Friday, 25 October 2024

 மனைவியுடன் முழுமையான தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க...




செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


   ஒருவர் மனைவியுடன் தாம்பத்திய சுகத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று அவரது ஜாதகத்தில் தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய களத்திரகாரர்கள் என்று சொல்லக்கூடிய சுக்கிர பகவான் மிக முக்கியமான கிரகம் ஆகும் சுக்கிரன் பகவான் பலவீனமடைய கூடாது .பாவத்தன்மையும் அடையக்கூடாது.


  இதே போல மனைவியுடன் முழுமையான தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் ராகு போன்ற பாவக்கிரகங்கள் இருப்பதோ அல்லது ஏழாம் இடத்தை சனி செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் பார்ப்பதோ அல்லது ஏழாமிட அதிபதியுடன் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவக்கிரகங்கள் பார்ப்பது அல்லது சேர்க்கை செய்வது நல்லது அல்ல.


 மாறாக ஏழாம் இடத்தை இயற்கை சுப கிரகமான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் தனித்த புதன், சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அவர் மனைவியுடன் முழுமையான தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய யோகம் படைத்தவராவார் ஒருவருக்கு ஒருத்தி என உன்னத பண்பாட்டோடு வாழக் கூடியவராக இருப்பார்.


    சுக்கிரன் நீசம் அடைந்தால் கூட ஒரு மனைவி கட்டாயம் உண்டு. நீசம் அடைந்த சுக்கிரன் பகவான் உடன் சனி, செவ்வாய் ,ராகு போன்ற பாவக் கிரகங்கள் உடன் சேரும் பொழுது அவர் மனைவி அல்லாத / கணவன் அல்லாத மற்றவருடன் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையை ஜாதகருக்கு கொடுக்கும்.


 ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் எந்த பாவ கிரகங்களும் இல்லாமல், ஏழாம் இடத்தை பாவ கிரகங்கள் பார்க்காமல் மற்றும் களத்திரகாரன் சுக்கிரனும் வலிமை பெற்று இயற்கை சுபக்கிரக தொடர்பை பெறும் போது அவர் மனைவியுடன் நீண்ட தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க கூடிய பாக்கியம் படைத்தவராக இருப்பார்..


     மனைவி/ கணவன் உடன் முழுமையான தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க திருமண வயதில் சுக்கிர தசையோ அல்லது சுக்கிரனுடைய வீட்டில் உள்ள கிரகங்கள் தசை அல்லது புத்தி அல்லது சுக்கிர புத்தி நடக்க கூடிய காலங்களில் தாம்பத்திய சுகத்தில் மனைவி முழுமையான திருப்தி அடையக்கூடிய நிலை உண்டாகும்.


  எனவே உங்கள் ஜாதகத்தில் முழுமையான தாம்பத்திய சுக திருப்தியை மனைவி மூலம் அனுபவிக்கும் ஏழாம் இடம், அதனுடைய அதிபதி மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆகியவற்றை பொருத்தும் ,நடக்கக்கூடிய தசா புத்திகளை பொருத்தும் மற்றும் கோச்சாரப் பலன்களை உட்படுத்தும்.


நன்றி


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 


மற்றொரு செல்: 7402570899


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறைகளைப் பெறலாம்.)




அன்புடன்

  சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 

        M.SC,MA,BEd

ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: