ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை!
ஒரு ஜாதகத்துக்கு மிக முக்கியமானது ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் , அவர்கள் ஜாதகத்தில் நடக்க கூடிய தசா புத்திகள் மற்றும் கோச்சார பலன்கள் இவையே மிக மிக முக்கியமானதாகும். இதில் திருமணம் என்று வரும்பொழுது இருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தையும் நடக்கின்ற மற்றும் நடக்க இருக்கின்ற தசா புத்திகளை வைத்து ஆய்வு செய்து பார்த்து நீண்ட நெடிய ஆயுள் இருக்கும் பொழுது ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும் நிச்சயமாக திருமணம் செய்யலாம்.
தம்பதிகள் இருவருடைய ஆயுளை கணிக்க அஷ்டமாதிபதி என்னும் எட்டாம் இட அதிபதி ,ஆயுள் காரகன் சனி , அவர்கள் ஜாதகத்தில் உள்ள பாதகாதிபதி,மாரகாதிபதி இவைகள் யார் என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட பல்வேறு கூறுகளை உங்களுக்கு நடக்கும் மற்றும் நடக்க இருக்கும் தசா புக்தி கொண்டு ஆய்வு செய்து பார்க்க பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் ஜாதகத்தில் ஆயுள் பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவருடைய லக்னம் மற்றும் லக்கனாதிபதியுடைய வலிமையை கட்டாயம் அலசி ஆராய வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் லக்கனாதிபதி வலிமையாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவர்களுக்கு ஒரு மாரகமான தசா புத்திகள் வந்தாலுமே அதிலிருந்து தப்பித்து விடக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும். அதே நேரத்தில் லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் மாரக மற்றும் பாதக அதிபதி தசைகள் அல்லது புத்திகள் வரக்கூடிய காலகட்டங்களில் மாரகத்தை சந்திக்கக்கூடிய நிலையினை தரலாம்.
உங்களுடைய ஜாதகத்தில் சர லக்கனத்திற்கு பதினொன்றாம் இடம் அதிபதி பாதகாதிபதி ஆகும்.
ஸ்திர லக்கனங்களுக்கு ஒன்பதாம் இட அதிபதி பாதகஅதிபதியாகவும் மற்றும் உபய லக்னங்களுக்கு ஏழாம் இடம் அதிபதி பாதக அதிபதியாக செயல்படுகிறது.
இதே போல மாரக ஸ்தானம் என்பது சர லக்கினத்திற்கு இரண்டு மற்றும் ஏழாமிட அதிபதி,
ஸ்திர லக்னங்களுக்கு மூன்று மற்றும் எட்டாம் இட அதிபதி
உபய லக்னங்களுக்கு 7 மற்றும் 11-ம் இட அதிபதி ஆகும் .
பொதுவாக மாரக ஸ்தானம் என்பது இரண்டு மற்றும் ஏழாம் இடம் ஆகும்.
ஒருவருடைய ஆயுள் ஸ்தானத்தை முடிவு செய்வதற்கு வெறும் எட்டாமிடமும் அதன் அதிபதியும் மற்றும் ஆயுட்காரகன் சனி பகவானை மட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்ய முடியாது.
இவை தவிர பாதகாதிபதி தசையில் மாரகாதிபதி புத்தி,
பாதகாதிபதி தசையில் அஷ்டம அதிபதி புத்தி,
மாரகாதிபதி தசையில் பாதகாதிபதி புத்தி
மாரகாதிபதி தசையில் அஷ்டம அதிபதி புத்தி,
அஷ்டம அதிபதி தசையில் பாதக அதிபதி புத்தி,
அஷ்டம அதிபதி தசையில் மாரகாதிபதி புத்தி
மேற்கண்ட இவை எல்லாம் ஒருவருக்கு மரணத்தை அல்லது மரணத்துக்கு நிகரான தொல்லையை தரக்கூடிய காலகட்டமாகும்.
எனவே திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது தம்பதிகள் இவருடைய ஜாதகத்தில் உள்ள தசா அமைப்புகளை அதாவது நடக்க இருக்கின்ற அனைத்து தசா புக்திகளை ஆண்டு வாரியாக கணக்கிட்டு மேற்குறிப்பிட்ட வகையிலான மாரகத்தை செய்யக்கூடிய தசா புத்திகள் வருகிறதா ? என்பதை கவனிக்க வேண்டும் . இவ்வாறு வர கூடிய பட்சத்தில் நீங்கள் கட்டாயம் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும் அவர்களுக்கு திருமணம் செய்யலாம்.
நட்சத்திர பொருத்தம் என்பது என்னை பொருத்தவரை ஒரு தேவையில்லாத பொருத்தமாகும். எனவே நட்சத்திர பொருத்தத்தை விட இதுபோன்ற கட்ட அடிப்படையிலான பொருத்தத்தை பார்த்து தம்பதிகள் இருவருடைய ஆயுள் ஸ்தானத்தை முடிவு செய்து திருமணம் செய்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் தராது.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment