Monday, 6 April 2020

தனம்-பாக்கியம்-லாபம்

தனம்-பாக்கியம்-லாபம்


                     

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

      ஒரு சிலர் "கடிகாரத்தில் நகர்ந்து வரும் ஒவ்வொரு மணித்துளியும், வியாபாரத்தில் அவர்களது  நேரடி தொடர்பில்லாமலேயே அவரது வங்கி கணக்கில் அக்கவுண்ட் பேலன்ஸ் ஏறிக்கொண்டே இருப்பதை பார்க்கிறோம்.

  ஒரு சிலர் குப்பத்தில் பிறந்து அடிப்படை தேவைக்கே அல்லாடி ஒரு குறிப்பிட்ட திருப்புமுனை ஒரு குறிப்பிட்ட திசை புத்தியில் ஏற்பட்ட பின்பு  வாழ்வில் உயர்ந்து பல லட்சங்களை சம்பாதித்த பல நபர்களை அன்றாட வாழ்வில் நாம்‌ பார்க்கிறோம்.

 ஒரு சிலர் அன்றாட தேவைக்கு அல்லாடி வாழ்நாள் முழுவதும் ஏழையாக பிறந்து ஏழையாகவே மடிந்து போகிறார்கள்.

இதை சுருக்கமாக விளக்கினால்

    1)பணக்கார வீட்டில் பிறந்து பணக்காரராக வாழ்வது ,

  2) ஏழை வீட்டில் பிறந்து தனது முயற்சியால் பணக்காரனாவது,

  3) ஏழையாகப் பிறந்து ஏழையாக இறப்பது .

    இது போன்ற மாறுபட்ட சமூக அமைப்புக்கு அவர் ஜாதக அடிப்படையில் காரணம் என்னவாக இருக்கும் ? என ஆராய்ந்து பார்க்க  "அவரது ஜாதகத்தில் தன ஸ்தானமான இரண்டாம் இடம், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் ஆகிய மூன்று ஸ்தானங்களையும் ஆராய வேண்டும்.

   நவகிரகங்களில் தன காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    ஜாதக கட்டத்தில் தனஸ்தானம் என்றழைக்கப்படும் இரண்டாமிடம் அதிபதி தன ஸ்தானத்திற்கு 2,9 மற்றும் 11 ஆம் இடத்தில் இடம் பெற்றிருந்தாலோ 

  அல்லது

  தன ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதி உடன் இணைந்தோ அல்லது பரிவர்த்தனை பெற்றோ அல்லது சேர்ந்தோ 
லக்கனத்திலோ அல்லது லக்னத்திற்கு 2 ,9 ,11 இடம்பெற்றாலோ 

   அல்லது

 தன,பாக்கிய மற்றும் லாபாதிபதி லக்கனாதிபதிக்கு நட்பாக அமைந்து லக்கனத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கேந்திர , கோணங்களில் அமர்ந்து அதன் தசை -புத்தி நடைபெறும் காலங்களில்  பல லட்சங்களை அள்ளி குவிப்பார்.

      அல்லது

  தன காரகன் குருபகவான் ஒரு ஜாதக கட்டத்தில் உச்சம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நல்ல நிலையில் அமர்ந்து இருந்து தன-பாக்கிய-லாபாதிபதி உடன் தொடர்பு கொள்ள தன் யோகம் உண்டாகும்.

நன்றி

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  வாட்ஸ் அப்
    9715189647
    செல்
  9715189647
    7402570899
                            

  அன்புடன் 
ஜோதிடர் 
சோ.ப. ரவிச்சந்திரன் 
   M.Sc,M.A,BEd
(ஆசிரியர் ஜோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

My email
masterastroravi@gmail.com
.........................................

No comments: