கிரக பலமா ?
தெய்வ பலமா ?
கிரகங்கள் படுத்தும் பாடு-( 153 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
ஒருவர் நல்லவராக ,தான தர்ம சிந்தனை மிக்கவராகவும்,கடவுள் மீது அதீத பக்தி கொணடவராகவும் ,தனது கடமைகளை நேரிய வழியில் செய்து கொண்டிருப்பவராக இருந்தாலும் அவரையும் கிரகங்கள் விட்டுவிடுவதில்லை."கடவுளே இவர் எவ்வளவு நல்லவர் ? இவரைபோய் இப்படி கஷ்டபடுத்தி பார்க்கிறியே ?"என பலர் வினா எழுப்பி வருத்தப்படுவதுண்டு.
எனக்குள்ளும் இது போன்ற வினா ? எழுந்தது உண்டு.இதேபோல சிலர் நல்ல திறமைசாலியாக ,அறிவாளியாக ,நல்ல மனம் படைத்தவர்களாக
மற்றும் நன்கு கற்றவராக இருந்தும் அவர்ளது திறமைகளுக்கும்,தகுதிக்கும். ஏற்ற அரசு வேலையோ அல்லது ஏனைய பணியோ கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்க அதேநேரத்தில் அந்த வேலைக்கே சரியான திறமையும்,தகுதியும் இல்லாத பலருக்கு அப்பணியை தந்து சற்று தலைக்கணமாக நடக்க வைப்பதோடு சிலநேரங்களில் அவர்களுக்கு கீழேயே திறமை மிகுந்தவர்களை வேலை பார்க்கும் சூழலை உருவாக்கிவிடுகிறான்.
மற்றும் நன்கு கற்றவராக இருந்தும் அவர்ளது திறமைகளுக்கும்,தகுதிக்கும். ஏற்ற அரசு வேலையோ அல்லது ஏனைய பணியோ கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்க அதேநேரத்தில் அந்த வேலைக்கே சரியான திறமையும்,தகுதியும் இல்லாத பலருக்கு அப்பணியை தந்து சற்று தலைக்கணமாக நடக்க வைப்பதோடு சிலநேரங்களில் அவர்களுக்கு கீழேயே திறமை மிகுந்தவர்களை வேலை பார்க்கும் சூழலை உருவாக்கிவிடுகிறான்.
இதுபோன்ற முரணான செயலுக்கு கடவுள்தானே காரணமாக இருக்கும் என நானும் ஆரம்ப காலங்களில் வருத்தபட்டது உண்டு.இவை அனைத்திற்கும் அவர்களது கிரகபலன்களே காரணமாக அமைகிறது.தெய்வபலத்தால் கிரக பலன்களின் இன்னல்களை ஒரளவு குறைக்கலாமே தவிர முற்றிலும் மாற்றி அமைக்க இயலாது.
இறைசிந்தனையால் கஷ்டங்களை தாங்ககூடிய மனோபலத்தை தரமுடியும்.ஆனால் கிரகபலனை முற்றிலும் மாற்றி அமைக்க இயலாது. இதனால் இறைவனால் மாற்றி அமைக்கவே முடியாது என வாதத்திற்கும் நான் வரவில்லை.இது இயற்கையின் நியதி.
அப்ப ,கிரகங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை ? என கேள்வி கேட்க தோன்றுகிறது அல்லவா ".இதற்கான காரணத்தையும் ஆராய்ந்து பார்த்தால் "ஒரு நல்லவர் இப்பிறப்பில் படக்கூடிய நம்மால் ஏற்றுக்கொள்ளவே இயலாத இன்னல்களுக்கு காரணம் அவரது பூர்வ புண்ணிய பலனே "காரணமாக அமைகிறது.இதனைதான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "ஊழ்வினை வந்து உறுத்துட்டும் "என்கிறார்.
எனவே இப்பிறப்பில் ஒரு நல்லவர் பெறும் இன்னல்களுக்கும்,கெட்டவர் அல்லது திறமையற்றவர் பெறும் வெற்றிக்கும் அல்லது மகிழ்விற்கும் பூர்வ ஜென்ம பயனே ஆகும்.இதனை அறிய நமது சாதக கட்டத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம் மூலம் அறியலாம்.
ஆக "தீதும்நன்றும் பிறர்தரவாரா " என்ற புறநானுற்று கனியன் பூங்குன்றனார் கூற்றுப்படி ஒரு நல்வர் இப்பிறப்பில் கஷ்டப்படுவதற்குரிய கிரகநிலை அவரது சாதக கட்டத்தில் அமைவதற்கு காரணமும் அவர் முற்பிறப்பில் அவர் செய்த கர்ம வினையின் தொடர்ச்சியே ஆகும்..ஆதலால் கிரகங்களை வருத்தபட்டும் புண்ணியமில்லை.
கர்மபலனின் விளைவே கோள்கள் நடத்தும் கோளாட்டம் ஆகும்.எனவே தெய்வ பலமும் கிரகபலத்திற்கு முன் நின்று சில நேரங்களில் போராடாமல் விட்டுவிறகிறது.ஒருவர் முற்பிறப்பில் செய்த தீயவினைகளை கண்டறிந்து அதற்கான சாந்தி பூஜை புணர்ஸ்காரங்கள் செய்ய அவ்வினையின் பலன் தொடராமல் தற்காத்து கொள்ளலாம்.
(தங்களது சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன்வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.)
M.SC,MA,BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My wehsite.click hear
AstroRavichandransevvai.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment