நடக்கும் தசா யோகத்தை அள்ளி தர?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
ஒருவருக்கு எந்த கிரக தசை நடந்தாலும் அந்த கிரகம் இலக்கண யோகராக இருந்தாலும் சரி அல்லது லக்கன அவ யோகராக இருந்தாலும் சரி அல்லது கேந்திர , கோணம் அல்லது மறைவிட ஸ்தான அதிபதியாக இருந்தாலும் சரி அந்த கிரகம் யோகத்தை ஒருவருக்கு அள்ளித் தர மிக முக்கியமான ஒரே ஒரு நிபந்தனை அந்த கிரகத்தை இயற்கை சுபக்கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன், சுக்கிரன் மற்றும் தனித்த புதன் பார்வை செய்தால் அல்லது சேர்ந்து இருந்தால் அந்த கிரகமானது ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக மாறிவிடும்.
ரிஷபம் ,துலாம், மிதுனம், கன்னி , மகரம் மற்றும் கும்பம் ஆகிய இலக்கணங்களுக்கு சூரியன் , சந்திரன், செவ்வாய் மற்றும் குரு தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன் போன்ற கிரக தொடர்பு ஏற்படும் போது அந்த தசை அதிக யோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.
இதே போல சுக்கிரன், புதன், சனி தசைகள் யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் சனி, செவ்வாய், ராகு ,கேது, தேய்பிறை சந்திரன், பாவியோடு சேர்ந்த புதன் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த யோக தசையே ஜாதகருக்கு அவ யோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.
இதே போல தனுசு, மீனம் ,மேஷம், விருச்சகம், கடக மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சுக்கிரன், புதன் சனி தசைகள் அவ யோகத்தை தரக்கூடிய தசையாக இருந்தாலும் இயற்கை சுப கிரகமான குரு பகவான் , வளர்பிறை சந்திரன் , தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் பார்வை அல்லது சேர்க்கை போன்ற தொடர்ப்பு ஏற்படும் போது அந்த தசை யோகத்தை அள்ளித் தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகியவை சனி , ராகு ,கேது போன்றவற்றின் பார்வை அல்லது சேர்க்கை முறையில் தொடர்பு கொள்ள அந்த தசை அவயோகத்தை தரக்கூடிய தசையாக மாறிவிடுகிறது.
எனவே ஒரு கிரகமானது அதன் திசையில் யோகத்தை அள்ளித் தர வேண்டும் என்றால் இயற்கை சுபத்திரர்களுடைய பார்வை அல்லது செயற்கை தொடர்பை பெற்று வேறு எந்த வகையிலும் பாவருடைய தொடர்பில்லாத நிலையில் இருக்க வேண்டும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல் ' 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc, M.A, BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment