய காலங்களில் ஜாதகர் பெறுவார்.


     ஒவ்வொரு மாத பௌர்ணமி அமைப்பும் இந்துக்களின் முக்கிய பக்தி வழிபாட்டுக்கு உகந்த ஒரு முக்கிய தினமாக அந்த மாதத்தில் கருதப்படுகிறது.


    சித்திரை மாதத்தில் பௌர்ணமி அமைப்பில் "#சித்ராபௌர்ணமி" கொண்டாடப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது.


வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரத்தில் #வைகாசிவிசாகம் மிக முக்கியமான பௌர்ணமி அமைப்பாகும்.


ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி அரசு ஆளக்கூடிய பௌர்ணமி ஆகும் . இதனை விளக்கும் உண்மையான பழமொழி ஒன்றை பார்ப்போம். அதாவது"#ஆனிமூலம் அரசாளும் கன்னி மூலம் நிர்மூலம் என்பது தான் உண்மையான பழமொழி ஆகும். இதைத்தான் நாம் கிராமங்களில் "ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர் மூலம்" என்று மறுவி வந்த பழமொழியை கூறி பல பெண்களின் திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்கி உள்ளோம்.இங்கு கன்னி என குறிப்பிடுவது புரட்டாசி மாத மூலம் நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் அந்த குடும்பத்தை பாதிக்கும் என்பது ஆகும்.எனது அனுபவத்தில் வெறும் நட்சத்திரத்தை மட்டுமே வைத்து கொண்டு ஒரு மனித வாழ்வினை முடிவு செய்து விட இயலாது.


ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிக விசேஷமான பௌர்ணமி ஆகும்.இது #ஆவணிஅவிட்டம் என கொண்டாடப்படுகிறது.


  கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி அன்று #கார்த்திகைதீபம் தரும் நன் நாளாக கொண்டாடப்படுகிறது.இது அண்ணாமலையார்க்கு உகந்த விஷேச தினமாக கொண்டாடப்படுகிறது.


    தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிக சிறந்த பௌர்ணமி ஆகும் அன்று #தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் வரக்கூடிய பௌர்ணமி விசேஷ பௌர்ணமி ஆகும் இன்று #பங்குனிஉத்திர திருவிழா நடக்கிறது .இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


மேற்கண்ட வகையிலான பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியவான்கள் இவர்கள் தெய்வ கடாட்சம் மிக்க மகிழ்வாகவும ஆணையிடும் மற்றும் அரசியலில் உயரிய பதவிகளில் அமரக்கூடிய யோகத்தை பெற்றவராகவும் திகழ்வார்கள். சில சித்த புருஷர்களாகவும் இருப்பது உண்டு.


பௌர்ணமி அமைப்பில் முழுமையான ஒளி அளவை அடிப்படையாகக் கொண்ட யோகமாகும் .இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்யக் கூடியவர்களாகவும் ஆட்சி புரிந்தவர்களாகவும் ஆட்சி மன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் அரசியலில் உயரிய பதவி அமரக்கூடிய யோகம் படைத்தவராகவும் திகழ்வார்கள்.


பௌர்ணமியை நெருங்குகுகின்ற சந்திரன் அல்லது பௌர்ணமியை விட்டு விலகுகின்ற சந்திரன் ஆகிய இரண்டு சந்திரனின் நிலையும் வளர்பிறை சந்திரன் ஆகவே கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை அறிய வேண்டும்.


  விருச்சக லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தவராக இருந்தால் சந்திரன் உங்களுக்கு பாக்கிய அல்லது தர்ம அதிபதியாகவும் சூரியன் உங்களுக்கு கர்ம அல்லது ஜீவன அதிபதியாகவும் வருகிறார். எனவே விருச்சக லக்கினத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி யோக அமைப்பில் பிறந்திருந்தால் அவர்களுக்கு பௌர்ணமி யோகமும் தர்ம கர்மாதிபதி யோகமும் இணைந்து செயல்பட்டு சாதகரை உயரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்.


இதேபோல வளர்பிறை சந்திரனுக்கு ஆறு , ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இயற்கை சுப கிரகமான குரு ,புதன் மற்றும் சுக்கிரன் இருந்தாலும் #சந்திரஅதியோகம் எனப்படும் மிகப்பெரிய யோகத்தை ஜாதகருக்கு அந்த தசை காலங்களில் கொடுக்கிறது. இதே தேய்பிறை சந்திரனாக இருந்தால் இந்த யோகம் வேலை செய்யாது அதேபோல வளர்பிறை சந்திரனுக்கு ஆறு ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் சந்திர அதியோகம் வேலை செய்யாது.


   கடக வீட்டில் ஒரு கிரகம் நிற்க அந்த கிரகம் நல்ல பலனை தர வேண்டும் எனில் அந்த சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்க வேண்டும் .அவ்வாறு இருந்தால் அது தசை காலங்களில் மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கும். மாறாக தேய்பிறைச் சந்திரன் சேர்ந்தவனாக இருந்தால் வீடு கொடுத்தல் வலிமை மிகக் குறைவு என்ற வகையில் சராசரி வாழ்க்கை மனிதனுக்கு தரும்.


   ஒரு கிரகத்துடன் வளர்பிறை சந்திரன் சம சப்தமாக பார்த்தாலும் அல்லது வளர்பிறை சந்திரனுடன் சேர்ந்தாலும் அந்த சேர்க்கை அல்லது பார்வை பெற்ற கிரகங்கள் உடைய தசை மிகுந்த யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கும். வளர்பிறை சந்திரன் உடனான சேர்க்கை அல்லது பார்வை இன்னொரு குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை பெற்ற சுப தன்மைக்கு சமமாக இருக்கும்.


  ஒருவர் ஜாதகத்தில் பங்கம் அடையாத பௌர்ணமி யோகம் பெற்று லக்கனாதிபதி இயற்கை சுபக்கிரமாக இருந்து லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியையோ இயற்கை சுப கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை செய்தாலும் அந்த ஜாதகர் மிகுந்த யோகம் படைத்த சாதகராக திகழ்வார்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

யாரால் சாதிக்க முடியும்?

 யாரால் சாதிக்க முடியும்?





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் ஒரு முகப்பட்ட மனதால் ஒரு செயலை செய்யும் போது நிச்சயமாக அந்த செயலில் வெற்றி காண இயலும்.பரந்து விரிந்து கிடக்கும் சூரிய ஒளியை ஒரு குவி லென்சு கொண்டு குவிய செய்யும் போது அந்த லென்ஸ் வழியாக சென்ற சூரிய ஒளியானது ஒரு குறிப்பிட்ட ஒரு பொருளை பற்றி எரிய செய்வது போல் ,நம் அலை பாயும் மனதை கண்ட இடங்களில் அலைய விடாமல் ஓரே விஷயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தும் போது நிச்சயமாக நாம் மேற்கொள்ளும்  அந்த செயலில் வெற்றியை ஈட்ட இயலும்.


  மனதை அலை பாய விடாமல் ஒரே விஷயத்தில் ஈடுபட  எல்லோராலும் இயலாது.சாதனையாளர்களால் மட்டுமே தனது மனதை கையாள தெரியும்.


இந்த பிரபஞ்சத்தில் நாம் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நமக்குள் ஒரு நேர்மறை எண்ணங்கள் நம் மனதில் எழ வேண்டும்.


முதலில் நம்மால் முடியும் என்று விடாப்பிடியாக முயற்சி செய்தால் நிச்சயமாக அந்த முயற்சி நம்மை வெற்றிக்கனியை பறிக்க வைக்கும்.


எல்லோராலும் முதல் முயற்சியிலே வெற்றி பெற்று விட முடியாது. அவ்வாறு முதல் முயற்சியிலே வெற்றி பெற வேண்டுமாயின் அதற்குரிய ஜாதக அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும். அதற்கு நடக்கக்கூடிய தசா புத்திகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். லக்கனாதிபதியும் வலிமை பெற்ற நிலையில் இருக்க வேண்டும்.


உங்கள்  ஜாதகத்தில் லக்கனாதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அல்லது வேறு இடங்களில் நின்று வலிவு பெற்ற நிலையில் இருந்தாலும் அல்லது லக்கனாதிபதி பாவ கிரகமாக இருந்தாலும் லக்னத்தில் இருந்தால் சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்பு பெற்று அல்லது வேறு இடங்களில் நின்றாலும் இயற்கை சுப கிரகமாக பார்வை அல்லது சேர்க்கை பெற்றுள்ள  நிலையில்  இருக்க வேண்டும்.


பொதுவாக ஒருமுகப்பட்ட மனதிற்கு உங்கள் ஜாதகத்தில் மனநிலை காரகன் சந்திரன் உடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. சந்திரன் நீசம் அல்லது பகை பெற்று நின்றிருந்தாலும் சந்திரனை சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது சந்திரனை சனி சம சப்த்தமாக பார்த்தாலும் மனதளவில் பாதிப்பு இருக்கும் உறுதியான மனநிலை அற்றவர்களாக தேவையில்லாமல் தன்னை குழப்பிக் கொள்பவராக இருப்பார்.


 சில நேரங்களில் மன நிலை காரகன் சந்திரன் மற்றும் லக்கனாதிபதி ஆகிய இரண்டும் வலிமை பெற்று இருந்தாலும் நடக்கும் தசா புக்தி சரியாக இல்லாத நிலையில் தாம் மேற்கொண்ட காரியத்தில் சாதிக்க இயலாமல் போய் விடுவது உண்டு.ஆம் லக்கன அவ யோக தசை அல்லது நடப்பு தசை பாவ கிரகமான ராகு,சனி சேர்க்கை அல்லது சனியின் பார்வை பெற்ற நிலையில் அந்த தசையும் யோகத்தை தர இயலாத நிலையில் என்ன தான் அறிவாளி அல்லது திறமைசாலியாக இருந்தாலும் சாதிக்க இயலாமல் போய் விடுவது உண்டு.


சில நேரங்களில் சில துறைகளில் அறிவும் திறமையும் அதிகமாக இல்லாத சூழலில் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்று விடுவதற்கு காரணம் அவர்களுக்கு அந்த காலகட்டத்தில் சாதகமான யோக தசை நடப்பில் வருவதால் அந்த நேரத்தில் அவர்கள் மேற்கொள்ளும் காரியம் எளிதில் கைகூடி சாதனை மனிதர்களாக சமூகத்தில் மாறி விடுவது உண்டு. இதனால் தான் 

   "வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லையே !

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெறுவதில்லையே!! "

 என்று ஒரு படத்தில்  சந்திரபாபு பாடியது ஞாபகத்துக்கு வருகிறது.


     "எதற்கும் கால நேரம் வேண்டும்" என்று பெரியோர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம் .அதே போல சாதிக்கத் துடிக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனும் உமக்கான தக்க யோக தசை எது  ? என்று தெரிந்து கொண்டு அந்த தசை எந்த காலகட்டத்தில் வருகிறது என்பதையும் புரிந்து கொண்டு உமக்கு எந்த காரியத்தில் முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என்பதையும் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக  ராசி லக்னத்திற்கு இரண்டு மற்றும் பத்தாம் இடங்களில் தொடர்பு கொண்டு உள்ளது என்பதை கண்டறிந்து அந்த  அந்த கிரகம் தொடர்புடைய முயற்சிகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக செய்ய கட்டாயம் நீங்கள் சாதிக்க இயலும். சாதனை மனிதன் ஆக மாற முடியும்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

நடக்கும் தசா யோகத்தை அள்ளித் தர ?

 நடக்கும் தசா யோகத்தை அள்ளி தர?






செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


     ஒருவருக்கு எந்த கிரக தசை நடந்தாலும் அந்த கிரகம் இலக்கண யோகராக இருந்தாலும் சரி அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் சரி அல்லது கேந்திர , கோணம் அல்லது மறைவிட ஸ்தான அதிபதியாக இருந்தாலும் சரி அந்த கிரகம் யோகத்தை ஒருவருக்கு அள்ளித் தர மிக முக்கியமான ஒரே ஒரு நிபந்தனை அந்த கிரகத்தை இயற்கை சுபக்கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன், சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பார்வை  செய்தால் அல்லது சேர்ந்து இருந்தால் அந்த கிரகமானது ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக மாறிவிடும்.


ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி , மகரம் மற்றும் கும்பம் ஆகிய இலக்கணங்களுக்கு சூரியன் , சந்திரன், செவ்வாய் மற்றும் குரு தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன் போன்ற  கிரக தொடர்பு ஏற்படும் போது அந்த தசை அதிக யோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.


    இதே போல சுக்கிரன், புதன், சனி தசைகள் யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் சனி, செவ்வாய், ராகு ,கேது, தேய்பிறை சந்திரன், பாவியோடு சேர்ந்த புதன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த யோக தசையே ஜாதகருக்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.


இதே போல தனுசு, மீனம் ,மேஷம், விருச்சகம், கடக மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சுக்கிரன், புதன்  சனி தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்ப்பு ஏற்படும் போது அந்த தசை யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.


 ஆனால் அதே நேரத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகியவை சனி , ராகு ,கேது போன்றவற்றின்  பார்வை அல்லது சேர்க்கை  முறையில் தொடர்பு கொள்ள அந்த தசை அவயோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.


எனவே ஒரு கிரகமானது அதன் திசையில் யோகத்தை அள்ளித் தர வேண்டும் என்றால் இயற்கை சுபத்திரர்களுடைய பார்வை அல்லது செயற்கை தொடர்பை பெற்று வேறு எந்த வகையிலும் பாவருடைய தொடர்பில்லாத  நிலையில் இருக்க வேண்டும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


097151 89647 


மற்றொரு செல் ' 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)


அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc, M.A, BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

 கிரகணதோஷத்தால் உயரிய பதவியில் அமர முடியாத ஜாதகம்.

(உதாரண ஜாதக விளக்கம்)






செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


பிறந்த தேதி: 28.10 .1985

பிறந்த நேரம்: 9.50 am


ஜென்ம லக்னம்: தனுசு 

ஜென்ம ராசி: மேஷம் 

ஜென்ம நட்சத்திரம் :அஸ்வினி இரண்டாம் பாகம்.


  எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கனம் லக்கனாதிபதி, ராசி மற்றும் ராசி அதிபதி பலம் இழந்து விடக்கூடாது. கீழே கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு நீசம் பெற்று 12-ஆம் இடத்தில் உள்ள சனியால் மூன்றாம் பார்வையால் பார்க்கப்படுகிறார் . 


எனவே லக்கன அதிபதி பலம் இழந்து விட்டார் .லக்னத்தை செவ்வாய் நான்காம் பார்வையால்   பார்வை செய்கிறார். ராசியில் சந்திரனுடன் ராகு நெருக்கமாக இணைந்து செவ்வாய் பகவான் தனது எட்டாம் பார்வையால் பார்க்கப்படுகிறார்.

இவ்வாறாக லக்கனம் ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழந்து விட்டது .


   இவர் பௌர்ணமி யோகத்தில் பிறந்துள்ளார். ஐப்பசி மாதம் பௌர்ணமி அமைப்பில் பிறந்து இருந்தாலும் அன்று கிரகண தோஷம் ஏற்பட்டதால்,  இந்த பௌர்ணமி யோகம் மிகப் பெரிய அரசியல் உயரிய பதவியில் அமரக்கூடிய யோகத்தை தர வேண்டிய இந்த யோகமானது இந்த கிரகண தோஷத்தால் மின்சார துறையில் லயன் மேன் ஆக வேலை பார்க்கக்கூடிய ஒரு வேலை அவருக்கு கீழ்மட்ட வேலை கிடைத்துள்ளது. சுபத்துவ‌ படிநிலைக்கு ஏற்பவே பதவி அமையும் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரண ஜாதகம் ஆகும்.


மேலும் இவருக்கு 38  வயதை கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கான காரண காரியங்களையும் இந்த பதிவில் ஆராய்ந்து பார்ப்போம் .


    இவருடைய ஜாதகத்தில் லக்னம் ராசி இரண்டும் கெட்டுவிட்டது.இதேபோல லக்கன அதிபதியும் மற்றும் புத்திர காரகன் ஆன குரு பகவான் நீசம் அடைந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்ப அதிபதியான சனி பகவான் 12ஆம் இடத்தில் மறைந்து மூன்றாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தையும் மற்றும் குரு பகவானையும் பார்வை செய்து பாவ தன்மையை அடைந்து  விட்டார்.


   சந்திரனுடன் ராகு அதாவது ராசியில் ராகு ஏழாம் இடத்தில்  அரை பாவரான சூரியன் ,கேது சேர்க்கை 


    ராசிக்கு இரண்டு மற்றும் ஏழுக்கு உடைய சுக்கிரன் நீசம் அடைந்து பாவ கிரகமான செவ்வாய் உடன் சேர்க்கை.


தாம்பத்திய உறவை  தரக்கூடிய சுக்கிரன் நீசம் அடைந்து செவ்வாயுடன் சேர்க்கை அடைந்து பாவத்தன்மையடைந்து இருப்பதும் , புத்திர காரகன் குருபகவான் நீசம் அடைந்து சனி பகவானால் பார்க்கப்பட்டதும் திருமண காலதாமதம் ஆவதற்கான காரண காரியங்கள் ஆகும்.

மேலும் லக்கினத்திற்கு ஏழாம் இட அதிபதி அதாவது களத்திர ஸ்தான அதிபதி யான புதன் பகவான் 12ஆம் இடத்தில் மறைந்து சனியுடன் இணைந்து இருப்பது.


மேற்கண்ட காரணங்களான  ராசி, லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, ஏழு எட்டாம் இடங்கள் பாதிக்கப்பட்ட நிலை திருமணம் கால தாமதத்திற்கு காரணமாக அமைகிறது.


 இவருக்கு திருமணம் ஆவதற்கான சாத்தியக்கூறு உண்டா  ? என ஆராய்ந்து பார்த்தால் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் குரு பகவான் சனியால் பார்க்கப்பட்டு நீசம் அடைந்த நிலையில் இருந்தாலும் அதனுடைய 9ஆம் இடப்பார்வை தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் மற்றும்  செவ்வாய் மீது விழுவதால் நிச்சயமாக செவ்வாய் தசையில் திருமணம்  நடக்கும். அதாவது 40 வயதுக்கு மேல் திருமணம் நடக்கும் என்று சொல்லி அனுப்பினேன்.


நன்றி!


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


 097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்

)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

    M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

புத்திர பாக்கியம் கால தாமதமாக காரணம் மற்றும் அதற்கு உரிய சித்த வைத்தியம்

 புத்திர பாக்கியம் கால தாமதம் ஆக காரணம் மற்றும் அதற்கு உரிய சித்த வைத்தியம்.





செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


  ஒருவர் திருமணமான உடன் ஒரு சில ஆண்டுகளில் புதுமண தம்பதிகளை சந்திக்கக்கூடிய நண்பர்களாக இருந்தாலும் சரி , உறவினர்களாக இருந்தாலும் சரி மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கேட்கக்கூடிய முதல் கேள்வி " வீட்ல என்ன ஏதாவது விசேஷமா ? "என்று மறைமுகமாக குழந்தை பாக்கியம் பற்றிய கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.


 இன்றைய நவீன அறிவியல் காலத்தில் உணவு முறையினாலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் குழந்தை பாக்கியம் என்பது மிகவும் தள்ளி கொண்டு போகிறது.


 இன்றைய நவ நாகரீக இளைஞர்கள் திருமண பந்தத்தில் ஈடுபடும் போது அவர்கள் செக்ஸை விரும்பும் அளவிற்கு குழந்தையை பெற்று கொள்ள விரும்பவில்லை.


  கொஞ்சம் காலம் ஜாலியாக இருந்து விட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் போன்ற மனநிலை காரணமாக குழந்தை பாக்கியம் கால தாமதமாகி கொண்டு செல்கிறது .


 மேற்கண்ட அனைத்து காரணங்களும் மோலோட்டமாக பார்த்தால் சமூகத்தின் பார்வையில் உள்ள குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆக காரணமாக இருந்தாலும் ஜோதிட அடிப்படையில் பார்த்தால் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் மற்றும் தசா புக்தி ஆகிய இரண்டும் குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கு உரிய மிகவும் முக்கியமான காரணமாக அமைகிறது.


 ஒரு திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அவர்கள் இருவருடைய ஜாதகத்திலும் ராசி மற்றும் லக்கினத்திற்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து பார்த்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.


 ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது சனி இருப்பதோ அல்லது ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்வை செய்வது ,

ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ராகுவுடன் இணைந்து சனி பார்வை செய்வது இது போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் காலதாமதமாக மிகவும் அவசியமான காரணமாக திகழ்கிறது.


புத்திர தோஷம் என்பது நான்கு வகையாக அலசி ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.


  1) குழந்தை பாக்கியம் காலதாமதமாகி கொண்டு செல்வது 


   2) பெண் குழந்தை மட்டுமே பிறக்கக் கூடிய நிலை 


  3) இரு பால் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் எவ்வித ஆதரவும் கிடைக்காத நிலை

  

   4) குழந்தையே பிறக்காத நிலை


மேற்கண்ட நான்கு வகைகளில் புத்திர தோஷம் உண்டாகிறது.இவற்றை ஐந்தாமிடம் அதன் அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு பகவான் ஆகிய மூவரின் சுபத்துவ/பாவத்துவ படிநிலைக்கு ஏற்ப மற்றும் நடக்க கூடிய தசா புக்தி ஆகிய அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து நீங்கள் எந்த வகை என்பதை ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.


புத்திர தோஷத்தில் நீங்கள் மேற்குறிப்பிட்ட நிலையில் நீங்கள் எந்த படிநிலை என்பதை கண்டறிய உங்கள் லக்கனாதிபதி மற்றும் நடக்கும் மற்றும் நடக்க இருக்கும் தசாபுத்தி ஆகியவற்றை பொருத்தும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.


 புத்திர தோஷம் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு முடிவு நிலைக்கு வர வேண்டும் எனில் தம்பதிகள் இருவரின் ஜாதகத்தையும் அவர்களுக்கு நடக்கும் மற்றும் நடக்க இருக்கும் தசா புத்திகளுடன் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யப்பட வேண்டும்.


    சித்த வைத்திய முறையில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட "அக்காலத்து சித்த வைத்திய அனுபவம் முறைகள்" என்ற நூலில் இருந்து தரப்பட்ட வைத்தியம் உங்கள் பார்வைக்கு.


பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க மருந்து;


(செய்யும் முறையும், உபயோகமும்)


சுவடி மருந்து முறை


"குருபாதம் எலுமிச்சம் பழச்சாறு படி அதில் கருஞ்சீரகம் அந்த சாற்றில் உலர போட்டு 

நின்றுலத்தாய் உலர்த்தி பொடி செய்து அந்த பேரிரண்டு பங்கும் கூகை நீரு ஒரு பங்கும் வட்டி சூதகமான முன்னாள் புளிச்சாங்காடி தண்ணீரில் அந்தப் பொடியை போட்டு மூன்று நாள் கொடுத்தால் கர்ப்பம் உண்டாகும்".


பாடல் விளக்கம் :-


   பெண்கள் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்காலத்தில் சிலர் இருக்கிறார்கள் .ஆனால் கர்ப்பம் தரிக்காதிருக்க பல வகையான காரணங்கள் உள்ளன. இதன் நிவர்த்திக்கு மேலே சொல்லி இருக்கும் மருந்தினை அக் காலத்தில் அனுபவம் முறையில் சுவடிகளில் மூலமாக எழுதி வைத்திருக்கிறார்கள் அந்த மருந்தை விளக்கம் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


ஒரு லிட்டர் எலுமிச்சை பழத்தின் சாற்றில் நூறு‌ கிராம் எடைக்கு கருஞ்சீரகத்தை போட்டு நன்றாக ஊற வைத்து பிறகு இதனை நிழலில் நன்கு காய வைத்து பொடி செய்து இந்த இரண்டின் அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமான அளவு எடுத்துக் கொண்டு கூகை நீர் ஒரு பங்கு அளவுக்கு எடுத்து கலந்து வைத்துக்கொண்டு பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாவது நாள் காலை எதுவும் சாப்பிடாமல் இந்த மருந்தை புளிச்சாகடித் தண்ணீரில் பத்து கிராம் பொடியை போட்டு கலக்கி உட்கொள்ளவும் இப்படி மூன்று தினங்களுக்கு கொடுத்தால் கர்ப்பம் உண்டாகும்.


பத்தியம்


 இந்த மருந்தை சாப்பிடும் போது எதையும் சாப்பிடாமல் மருந்து சாப்பிட்ட நான்கு மணி நேரம் கழித்து சுவைக்கு தகுந்தார் போல் உணவு சேர்த்துக் கொள்ளலாம் .இதற்கு பத்தியம் வேறு எதுவும் இல்லை.


இவை தவிர இரண்டாவது மருந்து செய்யும் முறை


     1)சிற்றாமணக்கு எண்ணெய்- அரைலிட்டர்


     2) கரு நொச்சி சாறு -அரை லிட்டர்  


      3)கையாந்தகரை- 1/2 லிட்டர் 


     4)எலுமிச்சை பழச்சாறு -அரை லிட்டர் 


       5)நல்ல பசுவின் நெய் -ஒரு லிட்டர்


        6) மிளகு ஐம்பது கிராம்


         7) பெருங்காயம்- 50 கிராம் 


        8)நெருஞ்சி விதை- 50 கிராம்


மேற்கண்ட சாறு வகை ,எண்ணெய்,நெய் இவைகளை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மற்ற இதர மிளகு, பெருங்காயம் ,நெருஞ்சி விதை இவைகளை இடித்த பொடியை எண்ணெய் சாறு கலவையில் போட்டு இந்த கலவையை அடுப்பில் வைத்து லேசான தீயிட்டு எண்ணெய் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.


சாப்பிடும் அளவு 


மூன்று நாளைக்கு ஒரு சின்ன கரண்டி (15 மி.லி)


காலம்:

 மூன்று நாட்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும்.


குறிப்பு :


வீட்டு விலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாளிலிருந்து முதல் மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும் காலை வேலையில் தான் இந்த மருந்தை கொள்ள வேண்டும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கர்ப்பம் தரிக்கும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே & போன் பே எண் : 


097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Sunday, 27 October 2024

 உங்கள் ஜாதகத்தில் மூளையாக செயல்படும் கிரகம் எது?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


 

      ஒரு தனி மனிதனுடைய திறமைக்கும் நுண்ணறிவுக்கும் மற்றும் படைப்பாற்றலுக்கும் காரண கர்த்தாவாக விளங்கக்கூடிய மிக முக்கியமான கிரகம் எது என்றால் புதன் பகவான் ஆவார் .


      புதன் பகவான் மற்றவர் சிந்திக்கும் திறனிலிருந்து மாறுபட்டு சிந்தித்து புதிய ஒன்றைப் படைக்கும் படைப்பாற்றல் மிக்கவராக மற்றும் ஒரு கண்டுபிடிப்பாளராக விளங்குவார்.


 ஒருவர் என்றும் இளமையாக இருப்பதற்கும் மற்றும் மனதை புதுமையாக வைத்துக் கொள்வதற்கும் புதன் பகவானுடைய பங்கு என்பது அலாதியானது.


புதன் பகவான் கணினியை இயக்கி இணையத்தில் கொடி கட்டி பறக்கவும் முடியும் கவிதையை படைத்து கதை எழுதி கற்பனை உலகில் பறந்து செல்லவும் இயலும்.


 இயல், இசை மற்றும் நாடகம் என்று முத்தமிழிலும் ஒருவர் புகழ்பெற்று விளங்க முத்தமிழ் வித்தகராக திகழ ஜாதகத்தில் புதன் பகவான் உடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்..


 பாடலை இயற்றி இசையை ரசிக்கும் ஒரு திறமை மிகு ரசிகனாக விளங்க புதன் பகவான் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


   புள்ளி விவரங்களை தேடுதல், கணித அறிவில் சிறந்து விளங்குதல், ஜோதிடத்தில் வித்தகனாக திகழ புதன் பகவான் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


 புதன் பகவான் மனித மூளையாக செயல் படக்கூடிய கிரகம் ஆகும். சாஸ்திரங்களை மற்றும் சம்பிரதாயங்களையும் படைக்கக்கூடிய தன்மை படைத்தவராகவும் காவியங்களையும் இலக்கண இலக்கியங்களை படைப்பதற்கும், மற்றும் படிப்பதற்கும் மற்றும் அதன் மீது ஆர்வம் உண்டாவதற்கும் புதன் பகவான் உடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.


 ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து செயல்படுவதற்கும் , சிக்கலான புதிர்களை அவிழ்ப்பதற்கும், பிரச்சனைகளை தீர்வு கொடுப்பதற்கும் ஆலோசனை வழங்குவதில் மந்திரியாகவும் செயல்படக்கூடிய கிரகம் தான் புதன் பகவான் ஆவார்.


 மற்றவர் செல்லும் பாதையில் செல்லாமல் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி சமூகத்தில் தனக்கென ஒரு புதிய இடத்தை உருவாக்கிக் கொள்பவர் புதன் பகவானை வலிமையாக பெற்ற ஜாதகர் ஆவார்.


 விண்வெளியில் ஆராய்ச்சிக்கும் புதிய ஒன்றை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவராகவும் விளங்க புதன் பகவான் மிகவும் அவசியமான கிரகம் ஆகும்.


 புதன் பகவான் ஆனவர் மிதுனம், கன்னி ரிஷபம், துலாம் ,மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு லக்கன யோகராக செயல்படக்கூடிய கிரகமாகும்.

சிம்ம அதிபதி சூரியனுக்கு அதி நட்பு கிரகமாகும்.


 புதன் சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நட்பு கிரகங்களாக செயல்படுகிறது.


புதன் பகவான் சூரியன் உடன் அல்லது சூரியனுக்கு இருக்கக்கூடிய இடத்திற்கு முன்பின் ஒரு ராசிகளில் இருக்கக்கூடிய கிரகமாகும். எனவே புதன் பகவான் ஒரு உள்வட்ட கிரகம் என்று அழைக்கப்படுகிறது.


 வளர்பிறை சந்திர கேந்திரத்தில் புதன் பகவான் வலிமை பெற்று நின்ற நிலையிலும் அல்லது இயற்கை சுப கிரகமான குரு பகவானுடைய பார்வையை பெற்ற நிலையிலும் அந்த புதன் பகவான் அதிக சுப தன்மையை பெற்று புதனுடைய காரகத்துவமான படிப்பினை படிக்கக்கூடிய நபராக செயல்படுவார்.


   கணினி பேராசிரியர்,வங்கி ,நிதி துறை வேலை, கணித பேராசிரியராக திகழ்தல், மேடைகளில் ஏறி பேசக்கூடிய தனித்திறன் ,புள்ளி விவரங்களை தரக்கூடிய புள்ளியல் நிபுணத்துவம்,பாடல் ஆசிரியர் ,இசை அமைப்பாளர்,ஆர்ட் டைரக்டர், எடிட்டிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்றவை புதன் சார்ந்த துறைகளாக விளங்குகிறது.


  இனையத்தை பயன்படுத்தி மார்கெட்டிங் துறையில் சிறந்து விளங்குதல்,சமூக ஊடகங்களை பயன்படுத்தி புகழ் பெறுதல் போன்றவை புதன் பகவான் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.


புதன் பகவானை பலமான அமைப்பில் பெற்றவர்கள் ஆடிட்டர்,செய்தியை சேகரிப்பவர், சமூக ஊடகங்களையும் மற்றும் இணையத்தை பயன்படுத்தி மார்கெட்டிங் துறையில் சிறந்து விளங்க கூடிய அமைப்பு அனைத்தும் புதன் பகவானை தனது ஜாதகத்தில் வலிமையாக பெற்றவர்கள் ஆவார்.


மேஷம் மற்றும் விருச்சக லக்னங்களுக்கு புதன் பகவான் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் புதன் பகவான் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்து நல்ல பலனை தரக்கூடிய நிலையிலும் விளங்குகிறது.


மேஷ லக்னத்திற்கு புதன் பகவான் ஆறாம் இடத்தில் உச்சம் மற்றும் ஆட்சி பெற்று நிற்பதை விட மூன்றாம் இடத்தில் நின்று ஆட்சி பெற்று இருக்க கூடிய நிலையில் அதன் தசை வர கூடிய காலங்களில் மிகுந்த யோகத்தை ஜாதகருக்கு கொடுக்கிறது. இதே போல விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் இருப்பதைவிட பதினொன்றாம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருந்தால் அதன் தசை வர கூடிய காலங்களில் ஜாதகருக்கு மிகுந்த யோக பலனை தருகிறது.


  மேற்கண்ட வகையில் இந்த யோகத்தை தருவதற்கு கீழ்க்கண்ட விதி அடிப்படையிலே புதன் பகவான் ஆனவர் ஜாதகருக்கு மேஷம் , விருச்சிகம் லக்னத்திற்கு அதன் தசையில் நல்ல பலனை தருகிறது. பாவத் பாவக அமைப்பின் படி ஒரு கிரகம் இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகமாக இருந்தால் எந்த ஆதிபத்தியத்தோடு அதிகமாக தொடர்பு கொள்கிறதோ அவை சார்ந்த பலனை அதிகமாக தரும் அமைப்பை பெறுகிறது.


புதன் பகவான் உங்கள் அறிவுக்கும் மற்றும் உணர்வுக்கும் மூளையாக செயல்படக்கூடிய கிரகமாக விளங்குகிறது.புதன் வலிமை பெற்று பாவத்துவம் அடையாமல் இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட நிலையில் மனிதனை அறிவாளியாக மாற்றி அழகு பார்க்கிறது.


 புதன் பகவான் தனது சுபத்துவ படிநிலை க்கு ஏற்ப ஒரு மனிதனை அறிவாற்றலால் அகிலத்தை ஆளக்கூடிய மனிதனாக ஒருவரை மாற்றுகிறது.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

     M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

சனி பகவான் கெடுதல் மட்டுமே தரக்கூடிய கிரகமான ?

 சனி பகவான் கெடுதல் மட்டுமே தரக்கூடிய கிரகமா?



செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !


ஒரு ஜாதகத்தில் சனி பகவான் என்றாலே அதிக  கெடு பலனை  தரக்கூடிய கிரகமாகவே  நாம் பார்க்கிறோம் .வீட்டில் ஒழுங்காக வேலை பார்க்காமல் தொல்லை கொடுக்கக் கூடிய பையனை கூட நாம் " சனியன் புடிச்சவனே "என்று அழைக்கின்றோம்.


 சனி பகவான் அந்த அளவுக்கு கடுமையான கஷ்டங்களை கொடுக்கக்கூடிய கிரகமாகவே நாம் பார்த்தாலும் சனி பகவானும் சில நேரங்களில் ஜாதகரை உயரிய பதவியில் அமரக்கூடிய நிலையை உருவாக்கி தருகிறது.


 சனி பகவான் அதிக சுபத்துவமாக 

ராசி லக்னத்திற்கு இரண்டு  மற்றும் பத்தாம் இடங்கள் உடன்  தொடர்பு  கொள்ளும் போது  சாதகரை  வழக்கறிஞராக  மாற்றி தருகிறது.


 சனி பகவான் குருவுடன் இணைந்து சுபத்தன்மை அடையும் பொழுது கலப்படம்  இல்லாத ஆன்மீகத்தில் உயரிய நிலையில் அடையக்கூடிய தன்மையை தருகிறது.


சனி பகவான் கேதுடன் இணையும் பொழுது சூட்சும வலுப்பெற்று ஜாதகருக்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில் மாறுகிறது..


சனிபகவான் இருக்கும் இடத்தையும் பார்வை செய்யும் பாவங்கள் மற்றும் கிரகங்களை அதிக பாவத்தன்மை அடைய வைத்து கடுமையான கெடுபலனை அதன் தசைகளில் தர வைக்கிறது என்றாலும் சில நேரங்களில் அந்த சனி பகவானை குருபகவான் பார்த்த நிலையில் அல்லது இயற்கை சுப கிரகங்களான தனித்த புதன், 

சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் பார்வை அல்லது  சேர்க்கை முறையில் இணையும் பொழுது அப்படியே ஜாதகருக்கு முற்றிலும் நல்ல பலனை தரக்கூடிய ஒரு கிரகமாக மாறி அந்த தசைகளில் ஜாதகருக்கு நல்ல பலனை தரும் கிரகமாக மாறுகிறது.


 சனி பகவான் ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு அதன் தசை காலங்களில் அதிக யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக அமைகிறது. இதேபோல மகரம் மற்றும் கும்பம் லக்கனங்களுக்கு லக்கனாதிபதி என்ற வகையில் ஜாதகருக்கு சில நல்ல பலனை தரக்கூடிய நிலையில் அடைகிறது அவரே லக்ன யோகராகவும் செயல்படுவார் .இதேபோல கன்னி லக்னங்களுக்கு சத்ரு ஸ்தான அதிபதியாக இருந்தாலும் அவரே லக்ன யோகராகவும் செயல்படுகிறார்.


 சனி பகவான் அதிக சுபத்துவமான நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கனரக வாகனங்களை இயக்குதல், ஆட்டோ மெக்கானிக் ,ஆட்டோமொபைல் விமானங்களை இயக்குதல் ஏரோநாட்டிக் இன்ஜினியர் குடிக்க இயலாத பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் போன்ற திரவங்களை  விற்பனை செய்பவர் போன்ற வகையிலான நல்ல பலனை தரக்கூடிய நிலையினை அடைவார்.


சனி பகவானை கர்மகாரகன் என்று அழைக்கிறார்கள். நீதி வழங்கக்கூடியவராக இருப்பவரும் சனி பகவான் ஆவார். சனி பகவான் மனித வாழ்வில் உன்னத நிலை அறிந்து கொள்ளக்கூடிய கிரகமாகும்.


 சனி பகவான் மனிதனுக்கு நிறைய கஷ்டங்களைத் தந்து அதன் மூலம் உறவு என்பது என்ன ? நட்பு யார்  ? உண்மையாக நம்மிடம் பழகக்கூடியவர் யார் ? நமக்கு கெடுதல் தர காத்திருப்பவர்  யார்? வாழ்வில் தாழ்ந்து போனால் சந்தோஷ் படுபவர் யார்? 

இது போன்ற பல்வேறு விஷயங்களை அதன் தசை காலங்களிலும் அல்லது  புக்தி காலங்களிலும்  மற்றும் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற கோச்சார காலங்களிலும் நம்மை புரிய வைப்பவர் வாழ்வில் நிதர்சனமான உண்மைகளை  தெரிந்துகொள்ள வைக்கக்கூடிய ஒரே கிரகம் சனி பகவான் ஒருவரே ஆவார்.


நன்றி.


Online Astro Consultation


வாட்ஸ் அப் & செல் &. கூகுள் பே


  097151 89647 


மற்றொரு செல்:  7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

Friday, 25 October 2024

உங்களின் குண நலன்களை முடிவு செய்வது யார்?

 உங்களின் குண நலன்களை முடிவு செய்வது யார்?




    செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை!


  ஒருவருடைய குண நலன்களை முடிவு செய்வது அவருடைய ஜாதகத்தில் லக்கனாதிபதி யார் ?  என்பதை பொருத்தும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொருத்தும், 

எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறது என்பதை பொருத்தும் அமைகிறது.


 லக்கனாதிபதியானவர் இயற்கை பாவ கிரகமா  ? அல்லது சுப கிரகமா ? என்பதை முதலில் கவனிக்கப்பட வேண்டும் பிறகு அவர் எந்த வீட்டில் இருக்கிறார் அந்த வீடு அந்த கிரகத்திற்கு நட்பா, உறவா, பகையா மேலும் அந்த கிரகத்திற்கு  வீடு கொடுத்தவன் யார் ? என்பதை கவனிக்க வேண்டும்.


  லக்கனாதிபதியோடு இணைந்துள்ள அல்லது பார்வை செய்கின்ற கிரகத்தின் தன்மையைப் பொருத்தும் உங்களுடைய குணநலமும் அமையும்.


   லக்கனத்தை இயற்கை சுப கிரகமான குரு பகவான், வளர்பிறை சந்திரன், 

தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்க்கின்றதா ? அல்லது இயற்கை பாவ கிரகமான சனி, செவ்வாய்,  தேய்பிறை சந்திரன்,  மற்றும் சூரியன் போன்ற கிரகங்கள் பார்க்கிறதா  ? என்பதை பொருத்தும் சாதருடைய குணநலன்கள் அமைகிறது. இது போன்று பல விவரங்களை ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.


  லக்னத்தில் குரு பகவான் இருந்தாலும் அல்லது லக்கனத்தை குரு பார்த்தாலோ லக்கனாதிபதியுடன் குரு பகவான் இணைந்து அல்லது பார்வை செய்திருந்தாலோ சாதகர் நல்ல குணம் படைத்தவராக இருப்பார். அடுத்தவருக்கு உதவக்கூடிய  தாரளமான குணம்  படைத்தவராக இருப்பார். நீதி ,நியாயம் நேர்மை போன்ற  தன்மைகளுக்கு கட்டுப்பட்டவர் அநியாயத்துக்கு நல்லவராகவும் அதே நேரத்தில்  ஏமாளியாகவும் இருப்பார்.


  லக்னத்தில் சனி பகவான் இருந்தாலும் அல்லது லக்னத்தை சனி  பார்த்தாலும் அல்லது லக்னாதிபதி ஆனவர் சனியின் சேர்க்கை அல்லது பார்வை போன்ற முறைகளில் தொடர்பு பெற்றிருந்தாலும் சாதகர் நய வஞ்சகத் தன்மை உடையவராகவும் பொறாமை குணம் படைத்தவராகவும் அடுத்தவர்  வளர்ச்சியை கண்டு தாங்கிக் கொள்ளாத மனநிலை படைத்தவராகவும் இருப்பார் குள்ள தன்மை கொண்டவர் நல்ல குணங்கள் அவரிடம் தேடிப் பார்க்க வேண்டும் சற்று சோம்பேறித்தனம் ,  எந்த செயலை செய்வதற்கு தயக்க குணம் படைத்தவராகவும் இருப்பார். இந்த பலன் மாறுபடவும்  வாய்ப்பு உண்டு. ஏன் பலன் மாறியது என்றால் இதுபோன்று லக்னத்தோடு தொடர்பு கொண்ட சனி பகவானை இயற்கை சுப கிரகமான குரு வளர்பிறைச்சந்திரன் தனித்த புதன்  மற்றும் சுக்கிரன் ஆகியவை தொடர்பு கொள்ளும் பொழுது  மேற்கண்ட பலன் மாறுபட்டு நல்ல பலனை தரும் நிலைக்கு தள்ளப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


 லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது லக்கனத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கனாதிபதி யாகவே செவ்வாய் இருந்தாலும் சாதகர் சற்று வீம்பு குணம் படைத்தவராகவும் மற்றவர்களை பற்றி அலட்டிக் கொள்ளாமல் முரட்டு குணம் படைத்தவராக இருப்பார்.


 லக்னத்தில் புதன் பகவான் இருந்தாலும் அல்லது லக்கனத்தை புதன் பகவான் பார்த்தாலும் சாதகர் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் உடையவராகவும் அடுத்தவர் மனதை பார்த்தவுடன் படிக்கும் எண்ணம் அல்லது தன்மை படைத்தவராகவும் இருப்பார். எதனையும் யூகிக்க அறியும் தன்மை படைத்தவராகவும் இருப்பார் . எதையும் கணக்கு போட்டு பேசக்கூடிய எண்ணம் உடையவராக இருப்பவர். உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் ஒரு விதமான கணக்கு போட்டு வாழக்கூடிய தன்மை படைத்தவராக இருப்பார்.


 லக்னத்தில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது சுக்கிரன் பார்த்தாலும் சாதகர் வேடிக்கையான மனநிலை கொண்டவராக எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியான மனதோடு வாழக்கூடிய கலை ரசனை படைத்தவராக திகழ்வார்.


லக்னத்தில் சூரியன் இருந்தாலும் லக்னத்தை சூரியன் பார்த்தாலும் அதிகார தோரணை உடையவராக இருப்பார். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவராகவும் இருப்பார் .அதுவே சில நேரங்களில் அவர்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் சில நேரங்களில் அமைந்துள்ளது உண்டு.

லக்னத்தில் சூரியன் இருந்து பௌர்ணமி அமைப்பில் இருப்பின் அதிகாரம்  தரும் அரசு பதவியில் அமரக்கூடிய யோகம் சாதகருக்கு உண்டாகும்.


லக்னத்தில் சந்திரன் இருந்தாலும் சந்திரன் பார்த்தாலும் குளிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரராக இருப்பார். வேடிக்கை வினோதமாக பேசக் கூடியவராகவும் எல்லாரையும் அன்போடு அழைக்க கூடியவராகவும் இருப்பார்.


  லக்னத்தில் ராகு இருப்பின் நயவஞ்சக தன்மை கொண்டவராகவும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கபடதாரியாகவும் இருப்பார் இவர் பேச்சில் இரட்டை  அர்த்தம் இருக்கும். தன்னம்பிக்கை அற்றவராக இருப்பார் உடல் மெலிந்த தேகம்  உடையவராக காணப்படுவார்.லக்கனத்தில் கேது  இருப்பின் எதையும் யூகித்து அறியும் தன்மை படைத்தவராக இருப்பார்.தன்னம்பிக்கை அற்றவராக இருப்பார்.


நன்றி.


Online Astro Consultation 


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே


 097151 89647 


மற்றொரு செல்; 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)




அன்புடன் 


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

   M.Sc,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் 

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.