Thursday, 10 August 2017

ராகு பகவான் வழங்கும் அற்புத பலன்கள்

      ராகு பகவான் வழங்கும் அற்புத பலன்கள்

                                                                     
கிரகங்கள் படுத்தும் பாடு - (160)

செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன்  துணை!

     இன்றைய காலகட்டத்தில் எல்லாமே கணினிமயமாக வந்துவிட்டது.கணினி உதவியில்லாமல் எந்த துறையும் செயல்பட இயலாத நிலை வந்துவிட்ட காலகட்டத்தில் நாம் வசிக்கிறோம்.எனவே இந்த கணினி சார்ந்த அறிவினை ஒரு நபர் பெறுவதற்கு கிரகங்களில் ராகு பகவானின் ஆசி ஒருவருக்கு தேவையாய் இருக்கிறது.
  பலமான ராகு பகவான் ஒருவரது சாதக கட்டத்தில்  தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தாலோ அல்லது பத்தாம் அதிபதியானது ராகுவின் நட்சத்திர காலில் நின்றாலோ அவருக்கு கணினி சார்ந்த அறிவில் சிறந்து விளங்குவதோடு அவை சார்ந்த துறையில் பெரும் தனம் ஈட்டுவான்.

ஒருவர் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட ராகுபகவான் உதவி புரிகிறார்.ஒரு சிலர் சுடுகாட்டு காளியை  வழிபாட்டு ஏவல்,பில்லி மற்றும் சூனியம் போன்ற செயல்பாடுகள் மூலமாக பொருள் ஈட்டுவார்.
ராகுபகவான் வாக்குஸ்தானத்தோடு தொடர்பு கொள்ள சிறந்த பேச்சாளராக திகழ்வர்.அவரது பேச்சில் ஒருவித தந்திரத்தனம் மேலோங்கி நிற்கும்.

ராகு பகவானை பலமான அமைப்பாக பெற்று வாக்கு மற்றும் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொள்ள கிரிமினல் வழக்கறிஞராக புகழ் பெற்று திகழ்வார்.

ஒரு சிலர் தலைசிறந்த பெயரும்-புகழும் பெற்ற அரசியல்வாதியாக திகழ பத்தாமிட ராகுபகவான் உதவி புரிவார்.
ஒரு சிலர் வெளிநாடுகள் சென்று பெரும் பணம் ஈட்ட விரய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் உதவி புரிவார்.

ஒரு சிலர் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகவும்,எலும்புமுறிவு நிபுணராகவும் திகழ்வதற்கு தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்ட செவ்வாய் பகவான் ராகுவின் நட்சத்திர சாரத்தில் திகழ்வார்கள்.
வலிமையான ராகுபகவானை தனது சாதகத்தில் பெற்றவர்கள் எதிரியை வெல்லும் ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வார்.அதிலும் குறிப்பாக ஆறாம் இடத்தில் பலம்பெற்று திகழ சிங்கத்தை கண்ட மான்போல பயந்து ஓடுவார்.

நன்றி!
(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்.)
  தொடர்பு கொள்ள
  வாட்ஸ்அப் எண்
  97 151 89 647
    செல்
  97 151 80 647
    740 257 08 99
  அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc ,MA, BEd,
சோதிட ஆராய்ச்சியாளர்,
ஓம்சக்தி ஆன்லைன் சோதிட ஆலோசனையாளர்,
கறம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
My Email
   masterastroravi
@gmail.com.
My website
AstroRavicha
ndransevvai.blogspot.com

No comments: