Friday, 7 July 2023

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தசைகள்

 அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தசைகள். 

     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு திரிகோண அதிபதிகள் தசைகள் யோகத்தை அள்ளித் தரும் தசையாக அமைகிறது.திரி கோண அதிபதிகள் என்பது ஒன்றாம் இட அதிபதி, ஐந்தாம் இட அதிபதி மற்றும் ஒன்பதாம் இட அதிபதி ஆகும்.இந்த மூன்று இடங்களையும் திரிகோணங்கள் என்று அழைக்கப்படுகிறது.


 கோண அதிபதிகள் லக்கனத்திற்கு நட்பு கிரகமாக அமைகிறது.

உதாரணமாக மேஷ லக்னம் என வைத்துக் கொண்டால் லக்கன அதிபதி செவ்வாய் ஆகும்.லக்கன அதிபதியான செவ்வாய் பகவானுக்கு ஐந்தாம் இட அதிபதியான சூரியன் நட்பு கிரகமாக அமைகிறது.ஒன்பதாம் இட அதிபதியான குரு நட்பு கிரகமாக அமைகிறது .


      இவை மட்டுமல்லாது லக்கன நட்சத்திர சாரம் தரும் சார நாதனே 1,5,9 ஆகிய திரி கோணங்களுக்கும்  வரும்.

மேஷ லக்கன நட்சத்திர சாரம் 

அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை ஆகும்.இதன் நட்சத்திர நாதன் கேது , சுக்கிரன் மற்றும் சூரியன் பகவான் ஆகும்.

    ஐந்தாம் இடமான சிம்மம் ராசிக்கு நட்சத்திர சாரம் மகம், பூரம் மற்றும் உத்திரம் ஆகும்.சார நாதன் முறையே கேது , சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும்.

 

    ஒன்பதாம் இடமான தனுசு ராசிக்கு

நட்சத்திரம் சாரம் மூலம், பூராடம் மற்றும் உத்திரம் ஆகும்.இதன் சார நாதன் கேது, சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகும். 


     மேஷ லக்னத்திற்கு திரி கோண ஸ்தானமான 1,5,9 ஆகிய மூன்று இடத்திற்கும் நட்சத்திர சார நாதன் கேது, சுக்கிரன் மற்றும் சூரியன் பகவானே ஆகும்.


    இதேபோல எந்த லக்கனத்தை எடுத்து கொண்டாலும் திரிகோண அதிபதிகள் மேற்குறிப்பிட்ட வகையிலே அமைகிறது.இதனால் தான் திரி கோண அதிபதிகள் தசை யோகம் தரும் தசையாக அமைகிறது.


 திரி கோண அதிபதிகள் தசையிலே ஜாதகருக்கு யோகத்தை அள்ளித் தரும் தசையாக அமைகிறது.இந்த தசை காலங்களில் புதிய முயற்சிகள்,புதிய தன வரவு , சொத்து சேர்க்கை, மகிழ்ச்சி தரும் செய்திகள், முன்னேற்றம் தரும் சம்பவங்கள் , குடும்ப உறவுகளில் சந்தோஷம் மற்றும் உறவுகள் மூலம் உதவிகள் போன்ற பல நல்ல விஷயங்களை ஜாதகருக்கு கொடுக்கிறது.

  


    வேறு வகையிலும் ஜாதகருக்கு யோகத்தை தரும் தசைகளை கணக்கிடலாம்.


   ஜாதகத்தில் அருள் அணி மற்றும் பொருள் அணி  ஆகிய இரண்டு அணிகள் உள்ளன. அருள் அணிக்கு குருபகவான் தலைவனாகவும் மற்றும் பொருள் அணிக்கு சுக்கிர பகவான் தலைவராகவும் கருதப்படுகிறது.


  குரு அணியைச் சேர்ந்த லக்கனங்களான தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம் ஆகும். இதன் அதிபதிகள் குரு ,செவ்வாய், சந்திரன் மற்றும் சூரியன் ஆகும்.


 சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களான ரிஷபம், துலாம் ,மிதுனம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ஆகும். இதன் அதிபதிகள்  சுக்கிரன் , புதன் மற்றும் சனி பகவான் ஆகும்.


 குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு யோகம் தரும் தசைகளாக சூரியன், சந்திரன், குரு மற்றும் செவ்வாய் பகவான் தசை கருதப்படுகிறது.


சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனி பகவான் யோகம் தரும் தசைகளாக கருதப்படுகிறது.


 நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் இருக்கும் இடத்தை சொந்த வீடாக கருதப்படுகிறது. 

எனவே குரு அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு நிழல் கிரகங்கள் யோகத்தை தர வேண்டுமாயின் குரு அணியைச் சேர்ந்த தனுசு, மீனம் ,மேஷம் ,விருச்சகம் கடகம் மற்றும் சிம்மம்  லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் யோகத்தை அள்ளித் தருகிறது.


   இதே போல சுக்கிரன் அணியைச் சேர்ந்த லக்னங்களுக்கு நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பகவான் ரிஷபம், துலாம் ,மிதுனம் ,கன்னி மகர மற்றும் கும்பம்  போன்ற லக்னங்களில் இருந்தால் அதன் தசை காலங்களில் ஜாதகருக்கு யோகத்தை அள்ளித்தரும் தசையாக கருதப்படுகிறது.


 குரு அணியை சேர்ந்த லக்னங்களுக்கு சுக்கிர அணியை சேர்ந்த தசைகளும், அதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த லக்னங்களுக்கு  குரு அணியை சேர்ந்த தசைகளும் யோகத்தை தர வேண்டுமாயின் அந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் உப செய்ய ஸ்தானமான 

3 ,6 ,10 மற்றும் 11ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருக்க வேண்டும் அல்லது இயற்கை சுபகிரங்கான குரு வளர் பிறை சந்திரன் போன்றவற்றின் பார்வையை பெறக் கூடியதாக இருப்பின் விதிவிலக்காக யோகத்தை  தருகிறது.


பொதுவாக சுருக்கமாக தர வேண்டுமானால் ஒருவருக்கு ஒரு தசை யோகத்தை அள்ளித் தர வேண்டுமாயின் அவை சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பதே மேலான முடிவான செய்தியாகும்.


நன்றி.


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

   097151 89647 

மற்றொரு செல்: 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.,)



அன்புடன்

   சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 


        M SC,M.A,BEd

    (ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர்),

 ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

No comments: