கிரகங்கள் படுத்தும்பாடு -(1)
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
ஒரு மனித வாழ்வில் அவனது குண நலன்களுக்கும்,புத்திசாலிதனத்துக்கும் கிரகங்களின் பங்கு அலாதியானது.பல மனிதர்களை உற்றுநோக்கி பார்க்கும் போது ஒவ்வொறுவருக்கும் ஒரு விதமான குணங்கள் உண்டு. இவற்றிற்கு காரணம் அவனது /அவளது ஜாதக கட்டங்களில் அரசாட்சி புரியும் கிரகங்களே ஆகும்.
சிலர் பார்ப்பதற்கு முரடனாக ,யார் சொல்லுக்கும் அடங்காதவனாக இருக்கிறன் என்றால் அவனது ஜாதகத்தில் செவ்வாய்,சூரியன் பலம் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் சுப சாரம் பெற்றிருந்தால் நியாயவான்களாக இவர்களது கோபத்தில் நியாயம் இருக்கும்.பாவ சாரம் பெற்று ஆறாம் இட தொடர்பு பெறின் அக்கிரம காரர்களாக இருப்பர்.
சிலர் அதிக கோபகாரர்களாக இருக்கிறார்கள் எனில் அவர்களது வாக்கு ஸ்தானத்தில் பெரும்பாலும் பாவ கிரகங்களான செவ்வாய்,சனி இவர்கள் இருவரும் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஆகும்.
சிலரது வாக்கு சொன்னபடியே பலித்துவிடுகிறது எப்படி என பார்க்கும் போது வாக்கு ஸ்தானத்தோடு குரு,கேது இவர்கள் இருவரில் ஒருவர் அல்லது சேர்ந்து
இருந்தாலோ அல்லது பார்த்தாலோ பலிதம் ஏற்படுவதை பார்க்கிறோம்.
இருந்தாலோ அல்லது பார்த்தாலோ பலிதம் ஏற்படுவதை பார்க்கிறோம்.
சிலரது பேச்சிலும்,செயலிலும் வஞ்சகதன்மை ஒளிந்து கொண்டிருக்கும் ,இரு பொருள்பட பேசுவதில் வல்லவராக இருப்பார்.அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் ராகுவின் தொடர்பு இருக்கும்.
சில பெண்களோ /ஆண்களோ கட்டிய துணை அழகாக இருந்தாலும் கட்டிலுக்கு துணையை வேறு ஒருவரோடு பங்கு போடும் பெண்களையோ/ஆண்களையோ பார்த்திக்கிறேன்.
இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த குணம் வந்தது என ஆராய்ந்து பார்க்கும் போது காமக்கிரகங்களான செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பங்கும்,மனதிற்காரகன் எனப்படும் சந்திரனின் பங்கும் அலாதியானது .ட
மனதுக்காரன் சந்திரன் உடன் இந்த காம எண்ணத்தை தூண்டும் செவ்வாயோ அல்லது சுக்கிரனோ இணைந்து ஏழாமிட தொடர்பு கொள்வதால்தான் அந்த பெண்ணோ /ஆணோ பல பூவில் மது அருந்தும் வண்டினைப்போல காம சுகம் தேடி அலைகின்றனர்.
இதேபோல செவ்வாய் மற்றும் சுக்கிரன் உடன் அசயர்களான ராகு தொடர்பு கொண்டு அந்த திசை புத்தியோ நடந்தால் அந்த பெண்ணோ /ஆணோ தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் காதல் வயப்பட வைத்து விடுகிறது.மேலும் இக்கிரகங்களோடு சுபர்களான குரு,சந்திர தொடர்பு பெறின் தன்னிலும் உயர் வர்க்க ஆண்/பெண்ணிடம் காதல் வயப்படும் வாய்ப்பு ஏற்படும்.
இதே போல ஜாதக கட்டங்களில் இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமும்,செக்ஸ் வீரியத்தை தரக்கூடிய மூன்றாமிடமும், காம கற்பனை மற்றும் கற்பு நிலை காட்டும் நான்காமிடமும்,படுக்கை ஆசையை தூண்டும் மனைவி ஸ்தானமான ஏழாமிடமும் மற்றும் படுக்கை சுகத்தை தரக் கூடிய பணிரெண்டாமிடத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாமிடம்,ஏழாமிடத்துடன் தொடர்பு பெறுபவர்கள் அவர்களது காம வீரியத்தின் காரணமாக கட்டிய துணையைத்தாண்டியும் சுகம் தேட வைத்து விடுகிறது.
பணிரெண்டாமிடத்தை வலுவாக பெற்றவர்கள் சயன சுகத்தை அடைவார்கள்.இவர்களோடு நான்காம் அதிபதியும் சேரல் பலம் அதிகம்.
3-4-7-12 போன்ற இடங்களோடு செவ்வாய்,சுக்கிரன் போன்ற கிரக வலு பெற்றவர்கள் காம எண்ணம் மேலோங்கி இருக்கும்.இக்கிரகங்கள் சுப சாரம் பெறின் மனதால் கற்பனையோடு வாழ்ந்தாலும்,செயலால் தவறு செய்ய பயப்படுவார்கள் .ஆனால் அதே நேரத்தில் பாவ சாரம் பெறின் எதற்கும் அஞ்சாதவர்களாகவும்,சமூக வரண்களிலிருந்து மீறியும் நடப்பர்.
சிலர் மன சாட்சி அஞ்சாதவர்களாக பழி பாவங்களை செய்வார்கள் எனில் அவர்களது ஜாதகத்தில் பாவிகள் ஆறாமிடத்தில் வலுப்பெறுவதுடன் இவை பத்தாமிட தொடர்பு பெற்றிருக்கும்.ஆறாம் அதிபதி பத்தில் வலுப்பெற்றிருக்கும்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோடடை மாவட்டம்.
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc ,MA ,BEd,
ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
புதுக்கோடடை மாவட்டம்.
செல் ; 97 151 89 647
740 257 08 99
WhatsApp
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My blogspot
AstroRavichandransevvai.blogspot.com
AstroRavichandransevvai.blogspot.com
No comments:
Post a Comment