கோபம் வர காரணம் என்ன?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"பிறர் செய்யும் தவறுகளுக்கு நாமே கொடுத்து கொள்ளக்கூடிய மிகப் பெரிய தண்டனை கோபம் ஆகும் "
"கோபம் பாவம் சண்டாளன்" என்பார்கள்.
"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் " --குறள்
"ஒருவன் தன்னை காத்துக் கொள்ள வேண்டுமாயின் சினம் எழாமல் காத்து கொள்ள வேண்டும்.காவாதிருந்தால் அந்த சினம் தன்னையே கொன்று விடும்".
ஒருவருக்கு கோபம் எதனால் வருகிறது என்பதை ஜோதிட அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்கும் போது கோபத்தை தரக்கூடிய முதன்மை காரக கிரகம் செவ்வாய் ஆகும்.அதனை அடுத்து துணை நிலை காரக கிரகம் சனி பகவான் ஆகும்.
ஒருவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி மற்றும் செவ்வாய் இணைந்து நிற்பது அல்லது இரண்டாம் இடத்தை சனி மற்றும் செவ்வாய் இணைத்தோ அல்லது தனித்தனியாக பார்வை செய்வது .
அல்லது இரண்டாம் இடத்தில் சனி பார்வை பெற்ற செவ்வாய் இருப்பது அல்லது பார்வையை பெறுவது
கோச்சார அடிப்படையில் ஏழரை சனியில் ஜென்ம சனியில் ஜென்ம நட்சத்திரத்தில் சனி போகும் காலங்களில் ஒரு விதமான மனம் அழுத்தம் காரணமாக கோபம் அதிகமாக ஜாதகருக்கு வருகிறது.
கோபம் வருவதற்கு ஒரு விதமான மன கவலை , மன சோர்வு முதலியவை காரணமாக அமைகிறது . கோபம் என்பது மனநிலையுடன் தொடர்பு உடையது.மனநிலையானது கிரகங்களில் சந்திரன் 🌙 உடன் தொடர்பு உடையது.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலவீனம் அல்லது பாவத்துவம் அடைவதும் மனமானது கெட்டு விடுவதற்கு காரணமாக அமைகிறது.மனமானது பலவீனம் அடையும் போது ஒருவருக்கு கோபம் பீற்றி கொண்டு வருகிறது.
சந்திரன் உடன் சனி அல்லது செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை அல்லது சந்திரன் உடன் ராகு சேர்க்கை போன்ற நிலைகளில் ஒருவருக்கு மனமானது கெட்டு விடுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது பகவான் நின்று சனி அல்லது செவ்வாய் பார்வை செய்யும் அமைப்பை பெற்றவர்களுக்கு திடீரென எதிர்பாராத விதமாக கோபம் வெளிப்பட்டு விடுகிறது.
கோச்சார அடிப்படையில் ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஒருவிதமான மன அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக அந்த காலத்தில் கோபமான மனநிலை உருவாகிறது.
நன்றி
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்: 7402570899
Email masterastroravi@gmail.com
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.SC,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment