Tuesday, 8 August 2017

சாதகத்தில் ஒரு கிரகம் பலமா ? பலவீனமா ? எவ்வாறு அறிந்து கொள்வது ?

சாதகத்தில் ஒரு கிரகம் பலமா ? பலவீனமா ?
 என எவ்வாறு அறிந்து கொள்வது ?

                                                                       

கிரகங்கள் படுத்தும் பாடு -(5)

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்..

                          ஒரு மனித வாழ்வின் உயர்விற்கும்,தாழ்விற்கும் பெரும்பங்கு வகிப்பது அவனது ஜெனன காலத்தில் 360 பாகையை சுற்றி அமைந்திருக்கும் கிரக நிலைகளே .கிரகங்கள் அவனது ஜெனன நேரத்தில் எத்தனையாவது பாகையில் நிற்கிறது  என்பதை கணித்து பணிரெண்டு கட்டங்களில் அடைக்கப்படுகிறது.

                       பிறந்த நேரத்தில் பால் வீதியின் தொடு வானத்தில் என்ன நட்சத்திரம் மிளிர்கிறதோ அதனை அவனது ஜென்ம நட்சத்திரமாக கொண்டு இதிலிருந்து ஜென்ம ராசி குறிக்கப்படுகிறது.பூமி சுற்றுவதை அடிப்படையாக கொண்டு லக்கனம் கணக்கிடப்படுகிறது.ஜென்ம நட்சத்திரம் எவ்வளவு பாதம் கடந்துள்ளது என்பதை கணக்கிட்டு அதிலிருந்து தசை மற்றும் புத்தி கணக்கிடப்பட்டு இக்கணித அடிப்படையாக கொண்டு ஒரு மனித வாழ்வின் சாதகம் எழுதப்படுகிறது.

                         இந்த கிரகங்கள் பணிரெண்டு ராசிக் கட்டங்களில் அதன் பாகையைப் பொறுத்தி அமர்த்தி  அமர்ந்து இருக்கும் இடத்தைப் பொறுத்து அக்கிரகம்  பலமா ? பலவீனமா ? என கணிக்கப்படுகிறது.

                  பலமெனில் இக்கிரகங்கள் பின்வரும் வரிசையில் பலத்திற்கான சதவீதம் அளிக்கப்படுகிறது.அதாவது முதலில் உச்சத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஒரு கிரகம் ஒரு ராசியில் இருக்கும்போது உச்சமாக இருந்தால் அவை ஒரு குறிப்பிட்ட பாகை வரை மட்டுமே உச்ச பலனை தருகிறது.பிறகு அவை சாதரண கிரகங்கள் போலவே பலனைத்தருகிறது.

                    உதாரணமாக கன்னியில் புதன் இருப்பதால் நாம் உச்சம் என்ற நிலையில் பலன்களை புகழ்ந்து பலனளிக்கும் போது அது அவ்வாறு கிரக பலனை தரமால் போய்விடுவதற்கான காரணம் மற்றும் சோதிடரையே ஏமாற்றிவிடுவதற்கு புதனின் பாகை நிலையை கவனிக்காததே காரணம் ஆகும்.உத்தேசமாக முதல் 14 பாகைக்குள்தான் உச்சத்திற்குரிய பலனை தருகிறது என வைத்துக்கொள்ளும்போது அந்த பாகையை தாண்டி செல்லும் புதனின் வலு சாதரண கிரக நிலையையே அடைந்துவிடுகிறது எனவே கன்னியில் புதன் இருந்தால் புதன் உச்சம் என பாகை நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சோதிடர் கூறும் பலனும் தவறாவதற்கு வாய்ப்பு உண்டு.எனவே "கிரகங்களை மனிதனை படுத்தும் பாடு "பற்றி பலனுரைக்க நல்ல கணித புலமையும் சோதிடருக்கு தேவைப்படுகிறது.

                              உச்சத்தை அடுத்து கிரக வலுவிற்கு இரண்டாவது நிலையை மூல திரிகோணமும் ,அதனையடுத்து ஆட்சி தொடர்ந்து நட்பு நிலை என கிரக வலிமை அமைகிறது.

                           கிரக வலிமையான பலனைத்தர அவை எந்த நட்சத்திர சாரம் வாங்கியுள்ளது என பார்க்கவேண்டும்.இவ்வாறு நட்சத்திர சாரம் பார்க்கும் இரண்டு வழிமுறையை பின்பற்ற வேண்டியிருக்கிறது.

                         முதல் வழிமுறை ஓரு கிரகத்தை தாங்கியுள்ள நட்சத்திரம் இயற்கை சுபரா ? அசுபரா ? என பார்க்கப்பட வேண்டும்.இயற்கை சுபர் எனில் அவை தாங்கியுள்ள கிரகத்தின் ஸ்தான வலுவையும் ,காரகத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.மாறாக பாவர் எனில் பலனை குறைக்க செய்யும் அல்லது தவறான வழிக்கு இட்டுச்செல்லும்.

                             உதாரணமாக ஜீவனத்தின் அதிபதி சுப சாரம் வாங்கினால் நேரிய வழியில் பொருள் ஈட்டவும்,பாவர் சாரம் எனில் ஜீவனத்தை குறைக்கும் அல்லது மறைமுக வழியில் பொருள் ஈட்ட வைக்கும்.

                         சாரம் பார்ப்பதில் இரண்டாவது வழிமுறை ஒரு கிரகம் கொண்டுள்ள நட்சத்திரத்தின் அதிபதி என்னவென பார்த்து அந்த அதிபதி அவனது ராசிக்கட்டத்தில் என்ன ஸ்தானம் வாங்கியுளளது அவை சுப ஸ்தனமா ? அசுப ஸ்தானமா ? என பார்த்து அதற்கு ஏற்றார்போல் பலனுரைப்பது.

                              உதாரணமாக தனாதிபதியான கிரகம் அவனது ஜாதகத்தில் பாக்கியாதிபதியின் நட்சத்திரம் பெற்றிருந்தால் பாக்கிய யோகம் பெற்று வெகு தனவான் ஆவான்.

                           நட்சத்திர சாரத்தை அடுத்து கிரக பார்வைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதிலும் பார்வை தரும் கிரகம்
சுபரா ? அசுபரா ? என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பார்வையில் குரு பார்வையில் ஜந்தாம் பார்வை அரைப்பலனும்,ஒன்பதாம் பார்வை முக்கால் பலனும் தரும்.

                           இதேபோல் சனியின் ஏழாம் பார்வை முழுப்பலனும்,மூன்றாம் பார்வை அரைப்பலனும்,பத்தாம் பார்வை கால் பலனும் தரும்.
செவ்வாயில் நான்காம் பார்வை அரைப்பலனும்,எட்டாம்  பார்வை முக்கால் பலனும் தரும்.

                       மூன்று கிரகங்களிலும் ஏழாம் பார்வைக்கு முழு பலம் உண்டு
அடுத்து அவை என்ன ஸ்தானம் பெற்றுள்ளது எனப்பார்க்க வேண்டும்.அவை கேந்திர ஸ்தானமா ,திரிகோணமா,பணபர ஸ்தானமா மற்றும் மறைவு ஸ்தானமா ?என பார்க்கவேண்டும்.மேற்கண்ட ஸ்தானங்களில் கிரகங்கள் அமையும் கிரக வலிமை பெறுகிறது.இவற்றுள் சுபர்கள் கேந்திரம் பெறும்போது கேந்திராதிபதி தோஷத்தை தந்து பலனை குறைத்துவிடுவதால் அவை திரிகோண மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருக்கும் போது அதிக பலனை தருகிறது(குறிப்பாக உபய ராசி காரர்களுக்கு).இதேபால் பாவிகள் கேந்திரமேற நற்பலனை தருகிறது.

                            இதனைத்தொடர்ந்து திக் பலம் பார்கக வேண்டும்.குரு  பகவானும்,புதன் பகவானும் லக்கனத்தில் நிற்கும்போது முழுபலம் அக்கிரகத்திற்கு கிடைத்துவிடுகிறது.சந்திர பகவானும்,சுக்கிர பகவினும் நான்கில் நின்றாலும்,சனி பகவான் ஏழில் நின்றாலும்,சூரிய பகவானும்,செவ்வாய் பகவானும் பத்தில் நின்றாலும் அக்கிரகங்களுக்கு முழுபலம் கிடைத்துவிடுகிறது. இக்கிரகங்கள் திக் பல  ஸ்தானத்திற்கு ஏழாமிடத்தில் இருக்கும்போது பலன் குறைவு ஏற்படுகிறது.

                           மேலும் ஒரு கிரகம் அந்த ஸ்தானத்திற்கு நட்பா,பகையையா  பாதகாதிபதியா,மாரகாதிபதியா என கவனிப்பதோடு ஒரு கிரகம் அந்த ராசிக்கும், நடக்கும் திசைக்கும் யோகரா,மாரகரா,பாபரா மற்றும் சுபரா ? என கவனிக்கப்பட வேண்டும்.

                         மேலும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் உள்ள கிரகம் வர்க்கோத்தமம் பெற்று பலன் அதிகம்.இதேபோல சுப கிரகங்களும்,சுப ஸ்தானங்களும் தங்களது வீடு பரிமாறி நின்றால் பரிவர்தனை யோகம் பெற்று பலம் அதிகம்.

                         ஒரு சில கிரகம் நீசம் பெற்றாலும் வீடு கொடுத்த கிரகமோ அல்லது அந்த வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றிருந்தாலும் இல்லை வீடு கொடுத்த கிரகம் சந்திர  கேந்திரம் பெற்றால் நீசம் பங்கம் ஏற்பட்டு வலுப்பெற்றுவிடும்.நீசம் பெற்ற கிரகம் ராசியிலும் ,அம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்து வர்க்கோத்தமம் பெற்றிரிந்தாலும்,நீசம் பெற்ற கிரகம் நீச பரிவர்த்தனை பெற்றாலும் அக்கிரகமானது நீச-பங்கம் அடைகிறது.

                           மேற்கண்ட பல அமைப்புகளை பெற்றிருந்தால்தான் ஒரு கிரகம் வலுவானது என முடிவு செய்ய முடியும்.இதே போல அக்கிரகம் பலமற்றது என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட அம்சங்களை பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மனித சாதக கட்டத்தில் ஒரு கிரகம் நீசம்,பகை ,மறைவு ஸ்தானம் மற்றும் அஸ்தமனம் பெற்றிருந்தாலோ ,பாவர் சாரம் மற்றும் சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது பாவர் பார்வை பெற்று ஆறு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிட  சம்பந்தம் பெற்றாலோ அக்கிரகம் பலமிழந்து விடும்.அக்கிரகங்களை நடத்தும் திசைகள் நன்மையை செய்யாது என்பதை உணரவேண்டும்.

                             மேற்கண்ட பல விதிகளின் அடிப்படையில் ஒரு கிரகம் பலமா ?பலவீனமா ? என ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல அக்கிரகங்கள் நடத்தும் திசைகள் நன்மையை செய்யுமா?தீமையை செய்யுமா ? எனவும்.மேலும் அக்கிரகத்திற்குரிய காரகங்களை தருமா ? என ஆய்வு செய்யப்பட்டு "கிரகங்கள் படுத்தும் பாடு " பற்றி பலனுரைக்க வேண்டும்.

                                                        


                                                                 அன்புடன்
                                                   சோதிடர் ரவிச்சந்திரன்
                                                                      M.SC,MA,BEd
                                                                 Teacher & Astrologer
                                                            Omsakthi jothida Nillayam
                                                             Pudukkottai -District
                                                                             

                                                            Cell: 97 151 89 647
                                                                       Cell; 740 257 08 99


                                                                  My whatsup no
                                                                          97 151 89 647


(Do you want to know your horoscope prediction,conduct my mophile no.Charge is applicable)
சாதகபலனை போன் வழியாக பெற எனது அலைபேசியை தொடர்புகொள்ளவும்.பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப்பிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டண விபரம் பெறலாம்.


No comments: