Sunday, 27 August 2017

சாதக கட்டங்களில் "மறைவு ஸ்தானங்கள் " தரும் யோக பலன்கள்.

சாதக கட்டங்களில் 

      "  மறைவு ஸ்தானங்கள "       தரும் யோக         பலன்கள்.


                      


கிரகங்கள்  படுத்தும் பாடு-( 163 )

செவ்வாய்பட்டி
- ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் துணை!

                    பணிரெண்டு ராசி கட்டங்களில் மூன்று,ஆறு,எட்டு மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய நான்கு இடங்களை மறைவிடஸ்தானங்களாக கருதப்படுகிறது.

                     இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் இடம்பெறும் வீடும்,மறைவிட ஸ்தான அதிபதிகள் இணையும் அல்லது பார்வைபெறும் கிரகங்களும் பாதிக்கப்படும் இந்த மறைவிட ஸ்தான அதிபதிகள் இடம்பெறும், பார்வை  மற்றும் சேர்க்கை பெறும் இடம் அல்லது கிரகங்களின் பலனை குறைக்கும் என்பது சோதிடம் தெரிந்த அனைவருக்கும் அறிந்த விஷயம் ஆகும்.

              இதேபோல சுப ஸ்தான அதிபதிகள்  (கேந்திர,கோண அதிபதிகள் ) இந்த மறைவிட ஸ்தானம் ஏற யோக பலன்கள் மட்டுப்படும் என்பது சோதிட ஞானம் பெற்ற அனைவருக்கும் தெரிந்த அடிப்படையான தகவல்கள் ஆகும்.

                  மறைவிட ஸ்தானங்களில் மூன்றாமிடமும்,பணிரெண்டாமிடமும் அதிகமாக கெடுதலை தரக்கூடிய மறைவிட ஸ்தானமாக கருதக்கூடாது என்பதையும் தங்களது நினைவிற்கு கொண்டு வருகிறேன்.

                            


           இதில் மூன்றாமிட ஸ்தானமானது ஒருவருக்கு கீர்த்தி,புகழ் ,கற்பனை உணர்வு மற்றும் வீரிய ஸ்தானமாக கருதப்படுவதால் மூன்றாமிட அதிபதி , மூன்றாமிடங்களில் இடம்பெறும் கிரகங்கள் மற்றும் மூன்றாமாதிபதி சேர்க்கை அல்லது பார்வை பெறும் கிரகங்ளையோ அல்லது ஸ்தானங்களையோ பாதிப்பதில்லை.மாறாக யோகபலன்களை தர தவறுவதில்லை.


             இதேபோல மறறொரு ஸ்தானமான பணிரெண்டாமிடமும் அதிக இன்னல்களை தரக்கூடிய ஸ்தானமாக கருதப்படவில்லை.பணிரெண்டாமிடம் விரய ஸ்தானமாக இருந்தாலும் அதேநேரத்தில் அயன,சயன ,படுக்கை,மோட்ஷ  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற யோகங்களையும் தரும் ஸ்தானம் என்பதால் இதன் திசை காலங்களில் இவை தொடர்பு பெறும் இடங்களையும் பெருமபாலும் அதிகமாக  பாதிப்பதில்லை.

                 ஆதலால் மறைவிட ஸ்தானங்களில் ஆறு மற்றும் எட்டாமிடத்தையும் தான் தொடர்பு பெறும் வீடுகள்,கிரகங்கள் ஆகிய இரண்டையும் பாதிக்க செய்கிறது.அதேபோல தமது வீடுகளில் இடம்பெறும் கிரகங்களின் ஸ்தான வலுவினை பாதித்து அவை தரும் பலன்களை தாமதப்படுத்துகிறது.

               உதாரணமாக ஏழாமிடம் களஸ்திர ஸ்தானம் என்பதால் ஏழாமிட அதிபதிகளுடன் இவ்விரு மறைவிட ஸ்தான அதிபதிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அல்லது ஏழாமிட அதிபதியானது இவ்விரு ஸ்தானம் ஏறி நின்றாலோ (6,8) திருமண தடையை உருவாக்கிவிடுகிறது அல்லது தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் தன்மையை குறைத்துவிடுகிறது.

                           


ஆறாமிடம்


         இவை அதிக இன்னல்களை தரும் மறைவிடஸ்தானமாக கருதப்படுவதன் காரணம் இவை பிணி,பீடை,ருண மற்றுன,ரோகங்களை தரக்கூடிய ஸ்தானம் ஆகும்.

             ஆதலால் இதன் திசை காலங்களில் பிணி மற்றும் எதிரிகளால் வரும் பேராபத்திலிருந்தி விலகிகொள்ள கடன்காரனாக மாறிக்கொள்வது நல்லது.

               இந்த ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் இடமபெறலாம்.ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றால் தரும் பலனை" சாதக அலங்காரம் "எனும் சோதிடநூலில் இடம்பெறும் பாடல் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

" பொருந்தும் சிங்கத்தைக் கண்டு புடைபடும் இடபம்போல
இருந்த சத்ருக்களெல்லாம் இரந்து கைகூப்பிநிற்பர்
திருந்திய குபேரன்போல செல்வம் உண்டாகப்பாரில்
வருந்திடாது இருப்பான் ஆறின் மருவுதீக்கோளினாலே "

விளக்கம்

           ஆறில் தீக்கோள்கள் இடம்பெற்றிருந்தால் பெரிய யானை தன்னிலும் சிறிய உருவமுடைய சிங்கத்தினை கண்டு வெகுண்டு ஓடுவதுபோல ,பகைவர்கள் யாவரும் சொல்வன கேட்டு வணங்கி நிற்பார்கள்.குபேரன்போல செல்வசெழிப்போடு வாழ்வான் என பாடல் விளக்குகிறது.

           ஆனால்  ஆறாமிட அதிபதி உச்சம்,ஆட்சி போன்ற பலங்களை பெற்று இருந்தால் கடன்,பிணி மற்றும் எதிர்ப்புகளை சாதகருக்கு ஜெனன காலத்திலிருந்து தரும் எனினும் தனது திசை காலங்களில் சற்று கூடுதலாக தரும் என்பது பொது விதி எனினும் முற்றிலும் இந்த ஆறாமிடம் மற்றும் அந்த ஸ்தான அதிபதிகள் கெடுதலை மட்டுமே தரும்  என  பலன் கூறிவிட முடியாது.

          இந்த ஆறாம் வீடு சுப கிரகங்களான குரு,புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு மறைவிடங்கள் ஆகும்.இக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும் பட்சத்தில் மறைவிடங்களில் நிற்கும்போது கேந்திராதிபத்திய தோஷம் நீங்கி சுப பலன்களை தருகிறது.

                      


எட்டாமிடம்

               இது ஒரு சாதகருக்கு வம்பு,சண்டை,வழக்கு ,சிறைசெல்லல் மற்றும் மரணம் போன்றவற்றை தரும் ஸ்தானம் என்ற வகையில் இந்த ஸ்தான அதிபதி பலம் பெற்று தனது திசை நடக்கும்போது மரணத்திற்கு நிகரான கெடுபலன்களை கொடுக்கும்.

           ஆயுள்ஸ்தானம் என்ற வகையில் பலம்பெற்று நிற்கும்போசு ஆயுள் பலப்படும்.மேலும் மறைபொருள் உண்மைகள் ஒருவருக்கு புலப்பட எட்டாமிடம் பலமடையவேண்டும்.
யோகபலனை எப்பொழுது தரும்
மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களில் பலப்படுவது யோகத்தை தரும்.

விபரீத ராஜயோகம்

             மறைவிட ஸ்தான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெறும்போது "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் மறைவிட ஸ்தான அதிபதிகள் மறைவிடங்களிலே பரிமாறிக்கொள்ளும்போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.

                உதாரணமாக ஆறுக்குடையவன் பணிரெண்டிலும்.பணிரெண்டுக்குடையவன் வேறு ஏதேனும் (3,6,8) மறைவிடங்களிலோ இடம்பெறுதல்.
இதன்பலனாக மாளிகை போன்ற வீடு அமையும்.இதற்கு சுக்கிரன் ,நான்காமிட அதிபதியின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.

                  பொதுவாக மறைவிட ஸ்தான அதிபதிகளுடன் ஐந்து மற்றும் ஒன்பதாம் இட அதிபதிகள் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் நலம் பயக்கும்.

  நன்றி.ஆராய்ச்சி தொடரும்....

(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)

  வாட்ஸ்அப் எண்
    97 151 89 647

   செல்
    97 151 89 647
       740 257 08 99

  அன்புடன்

                              


சோதிடர் ரவிச்சந்திரன்
M Sc,MA, BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி சோதிட ஆன்லைன் ஆலோசனை மையம்.,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

My website
AstroRavichandransevvai.blogspot.com

My email
masterastroravi@gmail. Com

.....,....................................
--------------------------------------------------------------------

No comments: