உங்கள் வாழ்வில் உங்களுக்கு மிகவும் கஷ்டமான காலகட்டம் எது?
செவ்வாய்ப்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவருடைய வாழ்வில் நிலையை முடிவு செய்வதில் முதன்மையானது அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கன பாவகம் ஆகும்.
ஒருவர் அதிக கஷ்டம் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளவும் அல்லது யோகம் வரக்கூடிய நிலையில் அந்த யோகத்தை அனுபவிக்கவும் அவருடைய ஜாதகத்தில் லக்கின பாவகம் மிகவும் அவசியமானது.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் சுப கிரகம் இருந்து லக்கனாதிபதியும் இயற்கை சுப கிரகங்களோடு தொடர்பு பெற்று லக்கனத்தை இயற்கை சுபக் கிரகங்கள் ஆன குரு பகவான் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் அவர் பிறக்கும்போது ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்கக்கூடிய நிலையும் அடிப்படையிலேயே ஓரளவு வசதி படைத்த நிலையில் பிறக்கக்கூடிய வாய்ப்பையும் பெறுகிறார் .
மாறாக லக்கனத்தை சனி ,செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற முறைகளில் தொடர்பு கொள்ள அல்லது லக்கனத்தில் ராகு, சனி மற்றும் செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருக்க இது போன்ற நிலையில் ஒருவர் பிறக்கும் போது அடிப்படையே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து அல்லல் படக்கூடிய ஒரு சூழ்நிலையை அந்த ஜாதகர் கொடுக்கும் என்பதை அந்த லக்கின பாவத்தை வைத்து நாம் கணித்து விட முடியும். இது போன்ற அமைப்பில் பிறந்தவர்களுக்கு எவ்வளவு தான் யோகத்தை வந்தாலும் அதை அனுபவிக்க கூடிய தன்மை இல்லாத நீங்கள் வாழ்வில் பெரும்பகுதி போராடிக் கொண்டிருக்கக்கூடிய நிலையை உருவாக்கும்.
பொதுவாக ஒருவர் அதிகமாக கஷ்டப்படக்கூடிய காலத்தை கண்டறிய எவ்வாறு லக்னத்தையும் மற்றும் லக்கனாதிபதியையும் மேற்கண்ட வகையில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமோ அதே போலவே ஒரு மனித வாழ்வின் வாழ்வியல் சம்பவங்களை முடிவு செய்வது அவர்களுக்கு தொடர்ந்து பிறப்பிலிருந்து நடக்க கூடிய தசா புத்திகளே காரணமாக அமைகிறது.
ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்படக்கூடிய அமைப்பில் இருக்கக்கூடிய ஜாதகமா ?
அல்லது
பிறக்கும்போது கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து பிறகு தனது கடின முயற்சியால் அதாவது உகந்த தசா அமைப்பால் உயர்வான நிலை அடையக்கூடிய ஜாதகமா ?
அல்லது
பிறக்கும்போதே" born with silver spoon" என்று சொல்லக்கூடிய வகையில் பணக்கார வீட்டில் சகல வசதிகளுடன் பிறந்து பணக்காரராகவே வாழ்ந்து மறைய கூடிய ஜாதகமா ?
போன்ற மேற்கண்ட வகைகளில் நீங்கள் எந்த ரகம் போன்ற விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க அவரது ஜாதகத்தில் பிறப்பிலிருந்து நடக்கக்கூடிய தசா புத்திகள் மிக முக்கிய மூல ஆதாரமாக அமைகிறது.
நம் பதிவின் தலைப்புக்கே செல்வோமானால் உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு அதிகமான கஷ்டங்களை தரக்கூடிய காலகட்டம் எது என ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ஜாதகத்தில் உங்கள் லக்னத்திற்கு அவ யோக தசைகள் நடக்கக்கூடிய காலங்களிலும் அல்லது ஆறு மற்றும் எட்டுக்குடைய தசா புத்திகள் நடப்பில் இருக்கக் கூடிய காலங்களிலும் மிக கடுமையான கஷ்டங்களை உங்க வாழ்க்கையில் சந்திக்க கூடிய காலமாக இருக்கும். இவ்வாறு உகந்த தசை நடக்காத காலகட்டத்தில் கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி சேர்ந்து நடந்தால் உங்கள் வாழ்வில் அந்த காலகட்டம் மறக்க முடியாத துன்பங்களை அனுபவித்த காலகட்டமாக அது அமைகிறது. உங்கள் குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தையும் ஆய்வு செய்து பார்த்தால் உங்களுக்கு, மனைவிக்கு அல்லது பிள்ளைகளுக்கும் கோச்சார அடிப்படையில் ஏழரை அஷ்டமச்சனி போன்றவையோ அல்லது அவயோகத் தசைகளும் நடப்பில் இருக்கும்.
உங்கள் லக்கினத்திற்கு அவ யோக தசை எது ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழ்கண்ட குறிப்புகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் மற்றும் விருச்சிக லக்கினத்திற்கு புதன் தசையும்,
ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு குரு தசையும்,
மிதுனம் மற்றும் கன்னி லக்னத்திற்கு செவ்வாய் தசையும்,
கடகம் மற்றும் சிம்ம லக்கினத்திற்கு சனி தசையும்,
தனுசு மற்றும் மீனம் ம் லக்னத்திற்கு சுக்கிரன் தசையும்,
மகரம் லக்னத்திற்கு சூரிய தசையும் ,
கும்ப லக்னத்திற்கு சந்திர தசையும்,
அவ யோகத்தை தரக்கூடிய தசை ஆகும்.ஆனால் இதில் விலக்கும் உண்டு.
உதாரணமாக கன்னி லக்கனத்திற்கு செவ்வாய் தசை அவ யோக தசையாக இருந்தாலும் மூன்றாம் இடத்தில் நின்று ஆட்சி பெற்ற நிலையில் முதலில் ஜாதகருக்கு கீர்த்தி புகழ் மற்றும் அந்தஸ்து தருவார்.
இது போன்ற அவயோக தசை நடந்து கட்டங்களை சந்திக்கும் போது அந்த தசை நாதனுக்குரிய உரிய பரிகார பூசைகள் செய்து அந்த கஷ்டத்திலிருந்து விலகலாம்.
பரிகார பூசை விவரங்களை தெரிந்து கொள்ள எனது செல் மற்றும் வாட்ஸ் அப்பில் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
Online Astro Consultation
செல் & வாட்ஸ் அப் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment