வெளி நாடு செல்வதற்கான அமைப்பு .
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு "என்பார்கள்.இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் எல்லோருடைய கைகளிலும் தவழ்ந்த நிலையில் உலக நாடுகள் எல்லாம் ஒரு பெட்டிக்குள் வந்தது போல் எளிமையாக வந்து விட்டது .
இன்றைய கால கட்டத்தில் வெளிநாடு செல்வது என்பது டீ கடைக்கு சென்று டீ குடிப்பது போல் இணைய வசதியினால் எளிமையாக ஆகி விட்டது. உலகின் பல்வேறு தேசங்களுக்கு நம் பிள்ளைகள் சென்று இருந்தாலும் நினைத்த நேரத்தில் முகம் பார்த்து பேசவும் மற்றும் தேவையான பணத்தை கணினி வழியில் வங்கி கணக்கில் நிரப்பவும் எளிய வசதிகள் வந்து விட்டதாலும் நாம் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் அளவுக்கு அறிவியல் வசதிகள் வந்து விட்டது.
ஒருவர் உரிய கல்வி பயின்று நல்ல தகுதியை வளர்த்துக் கொண்டால் "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"' என்ற வகையில் எந்த தேசம் சென்றாலும் உன்னை உரிய சன்மானம் கொடுத்து அரவணைத்து கொள்ளும். தமிழகத்தில் பிறந்த மதிப்பிற்குரிய சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பல கோடிக்கணக்கான சம்பளங்களை ஈட்டுவதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதேநேரத்தில் உரிய தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் தனது உடல் வலிமையால் பொருள் ஈட்டுவோரின் எண்ணிக்கை பலர் உண்டு என்றாலும் எல்லோருக்கும் நல்லபடியாக அமைந்து விடுவதில்லை.சிலர் சரியான இடத்தில் சரியான வேலையில் அமராமல் கொத்தடிமை போல நடத்தப்படுவதும் உண்டு.
சிலருக்கு நல்ல முறையில் அமைந்து விடுவதும் பலருக்கு நல்ல முறையில் அமையாததற்கும் காரணம் ஜோதிட அடிப்படையிலான தீர்வுகளும் பல உண்டு.
உங்கள் ஜாதகத்தில் வெளிநாடு சென்று பொருள் எட்டுவதற்கு உரிய அமைப்பு உள்ளதா ? என்றும், எந்த கால கட்டத்தில் வெளிநாடு செல்லலாம் ? என்றும்,எவ்வழியில் வெளி நாடு செல்லாம் ? என்பது போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடை உண்டு.
சிலருக்கு அடிக்கடி சென்று வரும் அமைப்பு இருக்கும்.ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை சென்று வந்து கொண்டிருந்து விட்டு பிறகு நிரந்தரமாக அங்கு தங்கும் அமைப்பு இருக்கும்.சிலருக்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்று தங்கும் உரிமை இருக்கும்.
முதலில் ஒருவர் வெளிநாடு செல்வதற்கான அடிப்படையான அமைப்பு என்ன என்பதை பார்ப்போம்.ஒருவர் ஜாதகத்தில் வெளிநாடு செல்வதற்கு ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டிய ஸ்தானம் எதுவெனில் அவரது ஜாதகத்தில் எட்டாம் இடத்தையும் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் பார்க்கப்பட வேண்டும்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தினையும் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், தேய்பிறை சந்திரன், ராகு மற்றும் கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும்.இவ்விரு இடங்களை இயற்கை சுப கிரகங்களான பங்கம் அடையாத குரு , வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பார்வை அல்லது சேர்க்கை போன்ற வகையில் தொடர்பினை பெற்று சுபத்துவ நிலையினை அடைந்து இருக்க வேண்டும்.
சில நேரங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் குரு பார்வை செய்து சுபத்துவம் அடைய செய்து இருக்க வேண்டும்.
மேற்கண்ட இந்த சுபத்துவ வலிமையின் சதவீதத்திற்கு ஏற்ப ஒரு மனிதரின் வெளிநாட்டு வாழ்க்கையின் வேலை மற்றும் சம்பாதிக்கும் அளவு அமைகிறது.
உதாரணமாக குரு பகவான் நான்கு ,எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடத்தில் குரு பகவான் இருந்தால் அவை எட்டாம் இடத்தையும் மற்றும் பன்னிரண்டாம் இடத்தையும் சுபத்துவ நிலைக்கு உட்படுத்தும்.
இவ்வாறு எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடம் சுபத்துவ நிலையினை அடைந்து இருக்கும் அனைவரும் வெளிநாடு சென்று பொருள் ஈட்ட முடியுமா? என கேள்வி கேட்டால் முடியாது என்பதுதான் எனது பதிலாக இருக்க முடியும்.
என்ன சார் இப்படி சொல்றீங்களே பிறகு எப்ப வெளிநாடு போவார் என கேட்டால் அந்த அமைப்பு இருந்தால் மட்டுமே போதாது.அதற்கு உரிய தசை அமைப்பு வர வேண்டும்.அவ்வாறு வரக்கூடிய காலத்தில் தான் ஒருவர் கடல் கடந்து சென்று பெரும் தனம் ஈட்ட முடியும்.
ஒருவர் வெளிநாடு செல்ல எட்டு பன்னிரண்டாம் இடங்களில் ராகு பகவான் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வை செய்த நிலையில் ராகு தசை வரக்கூடிய காலங்களில்
அல்லது சர ராசியில் அல்லது நீர் ராசியில் அல்லது காற்று ராசியில் நிற்கும் கிரகங்கள் தசையில் ஒருவர் வெளிநாடு செல்வதற்கான அமைப்பு உருவாகிறது.
நன்றி.
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல்; 7402570899
Email masterastroravi@gmail.com
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
ஆசிரியர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர், ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம், கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
.jpeg)


No comments:
Post a Comment