#சனிபகவான் தரும் கர்மயோகம்
--பதிவு - ( 4 )
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 97 )ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
சனிபகவான் ஆனவர் அலைச்சலையும் மற்றும்,சஞ்சலத்தையும் குடையாக கொண்டவன்,மெலிந்த தேகத்தை கொண்டவன் ,நீண்ட சரீரத்தை கொண்டவன்,நரம்பு தொடர்பான நோய்களை தருபவனாகவும் மற்றும் வாதரோகங்கள் கொண்டவனாகவும் உள்ளார்.
சூரியனின் மைந்தன் ஆவார்.இவர் சூரியனையும்,சந்திரனையும் மற்றும் செவ்வாயையும் பகையாக கொண்டவர் ஆதலால் சூரியனை சனிபகவான் சமசப்தமாக பார்த்தாலோ அல்லது சேர்ந்து நின்றாலோ தந்தை மற்றும் மகன் உறவுநிலை பாதிக்கப்படும்.மேலும் தந்தை சொல் பேச்சு கேட்காத பிள்ளையாகவோ அல்லது மகன் மீது பாசமில்லாத தந்தையாக திகழும்படி செய்கிறது.
சனி பகவான் அதன் பகைகிரகமான செவ்வாயோடு இணைந்து எந்த வீட்டில் இருக்கிறதோ அந்தவீட்டையும் மற்றும் இருவரும் இணைந்து சமசப்தமாக பார்க்கும் வீட்டையும் பாதிக்கிறது.
உதாரணமாக ஏழாம் வீட்டில் இருக்கும்போது தனக்கு வரும் மனைவி காமசஞ்சலம் உடையவளாகவும்,எதிலும் திருப்தி காணதவளாகவும் இருப்பாள்.
நான்காம் வீட்டில் இருக்கும்போது சாதகர் காமசுக பிரியராக்குகிறது.
இரண்டாமிட பார்வை சாதகரை பொய்யனாகவும்,வஞ்சக எண்ணமுடையவனாகவும் மாற்றுகிறது.இதேபோல சொல்லிக்கொண்டே போகலாம்.
இதேபோல மற்றொரு பகை கிரகமான சந்திரனோடு சேரும்போது ராசியை லக்கனமாக வைத்து பார்க்கும் போது ஏழாமிட சனி பார்வை திருமண தடையை உருவாக்குகிறார்.மேலும் மனதுக்காரகன் சந்திரனுடன் சனி சேரும்போது மனகுழப்பமுடையவனாகவும்,மறதி நிறைந்தவனாக மாற்றுகிறது.
சனிபகவான் ஆனவர் புதன்,சுக்கிரன் ,ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களை நண்பர்களாகவும் மற்றும் குருபகவானை சமமாகவும் கொண்டவர்.
சனிபகவான் குருபகவானோடு சமநோக்கு கொண்டிருந்தாலும் சமசப்தமாக குருபகவானை பார்க்க குருவின் இயல்புகளை மங்க செய்கிறார்.
சனிபகவானை அழைக்கும் வேறுபெயர்களாவன
இரவிமகன்,முடவன்,காரி,வளையக்கோள்,முதுமகன்,மந்தன்,கரியவன்,நீலன் மற்றும் மைம்மீன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.புறநானுற்று பாடல் ஒன்றில்"மைம்மீன் புகையினும் தூமந்தோன்றினும்"என்றும் பாடப்படுகிறது.இப்பாடலில்
சனியை மைம்மீன் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
சனியை மைம்மீன் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
கோள்களில் சனிபகவான் அலியாகவும்,மைநிறம் உடையவனாகவும்,அயல்மொழியை சேர்ந்தவனாகவும்,சங்கசாதியை கொண்டவனாகவும்,ராட்சத தன்மையுடையவனாகவும்,கீழ்நோக்குபார்வை உடையவனாகவும் உள்ளார்.
சனிபகவான் இருபத்து ஏழு நட்சத்திரங்களில் பூசம்,அனுசம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திர அதிபதியாகவும் கொண்டவன்.மொத்த நூற்றி இருபது தசை காலத்தில் பத்தொன்பது ஆண்டை தனது தசையாக கொண்டவன்.ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு வாசம் செய்பவனாகவும் உள்ளார்.
உடல் உறுப்புகளில் தொடையை தனது அங்கமாக கொண்டவன்.காகத்தை வாகனமாகவும்,இரத்தினத்தை யோகம் தரும் கல்லாகவும்,உலோகங்களில் இரும்பை தனது உலோகமாகவும்,வாயுபகவானை தனது பூதமாகவும்,கருங்குவளை மலரை தனது அபிஷேக மலராகவும் கொண்டவன்.
எமனை தனது கடவுளாகவும்,பிசாசு வேலையை தனது தொழிலாகவும்,குறுக்கு புத்தி கொண்டவனாகவும்,எள்ளை தனது தானியமாகவும்,மேற்கு திசை கொண்டவனாகவும்,கசப்பு சுவை கொண்டவனாகவும் ,அதிர்ஷ்ட எண் எட்டை கொண்டவனாக உள்ளான்.
பணிரெண்டு ராசிகளில் மகரம் மற்றும் கும்பத்தை ஆட்சி வீடாகவும்,இதில் கும்பவீடு மூலதிரிகோண வீடாகவும்,துலாத்தை உச்ச வீடாகவும் மற்றும் மேஷத்தை நீச வீடாகவும் கொண்டவன் ஆவார்.
கர்ம யோகம் தரும் சனிபகவானை பற்றி பரம்பொருள் எனக்கு காட்டிய வழியில்,என் சிற்றறிவுக்கு எட்டியவரை ஒரு இளம் சோதிட ஆர்வலர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளேன்.படித்து பயன்பெறுங்கள்.பகிர்ந்து மற்றவர் பயன்பட உதவுங்கள்.நீங்கள் இடும் விருப்பகுறி,பின்னூட்டம் வரிசையில் இருப்பதை விட மற்றவருக்கு பகிரும் வரிசையில் இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்.
நன்றி!நன்றி.!!
(தங்களுடைய சாதகங்களை முழுமையாக பணிரெண்டு கட்டங்களையும் ஆராய்ச்சி நோக்கில் செய்து பலனும் மற்றும் நீங்கள் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்களும்,பரிகார விவரங்களும் போன் வழியாகவே பலன் அளிக்கப்படும்.கட்டணம் உண்டு.கட்டணம் மற்றும் இதரவிவரங்களை பெற எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களை மெஸ்ஸேஸ் செய்யவும்)
97 151 89 647 க்கு பிறந்ததேதி,நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களை மெஸ்ஸேஸ் செய்யவும்)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc, MA. BEd.
சோதிட ஆராய்சியாளர் மற்றும் வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்ட்ர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc, MA. BEd.
சோதிட ஆராய்சியாளர் மற்றும் வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்ட்ர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
செல்
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
9715189647.
9715189647.
No comments:
Post a Comment