Thursday, 6 July 2023

முயற்சி செய்தால் முன்னேறி விடலாமா?

 முயற்சி செய்தால் முன்னேறி விடலாமா ?

     


செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!


 "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"


" விடா முயற்சி வெற்றிக்கு அறிகுறி "


"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்".


   நமது கிராமத்து பழமொழி ஒன்று உள்ளது.

"பல மரம் கண்ட தச்சன்  ஒரு மரமும் வெட்ட மாட்டான் " என்பார்கள்.

அதே போல ஏதாவது ஒன்றை  முயற்சி செய்து பார்த்து விட்டு பிறகு 

 "இச்சி இச்சி இந்த பழம் புளிக்கும்"என்ற நரியின் கதை போல  விட்டு விட்டு வேறு ஒன்றை முயற்சி செய்து பார்ப்பது.இவ்வாறு காலம் கழித்து கொண்டு செல்வது.


  எங்க அப்பா  அடிக்கடி சொல்லுவார் 

"அகல உழுவதை விட ஆள உழுவதே மேல் "என்று அதன் உள்ளர்த்தம் வயது கடந்து புரிகிறது.


 ஒருவர் விடாப்பிடியாக ஒரு துறையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால் அந்த துறையில் ஒரு நாள் நிச்சயமாக கொடி கட்டிப் பறக்க முடியும்.


  சில நேரங்களில் அறிவு மற்றும் திறமை இருந்தும் சரியான விடாப்பிடியான முயற்சி செய்யாமல் தோற்று விடுவதும் உண்டு.


இதற்கு உதாரணம் முயலுக்கும்,ஆமைக்கும் இடையே நடந்த ஓட்ட பந்தயம் ஆகும்.கொஞ்ச தூரம் ஓடிய முயல் ஆமை ரொம்ப பின்னோக்கி வருவதை கண்டு விட்டு அது வருவதற்குள் குட்டி தூக்கம் போட்டு விட்டு பிறகு ஓடலாம் என எண்ணி தூங்கிய முயல் நன்றாக தூங்கி விட்டது.ஆனால் மெதுவாக நகர்ந்தாலும் தம்மால் இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல்  தனது முயற்சியை எவ்வித சோர்வு கொள்ளாமல் தொடர்ந்து முயன்று நகர்ந்து கொண்டே சென்றது.இப்போது முயலின் நிலையை பார்ப்போம். சிறிது நேரம் கழித்து  முயலுக்கு விழிப்பு வந்து விட்டது.

விழிப்பு வந்த முயல் ஆமை எங்கே வருகிறது என்று பார்த்தால் வெற்றி எல்லையை தொடக்கூடிய நிலையில் இருந்தது.அதன் பிறகு முயல் என்னதான் ஓட முயன்றாலும் ஆமை அந்த வெற்றி எல்லையை தொட்டு விட்டது.

 முயல் மற்றும் ஆமை கதையில் முயலாமையால் முயல் தோற்று விட்டது 


மேற்கண்ட முயல் மற்றும் ஆமை கதையில் குறிப்பிட்டது போல அறிவு மற்றும் திறமை இருந்தும் சோம்பேறித்தனமாக விடா முயற்சி செய்யாமல் வெற்றி வாய்ப்பை இழந்து தவிக்கும் மானிடர்கள் பல உண்டு.


 ஜோதிட அடிப்படையில் ஒருவர் எவ்வித முயற்சியினை மேற்கொள்கிறார்கள் என்பதனை அவர்களது ஜாதகத்தில் முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தை பொறுத்து அமைகிறது.லக்கனாதிபதியின் வலிமையினை பொறுத்தும் அமைகிறது.


 ஒருவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எவ்விதமாக இருக்கும் என்பதை மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதி  ஆகியவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டும்.மேலும் லக்கனம் மற்றும் அதன் அதிபதி ஜாதகரின் தன்மை மற்றும் குணத்தை முடிவு செய்கிறது.


 லக்கனாதிபதியின் தன்மையை பொறுத்தும் ஒருவரின் முயற்சி நிலை அமைகிறது.லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியையோ குரு பார்க்க பிறந்தவன் நேரிய வழியில் தனது முயற்சியை மேற்கொண்டு நற்பகழை அடைவார்.


லக்கனத்தையோ அல்லது லக்கனாதிபதியை சனி பார்க்க பிறந்தவன் சோம்பேறிதனம் உடையவனாக எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை படக்கூடியவராகவும் இருப்பார்.


  மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்கள் இடம் பெறாமல் மூன்றாம் இடத்தையும் பாவ கிரகங்கள் பார்க்காமல் மூன்றாம் இட அதிபதி கேந்திர, கோணங்களில் உச்சம்,மூலதிரிகோணம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகளில் நின்று சுபத்துவமான நிலையில் இருந்தால் அவர் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.


மூன்றாம் இடத்தை இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை செய்து மூன்றாம் இட அதிபதியும் சுப கிரகமாக இருந்து வலுப்பெற்று அதன் தசை நடைபெறும் காலங்களில் அவர் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி கொடுக்கும்.


ஒருவர் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் ராசிக்கு மூன்றாம் இடம் மற்றும் அதன் அதிபதி வலுப்பெற்று சுபத்துவ நிலையில் இருந்து நல்ல யோக தசை நடப்பில் உள்ள காலங்களில் ஜாதகர் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி கொடுக்கும்.


நன்றி !


வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே

  097151 89647 

மற்றொரு செல்; 7402570899


Email masterastroravi@gmail.com


(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற‌ சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

  

அன்புடன்.

                   



சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன் 


  M.SC,M.A,BEd

. ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கறம்பக்குடி>

No comments: