Sunday, 5 April 2020

மனைவியால் நன்மை உண்டாகப்பெறும் அமைப்பு

மனைவியால் நன்மை உண்டாகப் பெரும் அமைப்பு?


                       

செவ்வாய்ப்பட்டிஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!

   ஒருவரது ஜாதகத்தில் இலக்கனம், இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம், ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் மற்றும் எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானம் ஆகிய ஸ்தானங்கள்‌ எவ்வித பாவக்கிரகங்களுடைய கலப்பின்றி சுத்தமாக இருப்பின் அதுவே மனைவியால் யோகம் தரக்கூடிய அமைப்பாகும்.

  மேலும் 1,2,7 மற்றும் 8 ஆம் இட அதிபதிகள் பாவர்கள் மற்றும் மறைவிட ஸ்தான அதிபதிகள் தொடர்பு இன்றி இயற்கை சுப கிரகங்கள் பார்வையினை பெற்று , கேந்திர,கோண அதிபதிகள் திசை நடப்பில் இருந்து கோச்சாரப்படி அஷ்டம மற்றும் ஏழரைச்சனியில் நடப்பு இல்லாத கால கட்டத்தில் திருமணம் நடக்கும் பொழுது தனக்கு துணையாக வரும் மனைவியால் புகழ் அடையும் யோகம் மற்றும் செல்வம் சேரும் யோகம் உண்டாகும்.

 ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு லாபஸ்தானம் ஒருவருக்கு ஐந்தாம் இடமாகும். ஐந்தாம் இடம் , ஐந்தாம் இடத்து அதிபதி மற்றும்  ஐந்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறியலாம் .
இந்த கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு ,கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றால் மனைவியால் நன்மை அடைய வாய்ப்பு உண்டு.

  ஏழாம் இடத்திற்கு லாபாதிபதி (ஐந்தாம் இட அதிபதி) ஏழாம் இடத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்தாலும் அதாவது லக்கனத்திற்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் அல்லது ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றாலும் மனைவியின் செல்வத்தை சாதகர் அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டு.

ஏழாம் இடத்திற்கு தன ஸ்தானமான இரண்டாம் இடம் மற்றும் லாப ஸ்தானமான 11 ஆம் அதிபதிகள் இருக்கும் வீட்டின் அதிபதியும் உச்சம், ஆட்சி பெற்று கேந்திர, திரிகோணம், இரண்டு அல்லது பதினோராம் இடத்தில் இருந்தால் மனைவியால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும் மனைவி உத்தியோகம் பார்ப்பவர்களாக இருப்பார்.

ஏழாம் இடத்திற்கு இரண்டாம் அதிபதி சாதகர் இலக்கணத்திற்கு எட்டாம் அதிபதி குறிக்கும், லக்கனத்திற்கு லாபாதிபதி ஜாதகரின் ஐந்தாம் வீட்டை குறிக்கும். ஆதலால் ஒருவரது ஜாதகத்தில் 5 மற்றும் 8 ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெற்று பலமாக இருப்பின் அவரது மனைவியால் செல்வம் பெறுவர் எனலாம்.

    ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி, இரண்டாம் வீட்டு அதிபதி மற்றும் லாபாதிபதி ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று லாப ,தன அல்லது களத்திர ஸ்தானத்தில் அமரும் பொழுது மனைவியால் செல்வம் சேரும் யோகம் உண்டாகும்.

  ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று கேந்திர கோணங்களில் அமர்ந்து லக்னாதிபதிக்கு நட்பாகவும் , இலக்கணத்திற்கும், லக்னாதிபதிக்கு கேந்திர, கோணங்களிலும் அமரும் பட்சத்தில் அதன் திசை நடப்பில் உள்ள காலங்களில் மனைவி மூலம் சாதகர் சொத்துக்களை வாங்கிச் சேர்க்கும் யோகம் உண்டாகும்.

ஒருவரது ஜாதகத்திலுள்ள ஏழாம் அதிபதியும் அவரது மனைவியின்  ஜாதகத்தில்  உள்ள ஏழாமிட அதிபதியும் ஒன்றுக்கொன்று நட்பாக அமைந்து ஜாதகரின் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களிலும் மற்றும் தன, லாப ஸ்தானங்களிலும் பலம் பெற்று எந்த விதத்திலும் பலம் இழக்காமல் இருப்பின் மனைவி மூலம் பேரும் புகழும் அடையக்கூடிய யோகம் உண்டாகும்.

 ஒரு ஜாதகத்தில் ஏழாம் இடத்தினில் சூரியன் மற்றும் புதன் தொடர்பு பெற்று அல்லது  ஏழாம் இட அதிபதி ,சூரியன் மற்றும் புதன் உடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தானத்தில் அமர மனைவி அரசாங்க வேலை பார்க்க கூடியவளாக அமைவாள்.

  ஒரு ஜாதகத்தில் களத்திர ஸ்தான அதிபதி, களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய  இருவரும் பலம் பெற்று ஜாதகரின் இலக்கனத்திற்கு தன,லாப ஸ்தானமான 2-மற்றும்  11-ஆம் இடங்களில் பலம் பெற்று நின்றாலோஅல்லது கேந்திர ,கோணங்களில் பலம் பெற்று அதன் தசை நடக்கும் காலங்களில் சாதகருக்கு மனைவி மூலம் சொத்து சேரும் யோகம் அமையும்.

  ஒரு ஜாதகத்தில் ஏழாம் இட அதிபதி அம்சத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலம் பெற்று நல்ல நிலையில் அமர மனைவியால்  சொத்து சேரும் யோகம் அமையும்.

 ஒருவர் ஜாதகத்தில் 1,2,7 மற்றும் 8 ஆம் இடம் பாலர் கலப்பின்றி பலமடைந்து நின்று களத்திரகாரகன் சுக்கிரனும் எவ்விதத்திலும் பாவர்கள் தொடர்பின்றி இராசியிலும், அம்சத்திலும் பலம் பெற்று நிற்க மனைவி மூலம் சொத்து சேரும் யோகம் உண்டாகும்.

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்
  9715189647
    செல்
  9715189647
     7402570899

                      


அன்புடன் ஜோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
   M.Sc ,M.A,BEd
(ஆசிரியர் மற்றும் சோதிட ஆராய்ச்சியாளர்)
 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: