«« சனி பகவான் தரும் கர்மயோகம் »»
பதிவு- ( 2 )
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 94 )
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 94 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
நவகோள்களில் சனிபகவானுக்கு மட்டும் ஈஸ்வரன் பட்டம் இணைத்து சனீஸ்வரன் என அழைப்பதற்கான காரணத்தையும் அவை தரும் கர்மயோகத்தையும் மற்றும் #ஏழரைச்சனி என்றால் என்ன என்பதை பற்றியெல்லாம் சென்ற பதிவில் விரிவாக பார்த்தோம்.
ஒரு சிலர் ஏழரைச்சனி என என எல்லா சோதிடர்களும் பயமுறுத்துகிறார்கள் ஆனால் எனக்கு ஏழரை சனி நடக்கிறது எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என பல பேர் சொல்வதன் காரணம் ஏழரை சனி எல்லா ராசிகாரர்களுக்கும் அதிக துன்பம் தருவதில்லை .எனது அனுபவத்தில் சனிபகவானின் ஜென்ம விரோதியான செவ்வாய் பகவானின் ராசியான மேஷம்,விருட்சக ராசிகாரர்களுக்கும்,சூரியபகவானின் ராசியான சிம்ம ராசிக்குமே அதிக இன்னல்களை கொடுத்து பார்த்திருக்கின்றேன்.அதற்காக மற்ற ராசி காரர்களுக்கு துன்பத்தை தராது என சொல்லவில்லை,அவ்வாறு துன்பத்தை தராமல் இந்த ஏழரை சனி காலத்தில் நல்லதாக நடந்துகொண்டு இருந்தாலும் ஒரு ஏழரை நாழிகையாவது ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு செல்லும்.அவ்வாறு தரும் நஷ்டம் பல ஆண்டு கஷ்டப்பட்டு சேர்த்த அனைத்தையுமே இழக்கும் அளவிற்கு செய்துவிட்டுபோகும்.
#அட்டமசனி
ஒருவருடைய ராசிக்கு எட்டாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதையே அஷ்டமசனி என்கிறோம்.
இது இரண்டரை ஆண்டுகள் எனினும் ஒருவரை வம்பு,வழக்கு ,பிரச்சினை ,ஆடு,மாடு விரயம்,விவசாயம் மற்றும் செய்யும் தொழிலில் நட்டம் ,வாகனவிபத்து ,உறவுகளில் சிக்கல்கள் மற்றும் ஆயுளுக்கு கண்டம் என பலவிதமான இன்னல்களை ஒரு மனிதனுக்கு தந்து பெரும் துன்பத்திற்கு ஆளாக்கும்.
#கண்டசனி
ஒருவருடைய ராசிக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதையே கண்டசனி என்பர்.
"கண்டசனி தண்ட செலவினை தரும் " என்பதால் இதுபோன்ற நேரங்களில் வீடு ,இடம் வாங்குதல் மற்றும் திருமணம் செய்தல் இதுபோன்ற சுப செலவுகளை இக்காலத்தில் செய்து விரய செலவிலிருந்து தப்பிக்கலாம்.
"கண்டசனி தண்ட செலவினை தரும் " என்பதால் இதுபோன்ற நேரங்களில் வீடு ,இடம் வாங்குதல் மற்றும் திருமணம் செய்தல் இதுபோன்ற சுப செலவுகளை இக்காலத்தில் செய்து விரய செலவிலிருந்து தப்பிக்கலாம்.
இதுவும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே.
#அர்த்தஷ்டமசனி
ஒருவருடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதை அர்த்தஸ்டம சனி என்கிறோம்.
இதன் காலங்களில் ஒருவருடைய தன் சுகம் ,வண்டி வாகன சுகம் ,தாய் சுகம் மற்றும் வீடுசுகம் போன்றவற்றில் பாதிப்பு உண்டாகலாம்.
மேற்கண்ட வகையில் சனிபகவானது பணிரெண்டு ராசிகளில் உண்டாகும் சுழற்சியானது மிகவும் முக்கியமானதாக மற்றும் மனிதவாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்குபவராகவும் ,துன்பங்களை தந்து அதன்மூலம் ஞானத்தை வழங்கி உலகியலை நடத்துபவராகவும் உள்ளார்.
எனவே ஏழரை சனி,அஷ்டம சனி,கண்டசனி மற்றும் அர்த்தஸ்டம சனி ஆகியவற்றில் ஏழரை சனி என்பதே ஒரு மன்னாதி மன்னனையும் மண்ணை கவ்வவைக்கும்.
#சனிபகவான் தரும் தொல்லைகளில் இருந்து விடுபட
வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து விநாயகர் கோவில் சென்று கோவில் வாசலில் பச்சரிசி மாவினால் கோலமிட்டு விளக்கு தீபம் ஏற்றி வரவேண்டும்.அந்த பச்சரியை எறும்புகள் எடுத்துக்கொண்டு போவதால் சனிதரும் இன்னல்கள் குறையும்.பிறகு வீட்டிற்கு விரதம் செய்து காகத்திற்கு உணவு வைக்கவேண்டும்.அதனை காகம் வந்து சாப்பிட்டு செல்லவேண்டும்.காகமானது சனிபகவானின் வாகனமாதலால் அதனால் தரும் இனனல்களை குறையும்.
சிவஸ்தலங்களில் உள்ள நவகிரகங்களை சுற்றிவந்து அம்பாளுக்கும் ,சிவனுக்கும் அர்ச்சனை செயதல்.
திருநள்ளாறு சென்று ஆயுள்ஸ்தானம் செய்து சனிபகவானை வழிபடல்.
ஆதரவற்றோர்கள்,ஊனமுற்றோர்கள் மற்றும் கல்விகற்க வசதியில்லாதவர்களுக்கு பொருளுதவி செய்தல்.
துர்கை வழிபாடு செய்துவரல்.
இயலாதவர்களுக்கு வஸ்திரம் தானம் செய்தல்.குறிப்பாக கருப்பு வஸ்திரம் தானம் செய்தல்.
மேற்கண்ட வழிபாடுகள் மூலம் ஏழரை சனி ,அட்டம சனி ....போன்ற காலங்களில் கஷ்டங்களை முழுமையாக குறைக்காவிட்டாலும் அந்த கஷ்டங்களை தாங்கிகொள்ளும் மற்றும் எதிர்கொள்ளும் மனநிலையை இறைவனால் வழங்கப்படும்.
.
.
தொடரும்..
(தங்களது சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் போன்றவற்றை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன்வழியாக தொடர்பு கொண்டு பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.உங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்தால் போதும்.ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளளர்
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
செல்
97 151 89 647
740 257 08 99
whats up no ; 9715189647
செல்
97 151 89 647
740 257 08 99
whats up no ; 9715189647
My Email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
No comments:
Post a Comment