Friday, 25 October 2024

சிலருக்கு நம்மை பிடிக்காமல் போவதன் காரணம் என்ன?

 சிலருக்கு நம்மை பிடிக்காமல் போவதன் காரணம் என்ன?




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


  ஒரு சிலருக்கு என்னதான் நீங்க நல்லதே பண்ணினாலும் என்னதான் அன்பாக பேசினாலும் அவங்களுக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது. இப்படிப்பட்ட ரகத்தையும்  நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீங்க.


  ஓரிடத்தில் வேலை பார்க்கும் போது அல்லது ஒரு இடத்தில் படிக்கும் போதும் ஒரு சில பேருக்கு ஒரு குறிப்பிட்ட நபர் மீது மட்டும் ஒரு விதமான ஈர்ப்பு வருவது உண்டு.


 இதே போல ஒரு இடத்தில் பணி புரியும் போதும் அல்லது வேலை பார்க்கும் போதும் ஒருவருக்கு ஒரு சில பேர பிடிக்காம போறதும் உண்டு. அவ்வாறு பிடிக்காம போறத நேரடியாக எதிர்ப்பாக காட்டுவதையும் பார்த்திருக்கிறோம்.


ஆனா ஒரு சிலருக்கு மட்டும் எல்லாருக்கும் அவர் பிடிச்ச நபராக இருப்பார்.


 ஒரு சிலர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அவர்கள் வேலையை அவர்கள் பாட்டுக்கு மற்றவர்களை பாதிக்காமல் செய்து கொண்டிருப்பார்கள் இதுபோன்ற 

நபர்களையும் பல பேருக்கு பிடிக்காது.


மேற்கண்ட இந்த வகையான மாற்றங்களுக்கு அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளும் லக்கனம்  மற்றும் லக்கனாதிபதி,  ராசி மற்றும் ராசி அதிபதி ஆகிய இவற்றை எல்லாம் பொறுத்து அமைகிறது .மேலும் நடக்கக்கூடிய தசையை பொருத்தும் உங்களுடைய நட்பு வட்டமும் சரி, உங்களுடைய காதல் வட்டமும் சரி அமைகிறது.


 நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றபடியே உங்களுடைய நட்பும் அமைகிறது. உங்கள் நண்பரை காட்டு நீ யார் என்று கூறுகிறேன். உங்கள் ஜாதகத்துல லக்னத்தையும் ,லக்கனாதிபதியையும் ராசி மற்றும் ராசி அதிபதியையும் இயற்கை சுப கிரகங்கள் பார்த்தால் உங்களை சுற்றி நல்ல நட்பு வட்டம் எப்பொழுது இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.


இதே போல உங்கள் நட்பு நிலையை பற்றி தெரிந்து கொள்ள ஏழாம் இடமும் மிகவும் உதவுகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தை இயற்கை சுப கிரகங்கள் பார்த்தாலும் ஏழாம் அதிபதியை இயற்கை சுபகிரகங்கள் பார்த்தாலும் உங்களைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.


 உங்க ஜாதகத்தில் லக்னத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அல்லது லக்கனத்தை பாவ கிரகங்கள் பார்த்தாலும் அதே போல லக்னத்தில் சனி இருந்து ஏழாம் இடத்தை பார்வை செய்தாலும் உங்களை யாருக்கும் பிடிக்காது .உங்களை சுற்றியுள்ள நபர்களுக்கு உங்களை அறவே பிடிக்காமல் போவதற்கு இதுவே ஒரு காரணமாக அமைகிறது.


 லக்னத்தில் சுப கிரகங்கள் 

இருந்து லக்னத்தையும் மற்றும் ஏழாம்  இடத்தையும் சுப தன்மை படுத்தி இருந்தாலும் உங்களுக்கு அவயோக தசைகள சத்ரு ஸ்தான அதிபதியான ஆறாம் இட மற்றும் எட்டாம் இடம் அதிபதி  தசை நடப்பில் இருந்தாலும் அல்லது கோச்சார  அடிப்படையில் ஏழரை அல்லது அஷ்டம. சனி  நடப்பில் இருந்தாலும் அதிலும் குறிப்பாக ஏழரைச் சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகக்கூடிய காலங்களில் உங்களுக்கு நீங்கள் நல்லதே செய்தாலும் மற்றவர்களுக்கு அது கெடுதலாக போய் முடியும். உங்களை சுற்றி உள்ள நபர்கள் அனைவருக்கும் அந்த காலகட்டங்களில் பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.


வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும் அல்லது வாக்கு ஸ்தானத்தை  சனி பார்த்தாலும் மற்றவருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அது கெடுதலாக போய் விடுகிறது.


  ஒரு சிலருக்கு என்ன தான் விரும்பி பேசினாலும் அல்லது நல்லது நினைத்தாலும் உங்களை பிடிக்காமல் போவதற்கு லக்கனம்,ராசி  மற்றும் அதன் அதிபதி மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.


 ஒரு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் மீது ஈர்ப்பு வருவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட  ராசிக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட ராசிகள் மீது வெறுப்பு வருவதும் சகசமான ஒன்றாகும்.


 உதாரணமாக மகர மற்றும் கும்பம் ராசி காரர்களுக்கு கடக மற்றும் சிம்மம் ராசி காரர்களை ஏனோ வெகுவாக கவர்வது இல்லை.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)



அன்புடன்


சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

      M.SC,M.A,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,

கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: